(Reading time: 6 - 11 minutes)

சிறுகதை - முன்யோசனை - K.சௌந்தர்

சுவர் கடிகாரம் பத்து மணி அடித்து ஓய்ந்தது.

வெளியில் பைக்  வந்து நிற்கும் சத்தம் கேட்டது. டிவியை  ஆப் செய்துவிட்டுத் திரும்பினாள் யாமினி. காலிங் பெல் ஒலிப்பதற்குள் கதவைத் திறந்து வெளியே வந்தாள். வெளியே அவள் நினைத்தது போலவே கணவன் சுரேந்தர் ஷூவைக்  கழற்றியபடி ஸிட் அவுட்டில் இருந்த சேரில் அமர்ந்திருந்தான்.

அவளைப் பார்த்ததும் "ஹாய் யாம் , இந்த நேரத்திலும் இவ்வளோ அழகாய் இருக்க உன்னால்தான் முடியும்" என்றான்.

“நேரத்தைப் பத்தி  உங்களுக்கு ஞாபகம் இருப்பது ரொம்ப சந்தோஷம், ஆனா காலையில நா சொன்னதுதான் மறந்து போச்சு இல்லே?” என்றாள் கோபத்துடன்.

“சாரிடா யாமி, எனக்கு ஞாபகம் இல்லாமல் இல்லை. ஆனா அந்த நேரத்துல ஒரு முக்கியமான பிஸினாஸ் டீல் பேச வேண்டியததாயிடுச்சி.  இப்போ அதனால ஒரு லட்சம் லாபம் தெரியுமா. அந்த பணத்தை அப்பிடியே உன் பேர்ல டெப்பாசிட் பண்ணிடறேன்”என்றான் சுரேந்தர்

“ஏன் இப்பிடி பேசறீங்க சுரேன் , எனக்கு பணம் எப்பவும் முக்கியமில்லை. உங்க கூட ஒரு சினிமாக்கு போகலாம்னுதான் இன்னிக்கு எங்க ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டு நாலு மணியிலேர்ந்து காத்திருக்கேன். நீங்க பத்து மணிக்கு வர்றீங்க ,இனிமே உங்க கூட நா  எங்கேயும் வரப் போறதில்லை” என்று கூறிவிட்டு மட மட வென்று உள்ளே சென்றுவிட்டாள் யாமினி.

அவளைப் புன்னகையுடன் பின் தொடர்தான் சுரேந்தர்

" ஹீம் அப்போ அவ்ளோதானா..இன்னிக்கு சாப்பாட்டை நான் வெளியிலேயே சாப்பிட்டிருக்கணும். பாவம் பொண்டாட்டி வீட்டிலே சாப்பிடாம இருக்கப் போறாளோன்னு  பார்சல் வாங்கிக்கிட்டு வந்தது தப்பா போச்சு” என்று அவன் குறை பட்டுக்கொண்டே டைனிங்டேபிளில் அவளுக்குப்  பிடித்த நூடுல்ஸும் சூப்பும் எடுத்து வைத்தான்.

"வாடா சாப்பிடலாம்..எனக்கு சரியான பசி" என்றான் .

“சாரி சுரேன். நீங்க முதல்ல சாப்பிடுங்க அப்புறம் மத்தது பேசிக்கலாம்” என்றபடி அவனுக்கு பரிமாறினாள் யாமினி.  

“பா த்தியா...நா பிஸினஸ் பண்றதால தானே இப்படி நினைச்ச நேரத்துல நினைச்ச பொருள் வாங்க முடியுது" என்றான் கேலியாக.

“சுரேன் நீங்க எப்பவுமே திருந்த மாட்டீங்களா...நம்மளைப் பாத்தா லவ் மேரேஜ் பண்ண  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.