(Reading time: 10 - 19 minutes)

சிறுகதை - நமக்குள்ளே இருக்கட்டும் - ரவை

விண்ணிலிருந்து கீழே குனிந்து பூலோகத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர், பரமசிவனும் பார்வதியும்!

 சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், அன்று ஆருத்ரா தரிசனம்! கூட்டமோ கூட்டம்!

பக்தி பரவசத்தில் மக்கள்! தலைக்கு மேலே கைகளை உயர்த்தி, 'ஹரஹர மகாதேவா!" குரல் எழுப்பி, ஏழை, பணக்காரன், மேல்சாதி, கீழ்சாதி வேற்றுமையின்றி, கண்களை மூடி இறைவனை பிரார்த்தித்தனர்.

 பரமசிவனுக்கு பரம சந்தோஷம்! ஓரக்கண்ணால், அவன் தன் மனைவி பார்வதியை பார்த்தான்!

 அவள் முகத்திலும் ஆனந்தம் பொங்கியிருந்தது. ஆனால், அவள் வேறு திசையில் பார்த்திருந்தாள்!

 அந்த திசைக்கு, பரமசிவன் தன் பார்வையை திருப்பினான்.

 மதுரையம்பதி மீனாட்சி கோவிலில், பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்!

 எல்லோர் நெற்றியிலும் குங்கும திலகம்! 'அம்மா! தாயே! உன் கருணையே கருணை! எங்கள் வாழ்க்கை நீ போட்ட பிச்சை! ஈரேழு பிறவியிலும் உனை மறவாமல் துதிப்போம்.' என ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்தனர்!

 பார்வதியும் ஓரக்கண்ணால் சிவனை பார்த்தாள். அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்!

அவன் முகத்தில் பூரிப்பு!

 " என்ன அப்படி, புதுசா என்னை பார்ப்பதுபோல பார்க்கிறீங்க? முகமெல்லாம் மலர்ச்சி!"

 "தேவி! பக்தர்கள் உன்னை தரிசித்து ஆனந்தப்படுகிற அதே அளவுக்கு, உனக்கும் உன் பக்தர்களை பார்த்ததும் பரவசம்! தாயும் சேயும் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்வதுபோல!"

 பார்வதி வெட்கத்தில் தலை குனிந்து, " ஆமாம், ஈசா! என் மக்களை பார்த்ததும் நான் என்னையே மறந்துவிடுகிறேன். அவர்களுக்குத்தான் என்மீது எவ்வளவு பாசம்!"

 பரமசிவன் புன்னகை செய்தான்.

 " ஈசா! உங்கள் புன்னகையின் பொருள்?"

 " தேவி! நான் உனக்கு இப்போது ஒரு காட்சியை காட்டுகிறேன், அதைப் பார்!"

 இருவரும் அந்தக் காட்சியை பார்த்தனர்.

 ஒரு கன்னிப்பெண், தன் வீட்டில், ஆளுயர நிலைக்கண்ணாடியின்முன் நின்று, கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தின் பிம்பத்தை இப்படியும் அப்படியும், பக்கவாட்டிலும், பார்த்து மகிழ்ந்து போவதோடு, 'என்னைப் போல ஒரு அழகி இந்த பூமியில் வேறு எவருமேயில்லை!' என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு சினிமா பாட்டை பாடி மகிழ்ந்து போகிறாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.