(Reading time: 10 - 19 minutes)

 " ஏங்க! அவனை என்ன, ஏதுன்னு கூட கேட்காமல், அவனுக்கு பணத்தை கொடுத்து அனுப்பறீங்களே, நீங்க ஒரு பொறுப்புள்ள தகப்பனா? தினமும் இப்படி பணம் வாங்கிண்டு போறானே, நீங்க என்ன, டாடா பிர்லாவா? மாத சம்பளம் வாங்கிறவர்தானே! அவன் எங்கே போறானோ, என்ன செய்கிறானோ? இந்த மெட்ராஸிலே சின்னப் பசங்களை கெடுத்து குட்டிச் சுவராக்க, எத்தனையோ வாய்ப்புகள்! நமக்கு இருக்கிறதோ, ஒரே பிள்ளை! நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து, எனக்கு ஹார்ட் அட்டாக் வரவழைச்சிடுவீங்க, சீக்கிரத்திலே........."

 பொரிந்து தள்ளிய மனைவியை பார்த்து கணவன் சிரித்துக் கொண்டே தலை குனிந்தான், எதுவும் பேசாமல்!

 " இப்படி இடிச்சபுளியா வாயை மூடிக்கிட்டு இருந்தால், நான் என்ன நினைக்கிறது? நான் செத்தாலும், இப்படித்தான் சிரிச்சிக்கிட்டே இருப்பீங்க போலிருக்கு!"

 என்று பொரிந்துவிட்டு சமையலறை திரும்பிய மனைவியை ஓடிப்போய் அழைத்து, அமரவைத்த கணவன், அவளுக்கு முதலில் குடிக்க தண்ணீர் கொடுத்தான்.

 பிறகு அவளருகில் அமர்ந்து, அவளை அணைத்துக்கொண்டு, மெதுவாக ஆனால் உறுதியாகப் பேசினான்.

 "மரகதம்! சில உண்மைகள் உனக்கு மறந்துபோகிறது, அடிக்கடி! நினைவுபடுத்துகிறேன்!

 நீ ஏன் இப்படி பயப்படறே, நான் ஏன் இப்படி சிரிக்கிறேன், நம்ம பிள்ளை ஏன் இப்படி நடந்துக்கிறான்...இவைகளில்எதற்காவது நம்மிடம் பதில் உண்டா? ஏன் இல்லைன்னா, அவைகளை செய்வது நாமில்லை, நம்மை படைத்தவன்!

 அவனும் காரணமில்லாம, எதையும் ஒருநாளும் செய்யமாட்டான். ஆனா, அந்தக் காரணத்தை நம்மாலே தெரிஞ்சிக்க முடியாது! ஏன்னா, நமது அறிவுக்கு அந்த சக்தி கிடையாது!

 உதாரணமா, நம்ம உடலுக்குள்ளே நடக்கிறதையே தெரிஞ்சிக்க முடியாத குறைந்தபட்ச அறிவைத்தான் கொடுத்திருக்கான், அவன்!

 சிறு குழந்தைக்கு, அப்பா அம்மா தனக்கு செய்கிற எதற்கும் காரணம் தெரிஞ்சிக்கமுடியாதோ, அப்படித்தான், கடவுளுக்கு மனிதர்கள் எல்லோருமே குழந்தைகள்தான்! அவன் செய்கைகளுக்கு, நம்மால் காரணம் தெரிஞ்சிக்கிற அளவுக்கு நம்ம அறிவு வளரலை!

 ஆனால், எந்தக் குழந்தைக்கு சின்ன வயசிலே காரணம் தெரிஞ்சிக்க முடியாமல் இருந்ததோ, அதே குழந்தை பெரியவனா வளர்ந்ததும், தெரிஞ்சிக்க முடிகிற மாதிரி, நாமும் இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் அவன் செய்கைகளுக்கு காரணம் புரியும்!

 ஒரு உண்மையை மறக்கக்கூடாது!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.