(Reading time: 10 - 19 minutes)

 அதனால், ஒவ்வொரு மனிதனுக்குள் இருந்து, அந்த மனிதனின் செயல்களை, டைரக்டராகிய அவன் ஒழுங்குபடுத்துகிறான், உலக நன்மைக்காக!

 அப்படி செய்யும்போது, நல்லது கெட்டதாகவும், கெட்டது நல்லதுபோலவும் சில சமயங்களில் தோன்றும், மனிதனின் சிற்றறிவினால்!

 'நல்லது, தீயது நாமறியோம், அன்னை நல்லதை நாட்டுக, தீயதை ஓட்டுக' என பாரதி பாடினான்.

 அதனாலே, மரகதம்! ரிலாக்ஸ்! பதட்டப்படாதே! நம்பணும்! நல்லதே நடக்கும்னு நம்பணும், டாக்டர், நோயாளிக்கு ஊசி குத்தினாலோ, அறுவை சிகிச்சை செய்தாலோ, அந்த நோயாளிக்கு வலியை தந்தாலும், இறுதியில் அவன் நன்மைக்கே என்பதை புரிந்து கொள்கிறான்.

 நம்ம வாழ்க்கையையே கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், துவக்கத்திலே கெடுதலாக தோன்றியவை பின்பு நல்லவைகளாக இருப்பதை!

 மரகதம்! நான் சொல்வது, இந்த நிமிடம் உனக்கு சரியெனப் படுவதையே, இந்த குரங்கு மனசு குதர்க்கம் பேசி, உன்னை வாட்டி வதைக்கும்! அதை தடுக்க, ஒரு சுலபமான வழியை பயிற்சி பண்ணு!

 உன் மனசை, செயல்படவிடாமல், விரட்டிவிடு! அதனாலே ஒரு பாதிப்பும் இருக்காது! காரணம், அந்த 'அவன்' தான் உனக்குள்ளே இருந்து உன்னை காப்பாற்றுகிறானே!

 கொஞ்சம் கஷ்டமான பயிற்சிதான், ஆனால் அவசியமான பயிற்சி!

 வாசலில் இருந்து காலிங் பெல் ஒலிக்கவே, பேச்சு இத்துடன் அறுபட்டது.

 உள்ளே வந்தான், மகன்!

 அவன் கையில் ஒரு பேக்கட்!

 தந்தையின் காதில் ஏதோ கிசுகிசுத்தான். இருவர் முகத்திலும் ஆனந்தம்!

 இதை கவனித்த மரகதம், அங்கு வந்தாள்.

 அவள் கையில் அந்த பேக்கட்டை தந்தையும் மகனும் கொடுத்து, "ஹேப்பி பர்த்டே, பேபி!" என இருவரும் அவளை முத்தமிட்டனர், ஆளுக்கொரு கன்னத்தில்!

 ஒரு வினாடியில், நிலமையில் தலைகீழ் மாறுதல்!

 ஆனந்தம் தாண்டவமாடியது, அங்கே!

 பார்வதி, தன் கணவனை, பூரிப்புடன் பார்த்தாள்! அவனும் அவளைப் பார்த்து சிரித்தான்!

 " ஈசா! எனக்கொரு சின்ன ஆசை! இப்போது, அவனை, மறுபடியும் அந்த தந்தையை, சற்று கடினமான சோதனைக்கு ஆளாக்கி சோதியுங்கள், அவன் அதில் வெற்றி பெறுகிறானா என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.