பாப்பாவும் அவள் அம்மாவும் சிரித்தார்கள்.
" ஏன் சிரிக்கிறீங்க?"
" எம்.ஏ.படிச்ச அண்ணனுக்கே இன்னும் வேலை கிடைக்கலே, வெறும் பி.ஏ. படிச்ச எனக்கு யார் வேலை தருவாங்க? அதுவும் ஒரு பெண்ணுக்கு?"
" அப்படி சொல்லிடாதீங்க! பெண்களுக்கென்று சில தொழில்கள் இருக்கு, பி.ஏ., எம்.ஏ. படிப்புக்கும் அந்தமாதிரி வேலைகளுக்கும் சம்பந்தமேயில்லை. அங்கே தேவை உழைப்பு, பயிற்சி, தேர்ச்சி! அந்த வேலைக்கு தேவையான ட்ரெயினிங் அவங்களே முதலில் கொடுப்பாங்க......."
" அண்ணா! நீங்களே அப்படி ஒரு வேலை எனக்கு ஏற்பாடு செய்யுங்களேன்..."
" அம்மா! நீங்க என்ன சொல்றீங்க?"
" நீங்க......"
" அம்மா! முதல்லே, என்னை நீங்க, வாங்க, போங்கன்னு கூப்பிடறதை நிறுத்துங்க! என்னை உங்க மூத்த பிள்ளையா பாருங்க! ரத்தினம் என் தம்பி! பாப்பா என் அருமை தங்கச்சி! என்னை நீங்க 'உமா'ன்னு என் பெயரைச் சொல்லி கூப்பிடுங்க!"
" கடவுளே! உன் கருணையே கருணை! என் கணவர் போனபிறகு, எங்க மூணு பேரையும் பாதுகாப்பும் இடமும் தந்து ஆதரிக்கிறவரை எப்படி நான் பெயர் சொல்லி கூப்பிடுவேன்!"
" கூப்பிடறதுக்கு தாம்மா, பெயர் வைக்கிறாங்க!"
உமாவும் பாப்பா, ரத்தினம் மூவரும் சிரிக்க, கோதை வெட்கத்தில் தலை குனிந்தாள்.
" அம்மா! உங்களை, என்னை, ஈ, எறும்பை, இந்த உலகத்திலுள்ள சகல ஜீவராசிகளையும் ஆதரவு தந்து காப்பாத்தறது, அதோ அந்தப் படத்திலே சிரிச்சிண்டு வேடிக்கை பார்க்கிறானே, அவன்தான்!
அம்மா! உங்களுக்கு கணவன் மறைந்த அதே காலகட்டத்திலேதான், நான் என் மனைவி கிருபாவை இழந்தேன்! எனக்கு இப்ப எல்லாமே நீங்க மூணுபேர்தான்!
ஒரு ரகசியத்தை சொல்றேன், உங்களை முதல்முறை பார்த்தபோது, ஒருகணம், ஷாக் ஆயிட்டேன், தோற்றத்திலே நீங்க என்னைப் பெற்ற அம்மாவைப் போலவே இருக்கீங்க! அப்பவே தீர்மானிச்சிட்டேன், நீங்க வேற யாருமில்லை, எங்கம்மா தான்! மறுபிறவி எடுத்து வந்திருக்கீங்க!
இறைவன் கொடுத்த வரம், நீங்க! தாராளமா சகஜமா என்னை நீங்க பெயர் சொல்லியே கூப்பிடலாம்.