(Reading time: 5 - 9 minutes)

சிறுகதை - போதை - பத்மகுமாரி

போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்த பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான் ‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு. அநியாயம் முத்தி போச்சுன்னா அவதாரம் எடுப்பேனு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்த பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டு சிரிப்போடு செவி மடுத்து கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்த சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது.

'ஏன் அப்படி சிரிக்ரீங்க??’

'ஒன்னுமில்ல'

'சரி விடுங்க. இந்த 40 வருஷமா உங்களோட குடித்தனம் நடத்துறேன். நீங்க மறைச்சிட்டா நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியாதாக்கும்'

அதற்கும் ரங்கநாதனின் அசட்டு சிரிப்பு தொடரவே ஏதோ முனுமுனுத்த படியே முற்றத்தில் இருந்து நகர்ந்தாள் மங்கலம். அவர் முற்றத்தின் கூடத்தில் இருந்த அந்த ஈசிசேரில் கண்மூடி அந்நாந்து சாய்ந்து கொண்டார்.

காதல் முற்றி போய் தவறான ஒருத்தனுடன் ஓட்டம் பிடித்து இன்று ஒற்றை மகனோடு தன் பக்கத்து தெருவிலேயே சீரழிந்து கொண்டிருக்கும் தன் மகளின் முகம் ரங்கநாதனின் மூடிய விழிகளுக்குள் நிமிடத்திற்கு இருமுறை வந்து மறைந்து கொண்டிருந்தது. அவரை அறியாமலையே அவர் விழி கட்டிய நீர் விழியின் விளிம்புகள் கடந்து வெளி வந்து கொண்டிருந்தது.

'என்ன காலங்காத்தால அந்த ஓடுகாலி கழுத நினைப்பு வந்திடுச்சு போல இன்னிக்கு.’ மங்கலத்தின் இந்த அதட்டல் வசனம் கேட்டு ரங்கநாதனின் நீர் கட்டிய விழிகள் படக்கென திறந்தது.

'ஆமா, உன்னை மாதிரி என்னால கல்லு மாதிரி இருக்க முடியல. என் தோள்ல போட்டு வளர்த்தவ இப்படி சீரழியுறது தெரிஞ்சும், எதும் பண்ண முடியாம கல்லாட்டம் உயிரோட இருக்கேனே.’என்று முடிப்பதற்குள் சிந்தாமல் அவள் விழிகளுக்குள் இவ்வளவு நேரம் ததும்பி நின்ற மீதி நீரும் முத்தென திரண்டு அவர் கண்ணங்களில் வழிந்தோடியது.

ரொம்ப அலட்டிக்காதீங்க. நானும் தான் அந்த கழுத மேல உயிரையே வச்சிருந்தே. அந்த பித்து பிடிச்சவ அதையெல்லாம் புரிஞ்சிக்காம எவனோ ஊரு பேரு தெரியாதவன் தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.