(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - நான் சிரித்தால் தீபாவளி! - ரவை

நீங்க நினைக்கிறது, கரெக்ட்தான்!

'நாயகன்' சினிமாவிலே ஒரு விபசார விடுதியிலே அங்கிருக்கிற இளம் குருத்துகள் அறிமுக காட்சியிலே கூடி, ஆடி, பாடுகின்ற பாடல்,

"நான் சிரித்தால் தீபாவளி!

நாளும் இங்கே ஏகாதசி!"

 நாட்டு மக்கள் பரவலாக நினைப்பதுபோல், அத்தகைய விடுதிகள் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்து, பணம் மலையாக குவிந்து, அங்கிருப்பவர்கள் மூன்று வேளையும் வயிறு புடைக்க சாப்பிட்டு ஆடம்பரமாக ஆடையணிந்து மினுமினுக்கிய காலம் மலையேறிவிட்டது!

 காரணம், மக்கள் கெட்ட வழியிலிருந்து திருந்திவிட்டார்கள், என்பதல்ல;

 பின் வேறென்ன?

 அத்தகைய ஒரு விடுதியின் காப்பாளர் மேனகா மேடம் சொல்வதை கேளுங்கள்:

 " அடப் பாவிங்களா! இப்படி எங்க பொழப்புலே மண்ணை வாரி கொட்டிட்டீங்களேடா! நாங்களாவது தேடி வரவங்களுக்கு மட்டும்தான் விருந்து படைச்சோம்! செய்கிற தப்புக்கு பிற்காலத்திலே தண்டனையா வியாதியிலே படுத்து பிச்சையெடுத்து பிளாட்பாரத்திலே கிடந்து செத்தோம்!

 ஆனா எங்க பொழப்பை கெடுக்கவந்தவங்க யார் யார், எப்படி எப்படி, இருக்காங்கன்னு நான் சொல்லவேண்டாம். நீங்க தினமும் காலையிலே எழுந்ததும், படிக்கிறீங்களே, அந்த நியூஸ் பேப்பர் சொல்லும்!

 முதல் பக்கம்: 'கல்லூரி பேராசிரியர், தன்னிடம் பி.எச்.டி. படிக்கும் மாணவியை பலவந்தப்படுத்தி புணர்ந்தார்!'

 2ம் பக்கம்: 'பதிமூன்று வயது சிறுவன், பக்கத்து வீட்டு ஐந்து வயது பெண்ணை தகாத முறையில் கெடுத்தான்'

 3ம் பக்கம்:' பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பெண்ணை, கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் காரில் கடத்திச் சென்று கெடுத்துவிட்டு, அதை வீடியோ எடுத்து, வீடியோவை காட்டி பயமுறுத்தி, மீண்டும் மீண்டும், கெடுத்தனர்.'

 4ம் பக்கம்: 'வீட்டில் தனியாக இருந்த அறுபது வயது பெண்மணியை பலவந்தமாக கெடுத்தான், முப்பது வயது தபால்காரன்'

 5ம் பக்கம்:'ஏர்போர்ட்டிலிருந்து தனியாக வாடகை டாக்சியில் இரவு எட்டு மணிக்கு திரும்பிக்கொண்டிருந்த முப்பத்தைந்து வயது பெண்ணை டிரைவர், நடுவழியில் வேறுதிசையில் அழைத்துச் சென்று, கற்பழித்துவிட்டு, இருட்டில் மைதானத்தில் தள்ளி,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.