(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - சறுக்கும் ஏணி! - ரவை

றுக்கும் ஏணி? இதென்ன புதுக் கதையாயிருக்கு!

கொல்லும் உணவு?

கவிழ்க்கும் தோணி?

உதவா நண்பன்?

சுவாசிக்காத நாசி?

கேட்காத செவி?

காக்கப்படாத ரகசியம்?

 ஆங்.......'காக்கப்படாத ரகசியம்'னு நினைத்தவுடனே, சகோதரி ப்ரியசகி எழுதிய அருமையான கவிதை நினைவுக்கு வருகிறது!

 உண்மைதான்! ரகசியங்கள் காக்கப்பட்டால்தான், வாழ்வில் மகிழ்ச்சி நீடிக்கும்!

 ஒவ்வொருவர் வாழ்விலும், குறைந்தது ஒரு ரகசியமாவது ஒளிந்திருக்கும்.

ஒரு தவறாவது செய்திருப்போம், அல்லது நமக்குப் பிறர் ஒரு துரோகமாவது இழைத்திருப்பர்!

 அவைகளை அறவே மறக்கமுடியுமானால், மிகச் சிறந்தது! முடியாவிட்டால், அவைகளை உங்கள் மனதிற்குள் ஆழப் புதைத்து, ரகசியத்தை காப்பாற்றுங்கள்!

 " கொஞ்சம் உங்க பிரசங்கத்தை நிறுத்தறீங்களா? சறுக்கும் ஏணியிலே துவங்கி, சம்பந்தமே இல்லாம, ரகசியத்தை காப்பாற்ற வேண்டும்னு எங்கேயோ போய்ட்டீங்க! எங்களுக்கு நிறைய வேலையிருக்கு! சுருக்கமா சொல்லவந்ததை சொல்லி முடிங்க!"

 நீங்கள் கோபமாகப் பேசினாலும் சொல்வது உண்மைதானே!

 தரையில் நிற்பவனை மேல்மட்டத்திற்குப் போக, உதவத்தானே ஏணி? அந்த ஏணி, நம்மை ஏற்றிவிடாமல், சறுக்கவைத்தால் அது அசாதாரண நிகழ்வுதானே!

 ஆச்சரியமும், அதிசயமும், கேள்விக்குறியும் எழுப்பக்கூடியதுதானே!

 எப்போதோ ஒரு முறை நிகழ்வதுதானே? அதுதான் ரகசியங்களின் பிறப்பிடம்!

 'பெற்றமனம் பித்து, பிள்ளைமனம் கல்லு!'ன்னு ஒரு வழக்குச்சொல் எல்லோருக்கும் தெரிந்தது!

 ஒருவர் வாழ்வில் பெற்ற தாயே, பிள்ளைக்கு துரோகம் இழைத்தால் அல்லது இழைப்பதாக பிள்ளை நம்பினால், அதை வெளியே சொல்லமுடியுமா? சொன்னால் நம்புவார்களா?

 அதனால், வேறுவழியின்றி, பிள்ளை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொள்வான்!

 அப்படியொரு நிகழ்வு, சம்பத்குமாரின் வாழ்வில் நிகழ்ந்து, அதனால் பாதிக்கப்பட்டு, இன்று அவன் அனாதையாக, படிப்பறிவில்லாதவனாக, நடுவீதியில் நிற்கிறான்!

 கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை மகாமகம் நடப்பது, உங்களுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.