(Reading time: 10 - 20 minutes)

அவர்களிடமிருந்து எத்தனையோ உதவிகளை பெற்றிருந்த ஒருவர்கூட அடைக்கலம் தர முன்வரவில்லை.

 எங்கிருந்தோ ஓடிவந்த வேலைக்காரிகள் இருவரும், கீழே விழுந்து கிடந்த காமாட்சியம்மாவை கைதூக்கி எழுப்பினர்.

 " அழாதீங்கம்மா! இதுதாம்மா உலகம்! உங்க சொந்தபந்தம், பெத்த பொட்டைப் புள்ளைங்க, கூடப்பிறந்தவங்க, ஒருத்தரும் இந்த நேரத்துக்கு வரமாட்டாங்கம்மா!

 ஆனா, ஏழைங்க எங்ககிட்ட பணம் இல்லாம இருக்கலாம், ஆனா நன்றி நிறைய இருக்குங்க! வாங்க! எங்க குடிசையிலே தங்கிக்குங்க, கொஞ்ச காலம்! ஏதாவது யோசனை பண்ணி ஏற்பாடு செய்வோம்!"

 அறுவரும் கண்களில் நீர் மல்க, அந்த இருவருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு, அவர்களுடன் குடிசைக்கு சென்றனர்.

 மூத்த மகன், கருணாகரன், தன் பங்குக்கு, பேசினான்.

 " அம்மா! என்னைப்பற்றி கவலைப்படாதே! நான் கல்லூரிப் படிப்பு இரண்டாண்டுகள் முடித்துவிட்டதால், பதினெட்டு வயது முடிந்துவிட்டதாலும், எனக்கு முனிசிபல் ஆபீஸிலோ, மருந்துகடைகளிலோ, ஆஸ்பத்திரியிலோ, பெரிய நகைக் கடைகளிலோ குமாஸ்தா வேலை கிடைக்கும்! அதனாலே, நீ என்னைப்பற்றி கவலைப்படாதே! என் தம்பிகளுக்கு ஏதாவது வழி கிடைக்குமான்னு நானும் உன்னுடன் சேர்ந்து யோசிக்கிறேன், வரேம்மா!"

 அடுத்து, பதினைந்து வயது பகீரதன்!

 " அம்மா! நல்லவேளையா, நீ பெத்த பெண்களுக்கு கல்யாணமாகி அவங்க நல்லபடியா வாழ்க்கையிலே செட்டிலாயிட்டாங்க! இப்ப உன்னோட தவிக்கிற நாங்க ஆண் பிள்ளைங்க! நாங்க எங்க வேணுன்னாலும், தங்கிக்கலாம், படுக்கலாம், வேலை செய்யலாம், என்னைப்பற்றியும் எனக்கு அடுத்தவன், பன்னிரண்டு வயது கங்காதரனைப் பற்றியும் கவலைப்படாதே! அவனை நான் என்னுடன் அழைச்சிண்டு போய், ஓட்டல்லே சர்வரா, க்ளீனரா வேலை தேடிண்டு, வயிற்றுப்பாட்டை கவனிச்சிக்கிறோம், நீ வழி செய்யவேண்டியது கடைக்குட்டிங்க எட்டு வயசு ஏகாம்பரத்தைப்பற்றியும், அஞ்சு வயசு சம்பத்குமாரைப் பற்றியும்தான். வாடா, கங்கா! நாம போகலாம்......"

 தம்பியின் தோளில் கைபோட்டு அண்ணன் அழைத்துச் சென்ற அந்தக் காட்சியைக் கண்ட பெற்ற வயிறுக்கு சொந்தக்காரி மட்டுமல்ல, அடைக்கலம் தந்த வேலைக்காரிகளும் கண் கலங்கினர்!

 எட்டு வயசு ஏகாம்பரமும் அஞ்சு வயசு சம்பத்குமாரும் தாய் காமாட்சியம்மாவின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.