(Reading time: 10 - 20 minutes)

 இவர்கள் அனைவரும் வசிக்கிற வீட்டில், ஒரு வேலைக்காரி எப்படி போதும்? இரண்டு வேலைக்காரிகளுக்கும் முழுநேர வேலை! அதனால், அவர்களுக்கும் வயிறு நிறைய உணவு!

 கனபாடிகளின் முதல் நான்கு பெண்களுக்கும் வசதியான இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு மூச்சு விட்டபோது, கனபாடிகள் ஒரேயடியாக மூச்சை முடித்துக்கொண்டு பிரிந்துவிட்டார்.

 ஊரே கூடியது, கனபாடிகளின் இறுதிச் சடங்குகளின்போது!

 காமாட்சியம்மாளுக்கு பெருமை பிடிபடவில்லை!

 மறுபுறத்தில், கடன்சுமை கட்டுக்கடங்கவில்லை!

 யோசித்துப் பாருங்கள்!

 வருமானத்துக்கோ ஒருவழியுமில்லை; அவள் வயிற்றில் பிறந்த ஐந்து பிள்ளைகள் இன்னும் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கின்றனர்.

 'காமாட்சியம்மாள் சத்திர'த்தில் இத்தனை காலம் வாழ்ந்து வந்தவர்களோ, நிறைய சீர் செய்து கொடுத்து பெண்களை மணமுடித்த உறவினரோ, எவருமே உதவிக்கு வரவில்லை.

 கடன் கொடுத்தவர்கள், காமாட்சி அம்மாளின் 'கழுத்தை நெறித்து' குடியிருந்த 'ரெண்டு கட்டு' வீட்டை அடமானமாக பறித்துக்கொண்டு, காமாட்சி அம்மாளையும் அவள் பெற்ற ஐந்து பிள்ளைகளையும் நடுவீதியில் நிறுத்திவிட்டது!

 ஏறக்குறைய ஐம்பது வருட கதையை விரித்திருக்கேனே, கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டுமா?

 இனி எடுக்கப்படாத வீடியோவில் கண்களுக்கு தெரியாத காட்சிகளை கற்பனையில் கண்டு மகிழுங்கள்!

 தொப், தொப்பென்று முதலில் பெட்டிகள், அடுத்து பாத்திரங்கள், தொடர்ந்து மேஜை, நாற்காலி, கட்டில்கள், முடிவாக, காமாட்சியம்மாளும் அவள் பெற்ற பஞ்சரத்தினங்களும் விழுந்தனர்!

 தெருவே கூடி வேடிக்கை பார்த்தது!

 " ஏன்யா! இப்படி திடீர்னு எங்களை விரட்டறீங்களே, நாங்க இத்தனை சாமான்களோட எங்க போய் தங்கறதுய்யா?"

 " அட, இதப்பார்ரா! சாமான்களைப்பற்றி நீ ஏன் கவலைப்படறே? அவைகளையும் கடனுக்கு ஈடாக, நாங்க பங்கு போட்டுக்குவோம். நீ உன் புள்ளைங்களை இட்டுக்கினு கோவில் குளத்திலே விழுந்து செத்துத் தொலை!"

 தயவுதாட்சண்யமின்றி, இப்படி அவர்களை கடன் கொடுத்தவர்கள் விரட்டியபோது,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.