(Reading time: 10 - 20 minutes)

சேலைத்தலைப்பை பிடித்துக்கொண்டு, இருபுறங்களிலும் கண் கலங்கி நின்றனர்.

 வேலைக்காரி வள்ளி, ஏகாம்பரத்தை தன்னிடம் இழுத்துக்கொண்டு, பேசினாள்.

 " அம்மா! நீங்க இங்கேயே இருங்க, கொஞ்ச நேரம்! இந்தப் புள்ளையை, நான் நம்ம ஐயா நடத்தின வேத பாடசாலையிலே, சேர்த்துட்டு வரேன். ஐயாவுக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர், அங்க இருக்காங்க! அவங்க இந்தப் புள்ளெயை கவனிச்சிப்பாங்க, வாடா ஏகா! நாம போகலாம்"

 மற்றொரு வேலைக்காரி ராணி தன் பங்குக்கு உதவ முன்வந்தாள்.

 " அம்மா! நீங்க வைதீக பிராமண சாதியை சேர்ந்தவங்க! உங்களுக்கோ இந்த சின்னப் புள்ளைக்கோ நாங்க, கீழ்சாதிக்காரங்க, சோறு போடறது, மகா பாபம்! அதனாலே, நான் வேலை செய்கிற உங்க சாதிக்காரங்க வீட்டிலே, உங்களுக்கு சமையற்காரம்மா வேலைக்கு ஏற்பாடு செய்துகிட்டு வரேன்! பொறுமையா நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் இந்தக் குடிசையிலேயே இருங்க!"

 காமாட்சியம்மாளும் கடைக்குட்டி சம்பத்குமாரும் தனித்துவிடப் பட்டனர்.

 " சம்பத்! வயிறு பசிக்குதா? கொஞ்சம் இரு, அக்கம்பக்கத்திலே காய்கறி ஏதாவது இருக்கான்னு பார்த்து பறிச்சுகிட்டு வரேன்."

 சிறிது நேரத்தில், ஏதோ சில விதைகளை எடுத்துவந்து, அவைகளை கருங்கற்களால் பொடிசெய்து குடிசை மூலையில் இருந்த மண்பானையிலிருந்த குடிநீரில் கலந்து, அங்கிருந்த அலுமினிய குவளையில் கொட்டி எடுத்து வந்து, சம்பத்குமாரை தன் மடியில் அமர்த்திக்கொண்டாள்.

 " சம்பத்து! இது நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப நல்லது! இதை குடிச்சா, பசியே எடுக்காது, நிரந்தரமா!

 முதல்லே இதை நான் குடிச்சு, நல்லாயிருக்கான்னு பார்த்துட்டு, அப்புறமா மிச்சம் இருக்கறதை உனக்குத் தரேன்!

 நீயும் அதை குடிச்சேன்னா, நாம ரெண்டுபேருமா உடனடியா பல்லக்கிலே ஏறி, நேரே சுவர்க்கத்துக்குப் போயி, நம்ம படைச்ச சாமியை பார்த்து, "எங்களை இந்த நிலமைக்கு தள்ளினது, நியாயமா"ன்னு அவன் நாக்கைப் பிடுங்கிக்கறா மாதிரி நறுக்குனு நாலு வார்த்தை கேட்போம்! சரியா?"

 தன் மடியிலிருந்த மகன் சம்பத்தை இறக்கி அருகே நிற்கவைத்துவிட்டு, குவளையை தன் வாயில் கவிழ்த்துக் கொண்டாள்.

 குவளையில் கொஞ்சம் மிச்சம் இருக்கும்போது, அதை கையில் வைத்துக்கொண்டு, கண்ணீர் மல்க, பேசினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.