(Reading time: 9 - 17 minutes)

நால்வரையும் காவல் நிலயத்துக்கு அழைத்துச் சென்றனர்.

 காவல்நிலயத்தில் இரவு டியூடியில் இருந்த நாலுபேரும் சேர்ந்து அருகிலிருந்த டீ கடையிலிருந்து கிடைத்ததை தருவித்து, நாலு பெண்களுக்கும் தீனி போட்டுவிட்டு, தங்கள் உடற்பசிக்கு அவர்களையே தீனியாக்கி கொண்டனர்!

 விடிந்ததும், நால்வரையும் விரட்டிவிட்டனர்.

 அடுத்து எங்கே போவது?

 நல்லவேளை, முதல்நாள் இரவு, வயிறு நிறைய சாப்பிட்டதால், பசித்தொல்லையில்லை!

 சுற்றுமுற்றும் பார்த்தனர். வீடுகள்! கடைகளே கண்ணில் படவில்லை! தெருக்கோடியில், ஒரு சிறிய கோவில் தெரிந்தது!

 நால்வரும் அங்கு சென்றனர். கோவில் திறந்திருந்தது, யாருமே இல்லை! வாசற்புறத்தில் குப்பையாக கிடந்தது!

 சுவரோரமாக, ஒரு துடைப்பம் கண்ணில் பட்டது, நால்வரில் ஒருத்தி அதை எடுத்து, முதலில் வாசற்புறத்திலிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தாள்.

 அதற்குள், இன்னொருத்தி, தெருக்குழாயில் கைநிறைய தண்ணீர் பலமுறை கொண்டுவந்து வாசல்நடுவில் தெளித்து, கோலம் போடணுமே, என்ன செய்வது? என யோசித்தாள்.

 மூன்றாவது பெண், கோவில் பிரகாரத்தில் கண்ணில்பட்ட கோலமாவை எடுத்துவந்தாள்.

 அதை வாங்கி, மேனகா வாசற்புறத்தில் பெரிய கோலம் போட்டதும், கோவில் வாசல், பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

 தெருகுழாயில், நால்வரும் கைகால், முகம், வாய் கழுவிவிட்டு, கோவிலுக்கு வந்து, விக்கிரகத்தைப் பார்த்தனர்.

 அம்மன்! காளி அம்மன்! அம்மனின் கையில் சூலம்! துஷ்ட நிக்ரஹ பரிபாலனம் செய்ய அவசியமாயிற்றே!

 நான்கு பெண்களும் அம்மனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டு கைகூப்பி வணங்கி கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

 அம்மனை பார்த்தனர். ஆச்சரியம்!

 இவ்வளவுநேரம் அவர்கள் கண்ணில் படாத அந்தப் புன்னகை, நால்வரின் உடலிலும் மின்சாரம் பாய்ச்சியது.

 அந்தப் புன்னகை, அவர்களுக்கு ஏதோ செய்தி தெரிவித்தது.

 நால்வரும் கண்கலங்கினர். பிரகாரத்தில் தங்களுக்குத் தெரிந்த துதிகளை வாயில் முணுமுணுத்துக்கொண்டே சுற்றிவந்து, மீண்டும் அம்மனை வணங்கிவிட்டு வெளியே வந்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.