(Reading time: 9 - 17 minutes)

பேரும், மூட்டைமுடிச்சை எடுத்துகிட்டு கிளம்புங்க! நாங்க உங்களை வெளியேற்றிவிட்டு, வீட்டைப் பூட்டி, சாவியை ஓனரிடம் இப்பவே கொடுத்தாகணும்.உம்! பத்தே நிமிஷம்தான் டயம்!"

 " ஐயா! நாலு நாளாச்சு, சாப்பிட்டு! வெறும் டீ, பன்னிலே காலம் தள்ளுகிறோம். ஒருவேளை சாப்பாடாவது தருவியுங்க, சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறோம்."

 " எந்த தொழிலிலேயும் உழைச்சால்தான் கூலி! நீங்க சொகுசா, படுத்து தூங்க, சம்பளம் தரமுடியுமா?"

 "டீ, ரொட்டிக்காவது காசு கொடுங்க!"

 " ஒண்ணும் தரமுடியாது, கிளம்புங்க!"

 " திடீர்னு எங்களை விரட்டினால், நாங்க எங்கே தங்கறது?"

 " உங்களை நாங்க எந்த இடத்திலிருந்து அழைத்து வந்தோமோ, அந்த இடத்துக்குத்தான்! ஆமாம், நடுவீதிக்குப் போங்க!"

 காப்பாளர் மேனகாவும் அங்கிருந்த மூன்று பெண்களும் வீதிக்கு விரட்டப்பட்டனர்.

 நேரம் இரவு ஒன்பது மணி! அமாவாசை இருட்டு!

 வயிறு கிள்ளுகிறது! எங்கு போவது, என்ன செய்வது? என அவர்களுக்கு புரியவில்லை!

 " இத பாருங்க! நாலு பேரும் சேர்ந்துபோனால், ஒன்றும் கிடைக்காது. ஆளுக்கு ஒரு பக்கமாக போவோம், தலைவிதிப்படி நடக்கட்டும்"

 மேனகா சொன்னதைக் கேட்டு, மற்ற மூவரில் ஒருத்தி பேசினாள்.

 " அம்மா! நாங்க மூணு பேரும் வயசுப் பொண்ணுங்க! சின்னப் பசங்க பாக்கெட்டிலே கைபோட்டு காசு எடுத்து சாப்பிட்டுவிட்டு, அந்தப் பசங்களை சந்தோஷப்படுத்தி பிழைச்சிப்போம். உங்களுக்கோ வயசாயிடுத்து, உடம்பும் சரியில்லே, என்ன செய்வீங்க?"

 " வேறென்ன செய்யமுடியும், பிச்சைதான் எடுக்கணும்......என்னை நம்பி பாவம்! நீங்க சீரழிந்தது, போதும்! நீங்க கிளம்புங்க!"

 " இல்லைம்மா! எங்களுக்கு மனசு வராது! பழகினதெல்லாம் மறக்கமுடியாது, எங்ககூடவே வாங்க! முதல்லே, ஏதாவது சாப்பிட வழி செய்வோம்!"

 நடுத்தெருவில், இரவு நேரத்தில், அமாவாசை இருளில், நாலு பெண்கள் நடுவீதியில் நின்றிருந்தால், இரவு ரோந்து போலீஸ் சும்மா விடுமா?

 லத்தியை ஓங்கி தரையில் தட்டிக்கொண்டே, சொல்லி வைத்தாற்போல, அங்கு வந்தனர்!

 இரண்டு போலீஸ்காரன்கள், நாலு பெண்கள்!

 இந்தமாதிரி சூழ்நிலைகளை பலமுறை சந்தித்து பழக்கப்பட்ட காவல்துறையினர்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.