அனைவரும் அதைக் கேட்டு உளமார சிரித்தனர்.
"ரம்பா! வந்திருக்கிற காரணத்தை நீயே சொல்லு!"
" ரத்தினம்! நீ எந்த சப்ஜெக்டிலே எம்.ஏ. பட்டம் வாங்கியிருக்கே?"
"சரித்திரம்"
" நல்லதாகப் போச்சு! நான் ஒரு ஆங்கில தினசரியிலே சப் எடிடரா இருக்கேன், உன்னையும் ஒரு சப் எடிடரா நாளைக்கே சேர்த்துவிடுகிறேன், ஆரம்பத்திலே இருபதாயிரம் ரூபாய் சம்பளம், போகப் போக உன் திறமையை பார்த்து சம்பளத்தை உயர்த்துவாங்க, சம்மதமா?"
ரத்தினம் ஓடிவந்து ரம்பாவின் காலிலும் பிறகு பூமியின் காலிலும் விழுந்தான்.
கோதை, தன் கைகளை வானத்தை நோக்கி உயர்த்தி, "ஈசுவரா! இப்படிப்பட்ட அற்புதமான உறவுகளை எங்களுக்கு அள்ளித் தந்திருக்கிற, உன் கருணையே கருணை! ஈரேழு ஜன்மம் எடுத்து அர்ச்சனை செய்தாலும், பட்ட கடன் தீராது....." என பிரார்த்தித்தாள்.
பாப்பா, உமாவின் அருகில் வந்து நின்று, "அந்த அண்ணாவும் அண்ணியும் ரத்தினத்துக்கு வேலை வாங்கித் தந்துட்டாங்க! எங்க உமா அண்ணன், அதேபோல எனக்கு ஒரு நல்ல வேலை நாளைக்கே வாங்கித்தருவாரு, இல்லையாண்ணா?"
குபீரென எல்லோரும் சிரித்தனர்.
" உன் தங்கச்சியும் கெட்டிக்காரி! எப்படி உன்னை வேலை வாங்கறா பாரு!" என்று பூமி சொன்னதும், மறுபடியும் சிரிப்பு!
உமா கண்களில் நீர் தளும்ப, பூசையறைக்கு சென்று சாமி படத்துக்கு முன் நின்று கரங்களை கூப்பி வேண்டிக்கொண்டான்.
" இறைவா! உனக்குத்தான் எங்கள்மீது எத்தனை பாசம்! கேட்காமலே வரம் தந்து எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறாய். அம்மா சொன்னதுபோல, எத்தனை பிறவி எடுத்தாலும் உனக்கு நாங்கள் பட்ட கடன் தீராது........"
பூமி எழுந்து சென்று உமாவை அணைத்துக்கொண்டு வந்து சோபாவில் அமர்த்தினான்.
"எல்லாரும் கேட்டுக்குங்க! பாப்பா, எனக்கும் தங்கச்சிதான்! கோதையம்மா எனக்கும் அம்மாதான்!
அவங்க மனசுக்குள்ளே ஓடுகிற எண்ணங்களை சொல்றேன். எந்த தாயாக இருந்தாலும் அவளுக்கு ஏற்படுகிற ஒரே ஆதங்கம், வயதுவந்த மகளை நல்ல பொருத்தமான பையனா பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறதுதான்.
பாப்பாவுக்கு வேலை வாங்கிக் கொடுத்து, அவள் சம்பாதிப்பது மற்றவங்களுக்கு மகிழ்ச்சியாக