(Reading time: 4 - 8 minutes)

ஆகிவிட்டான்.

 ரகுவை தாய் தாமரை டாக்டரிடம் அழைத்துப்போய் பரிசோதனை செய்ததில், ரகுவுக்கு உடலில் எந்தக் கோளாறும் இல்லை என்பது ஊர்ஜிதமாகியது.

 " தாமரை! உங்க மகன் ஏதோ மனசிலே திட்டமிட்டு தன் உடலை இளைக்கவைக்கிறான்னு தோணுது, அவனிடம் பேசிப் பாருங்க!"

 தாய் தாமரைக்கும் அந்த சந்தேகம் இருந்ததால், குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் கூட்டிவைத்து, ரகுவிடம் வற்புறுத்தி கேட்டபோதுதான், ரகு மனம் திறந்து பேசினான்.

 " அம்மா! சில வருஷங்களாக, பள்ளிக்கூடத்திலே, அண்ணனை 'நோஞ்சான்', 'புல்தடுக்கி பயில்வான்', 'ஒல்லிப்பிச்சான்'னு மற்ற மாணவர்கள் கேலி பண்றாங்க! மற்ற மாணவர்களோடு, வாத்தியாரும் சேர்ந்துகொண்டு அண்ணனை கேலி செய்கிறபோது, என் மனசு நோகுதும்மா!

 எல்லாத்துக்கும் சிகரமா, வாத்தியார் அண்ணனைப் பார்த்து " ஏய் மக்கு! உன் தம்பியை பாருடா, ராஜா மாதிரி இருக்கான், படிப்பிலே முதல் ரேங்க்! அவனைப் பார்த்தாவது திருந்துடா"ன்னு திட்டுகிறபோது, என் உயிரே போகுதும்மா!

 அவங்க யாருக்காவது தெரியுமா, அண்ணன் இப்படி உடல் மெலிந்து, மன வளர்ச்சி குன்றியிருப்பதின் காரணம்?

 காரணம், நான்தாம்மா! அண்ணன் பிறந்து இரண்டு வருஷம் ஆவதற்குமுன்பே, நான் பிறந்துவிட்டேன்! உங்க அத்தனைபேர் கவனமும் கவனிப்பும் என்மீது திரும்பி, அண்ணனை கவனிப்பாரில்லாமல் ஆக்கி சவலைக் குழந்தையாக்கிவிட்டதுன்னு பாட்டி சொல்லி தெரிந்ததிலிருந்து, எனக்குள்ளே ஒரு குற்ற உணர்ச்சி ஆலமரமாக பூதாகாரமா வளர்ந்து இம்சைப்படுத்தியதால், ஒரு முடிவுக்கு வந்தேன்.

 அண்ணனை மாற்றுவது கஷ்டம் மட்டுமல்ல, ரொம்ப வருஷமாகும்! அதனாலே என்னை அண்ணனுக்கு ஈடா, மாற்றிக்கத்தான் உணவைக் குறைத்தேன், படிப்பில் கவனம் செலுத்தாமல், மதிப்பெண் குறைவாக வாங்கினேன்,

 அம்மா! அண்ணனுக்கு இதுதாம்மா நான் செய்யமுடிந்த பிராயச்சித்தம்! இனிமேல் பள்ளிக்கூடத்தில், 'உன் தம்பியைப் பார்'னு சொல்லமாட்டாங்க இல்லையா........."

 அதற்குமேல் பேசமுடியாமல், ஓவென கதறினான்.

 குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும், அண்ணன் விசு உட்பட, தம்பி ரகுவை கட்டியணைத்து அழுதனர்.

 சிறிது நேரத்தில் தாய் தாமரை சுதாரித்துக்கொண்டு, சொன்னாள்:

 " ரகு! தவறு செய்தது, நான்! பிராயச்சித்தம் செய்யவேண்டியவளும் நான்! எனக்குப் பதிலாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.