(Reading time: 6 - 11 minutes)

முற்றிலும் நின்றுவிட்டது.

லாபத்தை அதிகரிக்க, அதிகாரிகள் ரொடேஷனுக்கு கூட கொஞ்சம் தனியாக ஒதுக்கி வைக்காமல், அத்தனை பணத்தையும் முதலீடு செய்துள்ளார்கள்.

பெரும்பாலான இடங்களில், வாடகை கட்டிடங்களில் வியாபாரம்! ஊழியர்கள் சம்பளமே, ஒரு நாளைக்கு, பல கோடி ரூபாய்!

ஓட்டல்கள் போதாதென, இனிப்புவகை விற்கும் ஸடால்களும் ஏராளம். திடீரென கடைகள் மூடப்பட்டதில், ஸ்டாலில் இருந்த இனிப்புகள் அத்தனையும் கெட்டுப்போய் குப்பைத்தொட்டியில் வீசப் பட்டன! அந்த வகையில் சில கோடி ரூபாய் நஷ்டம்!

இவைகளிலிருந்து மீண்டுவர, இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம்.

அதுவரையில், ஓட்டல்களை நடத்தவும், நிலுவையிலுள்ள வாடகைகளை தரவும், அதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், பணம் வேண்டுமே!

அத்தனை வங்கிகளிலும் ஏற்கெனவே நிறைய கடன் வாங்கி, முதலீடு செய்தாகிவிட்டது! புதிய கடன் தர, வங்கிகள் தயாராக இல்லை!

சொந்தமான கட்டிடங்கள், இதர சொத்துக்களின்மீதும் கடன் ஏற்கெனவே வாங்கி முதலீடு செய்தாகிவிட்டது. அதிகாரிகளின் பேராசையால் அத்தனை பணம் முதலீடு செய்யப்பட்டதால்தான், எத்தனை இடங்களில் கிளைகள் உள்ளன எனத் தெரியாத அளவுக்கு விரிந்து விட்டது, வியாபாரம்!

அதெல்லாம் சரி, இப்போது, ரொடேஷனுக்கு பணம் இருந்தால்தானே அத்தனை இடங்களிலும் வியாபாரத்தை தொடரமுடியும்? தொடர்ந்தால்தானே, கடனை அடைக்கமுடியும்?

அதனால்தான், காங்கேயனை அழைத்துக்கொண்டு, எல்லா அதிகாரிகளும் அலைகின்றனர், பணத்துக்காக!

இறுதியாக, நிதியமைச்சரை பார்க்கச் சென்றபோது, ஆச்சரியம் அவர்களுக்கு காத்திருந்தது!

இவர்களுக்கு முன்பே அங்கே காத்திருந்ததவர்கள் யார் தெரியுமா?

பொன்னியாறு ஓட்டல்/ஸ்வீட் ஸ்டால் முதலாளி, ராமா ஓட்டல்/ஸ்வீட் ஸ்டால் முதலாளி, அபூர்வா ஓட்டல் முதலாளி, என பெரிய ஓட்டல் முதலாளிகள்

"நாங்களும், விரலுக்கேற்ற வீக்கமா இல்லாம, உங்களோடு போட்டி போட்டு, இப்ப, நடுத்தெருவுக்கு வந்துட்டோம்........"

நிதியமைச்சர் தனது நிலமையை விளக்கினார்.

" உங்க அனைவரையும்விட, அதிக நெருக்கடியிலே இருக்கிறோம். உலக முழுதும் பாதிக்கப்பட்டிருக்கிறதனாலே எல்லா நாடுகளும், உலக வங்கியிடம் கடன் கேட்கின்றன, நமக்கு அவர்களிடமிருந்து கிடைப்பது, சொல்பமாய் இருக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.