(Reading time: 6 - 11 minutes)

ரிசர்வ் வங்கியிலும், இதே நிலமை! எல்லா தொழிலுமே முடங்கிட்டதனாலே, வரியாக கிடைக்கிற பணமும் வரண்டுவிட்டது! பணக்காரன்களிடம் பணம் இல்லை, எங்களுக்கு உதவ! அதனாலே, உங்களுக்கு உதவ வழியேயில்லே, அதனாலே, எங்களுக்கும் நஷ்டம்தான்! என்ன செய்வது?"

தலையில் துண்டை போட்டுக்கொண்டு, முதலாளிகள் வீடு திரும்பினர்.

முருகன் ஓட்டல் காங்கேயனும்தான்!

அவர்கூடவே வீட்டுக்குள் வந்தது, சி.ஈ.ஓ. கார்த்திகேயன் மட்டுமே!

மற்றவர்கள் தங்களுக்கு சம்பளம் தரக் கூடிய நிலமையிலுள்ள முதலாளியை தேடிச் சென்று விட்டனர்!

" கார்த்தி! இப்ப என்ன செய்வது? எங்க ஊருக்கே போயிட்டமா?"

" ஐயா! எனக்கு தெரிந்த ஒரு இடத்திலே உங்களுக்கு தேவையான பணம் ஏற்பாடு செய்கிறேன், ஆனா ஒரு கண்டீஷன்!

உங்க பெண்ணை என் மகனுக்கு கல்யாணம் செய்துவைக்கணும்......"

" இப்பத்தான் நான் பிச்சைக்காரன் ஆயிட்டேனே, உன் மகனுக்கு வேற நல்ல இடத்திலே, பொண்ணு பார்த்து கட்டிவைடா!"

" இவ்வளவு வருஷம் எனக்கு சம்பளம் கொடுத்த உங்களிடம் ஒரு விசுவாசம்!"

" சரி, எவ்வளவு பணம் கிடைக்கும்?"

" என் கண்டீஷனுக்கு ஒத்துக்கிட்டு, நாளைக்கே பதிவுத் திருமணம் செய்து வைங்க! பிறகு, என்மகன், உங்க மருமகன் ஆயிடுவாரு! உங்க பொறுப்பை ஏத்துப்பார்! நீங்க நிம்மதியா முருகனை பூஜை செய்யலாம்! ஓ.கே.யா?"

கல்யாணம் நடந்து முடிந்து, காரத்திகேயனின் மகன் அந்த ஓட்டல் முதலாளி ஆனதும், கார்த்திகேயன் தன்னிடமிருந்த இருநூறு கோடி ரூபாய் பணத்தை தந்தார்.

" உனக்கேது இவ்வளவு பணம்?"

" காங்கேயன்! எல்லாம் உன் பணம்தான்! மற்ற அதிகாரிங்க உன்னை ஏமாற்றி சுரண்டிட்டு, ஓடிப் போய்ட்டாங்க! ஆனா, எனக்கு அப்படி ஓட மனசு வரலே! அதனாலேதான் இந்த ஏற்பாடு!"

காங்கேயன் சிரித்துக் கொண்டார்.

" ஆமாம்! உன் மகன் பேரென்ன?"

" சண்முகம்!" காங்கேயன் உடனே பூஜை அறைக்குள் புகுந்தார்.

" சண்முகா! கார்த்திகேயா! எல்லாம் உன் விளையாட்டுத் தானா?"

அந்தக் கந்தன், கடம்பன்,காங்கேயன், கார்த்திகேயன், முருகன், சண்முகம், இன்னும் எத்தனைவிதமா விளையாடப் போகிறானோ!

யாம் அறியோம், பராபரனே!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.