(Reading time: 3 - 6 minutes)

சிறுகதை - அடைமழை - சு. ராம்கபிலன்

டக்கு திசையில் கருமேகக்கூட்டங்கள் சேர்ந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் வீசும் காற்றினால் சைக்கிளை அழுத்த முடியவில்லை.பெரிய மழை வரக்கூடும் என்பதால் அருகில் இருந்த குடிசை வீட்டில் ஒதுங்கினேன். சைக்கிள் ஸ்டாண்டை போட்டு நிறுத்தியவுடனே மழை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

கார்ப்ரேஷனுக்கு வேலை வைக்காமல் தெருவில் உள்ள குப்பைகளை அடைமழையே அடித்துச் சென்றது.காய்ந்த தென்னை மரப்பட்டைகள் நிமிடத்துக்கு ஒன்று என்னும் கணக்கில் கீழே விழுந்தது. தூரத்தில் சட்டை அணியாத இரண்டு சிறுவர்கள் டைட்டானிக் கப்பலாக காகித கப்பலை மழைநீரில் விட்டு விளையாடி கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் மிதமான சாரல் மட்டுமே வீசியது. குடிசை வீட்டிற்குள் இருந்து நெஞ்செலும்புகள் வெளியே எட்டிப் பார்க்க காதுகளில் தண்டட்டிகளுடன் கூனல் விழுந்த பாட்டி, நிலாவில் கால் வைப்பது போல் மழைபெய்த மண் சகதியில் பாதங்களை பதித்துக் கொண்டே வெளியே உள்ள மண் அடுப்பிற்குச் சென்றாள்.

அடுப்பு முழுவதும் மழைநீர் சூழ்ந்த தால் அதை ஒரு மங்கோப்பையில் அள்ளி வெளியே ஊற்றி விட்டு, காய்ந்த சுப்பிகளை வைத்து நெறுப்பு மூட்டினாள்.

அப்போது,வீட்டிற்குள் இருந்து கனத்த குரலுடன், அப்புறம் உலை வைக்கலாம் வா.... மழைக்கு ஒதுங்கிய ஆடு, மாடெல்லாம் வந்து அடுப்பை உடைக்கப் போகுது.. என்றவுடன்..

அடுப்பை பார்த்துக்கொண்டே.... இப்படித்தான் சொல்லுவீக அப்புறம் 7-மணிக்கே தட்டத் தூக்கிறுவீக என்று முனுமுனுத்தாள்....

இது கேட்டும் கேட்காதபடியே.... 6-மணி செய்தி கேட்பதற்காக ரேடியோவை தட்டிக் கொண்டிருந்தார் தாதா...

ரேடியோ கறகறவென்று கதறியது..

அதை உழுக்கி பார்த்த போது அடுப்பிற்குள் இருந்த மழைநீரைவிட ரேடியோவில் அதிகமாக இருந்தது..

மேல் கூறையில் இருந்து வடியும் மழைநீரை கண்டவுடன் ரேடியோ போச்சு..போ... என்று படபடவென பேட்டரியை கழட்டி கீழே வைத்தார்..

கரண்ட் இல்லாததால் புலம்பிக்கொண்டு,கையில் சிமிளிவிளக்கை எடுத்துக் கொண்டு எதையோ தேடிக்கொண்டிருக்கும் போது இருட்டில் பாத்திரங்களின் சத்தம் இடிபோல் குமுறியது..

அடுப்பில் உள்ள பாட்டி... அய்யய்யோ சாமான் பூராவும் போச்சு... போட்டு உடைக்கிராரு... ஒரு இடத்துல உட்காருங்க என்று தலையில் அடித்துக் கொண்டே அடுப்பினுல் ஊதாங்குலையில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.