(Reading time: 5 - 10 minutes)

சிறுகதை - குலோப் ஜாமுன் - ஜெப மலர்

மாப்பிள்ளை என் பொண்ணை பத்திரமா பார்த்துக்குங்க... அவள் கிராமத்திலேயே வளர்ந்தவள். அவகிட்ட குறை இருந்தால் கொஞ்சம் பக்குவமா சொல்லி திருத்துங்க...

அத்தை... இதையே எத்தனை தடவை சொல்வீங்க.. நீங்க கவலையே படாதீங்க... நான் நல்லா பார்த்து கொள்கிறேன் என்று சொல்ல பெண் வீட்டு சொந்தங்கள் விடை பெற்றன.

தன் உறவுகள் எல்லாரும் ஊருக்கு செல்வதை பார்த்ததும் பெண்ணின் கண்கள் கலங்கியது. கலங்கிய குண்டு விழிகளோடு நின்றவளின் கண்களை பார்க்கும் போது ஜீராவில் மிதக்கும் குலோப் ஜாமுன் நினைவிற்கு வந்தது.

இப்போ மாப்பிள்ளையை பற்றி சொல்லியே ஆகனும்ங்க... மாப்பிள்ளைக்கு நல்ல வேலை. கை நிறைய சம்பளம்... அவரோட ஒரே கெட்ட பழக்கம் தினமும் குலோப் ஜாமுன் சாப்பிடறது தான்..

குடிகாரனால குடிக்காமல் இருக்க முடியாதது போல, ஒரு எழுத்தாளனால எழுதுறதை நிறுத்த முடியாதது போல மாப்பிள்ளையால குலோப் ஜாமுன் சாப்பிடாமல் இருக்க முடியாது.

சரி இப்போ கதைக்கு வருவோம். பெண்ணவளின் விழிகளை பார்த்ததும் குலோப் ஜாமுன் நினைவு வந்தது. இன்னும் கொஞ்சம் தாமதித்தால் எங்கே அவள் விழிகளை குலோப் ஜாமுன் என்று எண்ணி சாப்பிட தயராகி விடுவோமோ என்ற அச்சம் எழுந்தது.

தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன் மெதுவாக தன்னவளின் அருகில் வந்து அழாத... சின்ன குழந்தை மாதிரி இருக்கு என்று சொல்ல அவளும் வெட்கப்பட்டு சிரித்து கொண்டாள்.

இப்போ நான் என்ன சொல்லிட்டேனு இப்படி வெட்கப்படுறா என்று எண்ணியவன் என்னவாவும் இருக்கட்டும் என்று நினைத்து கொண்டே... உனக்கு சமைக்க தெரியுமா என்றான்.

ஆம் என்று அவள் தலையசைத்து வெட்கப்பட்டு கொண்டே சொல்ல, அதை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை.

சரி குலோப் ஜாமுன் செய்ய தெரியுமா என்றான்.

அவள் விழி நிமிர்த்தி பார்த்தாள். இல்லை என்று சொல்ல முடியாமல் அவள் இமைகள் படபடவென்று மூடி திறக்க கருவிழிகள் அங்கும் இங்கும் உருண்டன.

ஷ்ஷப்பா.... என்று அவன் கண்களை மூடி திறந்து விட்டு சுவர் புறமாக திரும்பி கொண்டு பார்க்கவே என்னவோ செய்யுதே... முடியலடா என்று வாய்விட்டு புலம்ப பெண்ணவளோ தன் அழகை தான் சொல்கிறான் என்று ச்சீ.. போங்க நீங்க ரொம்ப மோசம் என்று சொல்லி சினுங்க இப்போ ஏன் இவ சினுங்கிறா என்று திரும்பி பார்த்தான். ஆனால் மறந்தும் அவள் கண்களை பார்க்கவில்லை.

தன் மொபைலில் குலோப் ஜாமுன் செய்முறை வீடியோ காட்டினான். அவளும் ஆர்வமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.