(Reading time: 9 - 17 minutes)

    " ஆண்டி! நீங்க ரொம்ப ஸ்வீட்! உங்களோட பேசிக் கொண்டே இருக்க ஆசையா இருக்கு!"

    மகேஷின் தாய் விமலா உச்சி குளிர்ந்து, சுகுமாரியை அணைத்து முத்தமிட்டாள்.

   பதிலுக்கு, சுகுமாரியும் விமலாவை முத்தமிட்டாள்.

  " ஆண்டி! எங்கம்மா நான் குழந்தையா இருந்தபோதே போயிட்டா! எங்கப்பாதான் என்னை வளர்த்தார். எனக்காக அவர் மறுமணம் செய்துகொள்ளவே இல்லை! எங்கப்பா ஒரு அப்பாவி! இப்படியா தன் மகளுக்காக இளமைச் சுகத்தை இழப்பாங்க?

 ஆண்டி! அவருக்கு உள்ள செல்வத்துக்கு, என்னைக் கவனிச்சிக்க, நாலு பேபிசிட்டர் போட்டிருக்கலாம், இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்வை அனுபவித்திருக்கலாம், அசடு!"

 விமலா சிரித்தாள். " தமாஷுக்கு சொல்லலே, நிசமாவே ஃபீல் பண்றேன், அவருக்காக!"

    " உன் ஃபீலிங்கும் அவர் பாசமும் ரெண்டுமே உயர்ந்து நிற்குது...."

" ஆண்டி! ஒருத்தர், இன்னொருவருக்காக, பல வருஷங்களுக்கு தன் சுகத்தை இழப்பது மடமை, இல்லையா? பிற்காலத்திலே ஒருநாள், வருத்தப்பட்டால், இழந்தது மீண்டும் வருமா? போனது கிடைக்குமா?"

" எதைப்பற்றி சொல்றா சுகுமாரி?" எனக் கேட்டவாறு மகேசன் உள்ளே நுழைந்தான்.

  " மகேஷ்! அதை பிறகு சொல்றேன், இப்ப அவசரமா என்னுடன் வந்து, என் அப்பாவிடம் எனக்காகப் பேசி அவர் மனசை மாற்றணும், உடனே வா!"

    " வரேன், சுருக்கமா விஷயத்தை சொல்லு!"

    " நீயும் நானும் பிளான் பண்ணியபடி, ரிசர்ச் படிப்பு படிக்கறதுக்கு தடையா, எங்கப்பா அவசரமா என் கல்யாணத்தை நடத்தணும்னு சொல்றார், நீதான் அவரை கன்வின்ஸ் பண்ணனும்...."

    " ஏன் அவசரப்படறார்?"

" சொல்ல மாட்டேங்கறாரு, மகேஷ்!"

 " உனக்கென்ன தோணுது?"

  " எல்லா அப்பாவையும் போல, தன் மகளின் திருமணத்தை நடத்தற ஆசைதான்னு........"

" ஓ.கே. அவரிடம் பேசி அவரை கன்வின்ஸ் செய்வோம், வா!"

சுகுமாரி திரும்பி விமலாவைப் பார்த்து சிரித்து விடை பெற்றாள்.

  " சுகி! அடிக்கடி வாம்மா!" சுகுமாரியின் காரில் ஏறியதும் மகேஷ் அவளிடம், ரகசியமாக " என்ன, எங்கம்மா உன்னை அடிக்கடி வரச்சொல்றா?" " ஏய்! நாங்க தோஸ்த் ஆகி விட்டோம். ஐ லவ் யுவர் மாம்! ஷீ இஸ் ஸ்வீட்!" " அம்மாவும் உன்னைப்பற்றி இதையே சொல்வா! சகஜம்!" "

6 comments

  • :clap: nalla kathai sir (y) nalla manathu kondavargalukku nallathu nadanthaal theemai seibavargalum nanmai seiya thodanguvargal ena thonuthu (y) :thnkx: & :GL:
  • Good morning dear Adharva! Elated to receive your compliments! We are in the same boat on all basic human virtues! Thanq!
  • Oh I see appavin Nala gunathukku thandha Parisa illai appa maganai Nala valarthadhukkana Parisa ;-) anyway I assume money is secondary here...character takes the lead...nice theme uncle 👏👏👏👏<br />Thank you.<br /><br />Good night.
  • Good evening dear Jeba! Thanks a lot! Please spread the message of this story far and wide through your excellent serials/short stories! Good night!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.