(Reading time: 10 - 20 minutes)

சிறுகதை - இதுவும் காலாவதியாகும் - கோகுலப்ரியா

திகாலை மணி மூன்றை நெருங்கி கொண்டிருந்தது. படுக்கையறை விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் இருள் மட்டுமே நீள்வது போல் அறை முழுவதும் கும்மிருட்டாய் இருந்தது. இருட்டில் வேகமாய் சுழலும் மின்விசிறி சத்தத்தையும் தாண்டி கடிகார முட்களின் சத்தம் ‘கிளக் கிளிக்’ என்று சத்தம் எழுப்பி கொண்டிருந்தது. முழு இரவும் அல்லாது பகலும் அல்லாத அந்த அதிகாலை பொழுதில் ப்ரியா தன் கவலை மூட்டைகளை கனவு என்ற பயணத்தில் இறக்கி வைத்து கொண்டிருந்தாள். அவளின் அழகான கனவு பயணம் முழுவதுமாய் முடிவதிற்குள் அலாரம் ‘ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்’ என்று கூப்பாடு போட்டு அவளின் அமைதியான நித்திரையை களைத்து விட்டது.

ப்ரியா கண்களை முழுவதுமாய் திறக்க மனமில்லாமல் அரை கண்களில் அவள் கைபேசியில் மணியை பார்த்து விட்டு அப்படியே அலாரத்தையும் அணைத்து விட்டு மீண்டும் தன் கனவு பயணத்தை தொடர ஆரம்பித்தாள். அதற்குள் மீண்டும் ‘ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்’ என்று இரண்டாம் முறை அலாரம் கூப்பாடு போட, இனி நித்திரையில் மூழ்குவது பயனில்லை என்று எண்ணி எழுந்திருக்க ஆயத்தம் ஆனாள். எழுந்திருக்கும் முன் அவள் படுக்கைக்கு அருகில் வைத்திருந்த கைப்பையை திறந்து அன்று பயணம் செய்யவிருக்கும் விமான டிக்கெட்டை தன் கையால் தடவி மெய்மறந்து அந்த டிக்கெட்டை சில நொடிகள் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பல நாள் கனவு அன்று தன் சொந்த செலவில் நிறைவேற போவதை நினைத்து தனக்குத் தானே பெருமைப்பட்டு கொண்டிருந்தாள்.

பின் ப்ரியா குளித்து முடித்து  அளவாய் ஒப்பனை செய்து அவசரம் அவசரமாய் சாப்பிட்டு விட்டு விமான நிலையம் செல்வதற்கு தயாராய் இருந்தாள். வீட்டிலிருந்து கிளம்பும் முன் அவளின் அம்மாவிடம் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தாள். அதற்குள் அவள் முன்பதிவு செய்திருந்த டாக்ஸி டிரைவர் தான் வீட்டின் வெளியில் உள்ள மரத்தடியில் காத்திருப்பதாய் கூற, அவளும் வீட்டை பூட்டி விட்டு அவசர அவசரமாய் டாக்ஸ்யில் கிளம்பிச் சென்றாள்.

ப்ரியாவின் விமானம் காலை 8:30 மணிக்கு. அவள் டாக்ஸியில் ஏறும் பொழுதே ஏழு மணி கடந்திருந்தது. எவ்வளவு நேரமாய் எழுந்திருந்தாலும் முடிவில் அரக்க பரக்க கிளம்ப வேண்டியதாய் இருக்கிறதே என்று மனதிற்குள் நினைத்தபடி ப்ரியா டாக்ஸி டிரைவரிடம் தனக்கு விமானத்திற்கு நேரமாகி விட்டது, அதனால் விரைவாய் வண்டியை ஓட்டும்படி கூறினாள்.  டிரைவரும் அதற்கு ஏற்றார் போல் வண்டியின் வேகத்தை கூட்டி அவருக்கு தெரிந்த குறுக்கு சந்துகளிளெல்லாம் வண்டியை செலுத்தி ப்ரியா திட்டமிட்டிருந்ததை விட ஐந்து நிமிடம் முன்னதாக விமான நிலையத்தின் வாயிலை அடைந்தார். ப்ரியா விரைவாய்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.