(Reading time: 10 - 20 minutes)

அவளை அழைத்து வந்ததிற்காக டிரைவர்க்கு நன்றி கூறி விட்டு அப்படியே டாக்ஸிக்கான பணத்தையும் கொடுத்து விட்டு தன் உடைமைகளை கையில் எடுத்துக்கொண்டு விமான நிலையத்தின் நுழைவு வாயிலை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.

ப்ரியா விமான நிலையத்தின் முகப்பு வாயிலை நெருங்க நெருங்க அவள் மனது மகிழ்ச்சி வெள்ளத்தில் பெருக்கெடுத்து ஓடியதை அவள் முகத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. முகப்பு வாயில் ஒரு பகுதியின் வண்ண அலங்காரங்களை பார்த்து பிரமித்து போனாள். அலங்காரங்களை பார்த்து ரசித்தபடி அவள் மனதிற்குள், வாயிலே இவ்வளவு அழகாய் இருக்கிறதென்றால் உள்ளே எப்படி இருக்குமோ என்று நினைத்து கொண்டே ஆச்சர்யம் கலந்த எதிர்பார்ப்போடு நுழைவு வாயிலின் உள்ளே சென்றாள். உள்ளே செல்லும் போது தான் பார்த்து ரசித்த இந்த அழகிய காட்சிகளை அப்படியே தன் அம்மாவிடம் நிச்சியம் பகிர்ந்தாக வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்

உள்ளே சென்றதும் அங்கே காவலுக்காக நின்றிருந்த பாதுகாவலர்கள் முதலில் ப்ரியாவின் விமான டிக்கெட்டை சரி பார்த்துவிட்டு பின் அவள் உடைமைகளை சரி பார்த்து, எல்லாம் சரி என்று நிரூபணமான பிறகு அவள் பயணம் செய்யவிருக்கும் விமான நிறுவனத்தின் ஊழியரிடம் அவள் பெட்டியை ஒப்படைத்தனர். அவரும் அந்த பெட்டியை வாங்கி ப்ரியா பயணிக்கவிருக்கும் விமான நிறுவனத்தின் பெயர் பதித்த லேபிள் ஒன்றை அந்த பெட்டியில் ஓட்டினார். பின்பு ப்ரியாவிடம் நேரே சென்று வலது புறம் பாதுகாப்பு சோதனையறைக்கு செல்லுமாறு கூறிவிட்டு அவளது பெட்டியை அவர் உடன் எடுத்து சென்றார்.

ப்ரியாவிற்கு விமான நிலைய விதிகள் ஒன்றுமே விளங்கவில்லை. தன்னை நேராக செல்லும்படி சொல்லிவிட்டு அந்த ஊழியர் தன் பெட்டியை எங்கு எடுத்து செல்கிறார் என்று தெரியாமல், அந்த ஊழியர் தன் பெட்டியை எடுத்து செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள். பின்பு ஏதோ தெளிவு வந்தது போல் அங்கேயே நிற்காமல் அவள் நேரடியாக அந்த ஊழியரிடமே சென்று தன் பெட்டியை எங்கே எடுத்து செல்கிறீர்கள் என்று வினவினாள். அதற்கு அவர் உங்கள் பெட்டியை நீங்கள் பயணம் செய்யவிருக்கும் விமானத்துடன் இணைத்து அனுப்பி விடுவோம். நீங்கள் எந்த ஊரில் இறங்க வேண்டுமோ அங்கு தானாக உங்கள் பெட்டி வந்து விடும். அதற்கு அடையாளமாக எங்கள் விமான நிறுவன நம்பர் பதித்த லேபிள்லை உங்கள் பெட்டியில் ஓட்டியிருக்கிறோம். நீங்கள் இறங்கிய பின்பு அதை எடுத்து சென்றால் போதும் என்று பொறுமையாகவும் தெளிவாகவும் எடுத்து கூறினார். ப்ரியாவிற்கு அப்போது தான் விமான நிலையத்தின் விதிகள் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. அவள் அந்த ஊழியர்க்கு நன்றி தெரிவித்து அவர் சொன்ன பாதுகாப்பு சோதனையறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.