(Reading time: 10 - 20 minutes)

அண்ணார்ந்து பார்த்தது அவளுக்கு நியாபகம் வந்தது. விமானத்தின் கதவருகில் பயணிகள் ஏறுவதற்காக படிகட்டுகள் போடப்பட்டிருந்தன. விமான படிக்கட்டுகளில் பயணிகள் ஏறுவதும் இறங்கி வருவதும் அவள் சினிமா மற்றும் செய்திகளில் தான் பார்த்திருந்தாள். முதல் முறையாய் அன்று தன் கால் பாதங்களை அந்த படிக்கட்டில் வைக்க போவதை அவளால் நம்ப முடியவில்லை. அது அவளுக்கு கனவு போல் இருந்தது. அந்த நொடி அவளையும் அறியாமல் அவள் கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்தது. அவளுக்கு பின் வந்தவர்கள்  வந்தவர்கள் சாதரணமாய் அந்த படிக்கட்டுகளை கடந்து சென்றனர். ஆனால் ப்ரியாவிற்கு அவளின் நெடுநாள் சாதனையை அரங்கேறியது போல் இருந்தது.

ஒரு ஒரு படிக்கட்டில் அவள் கால் வைத்து ஏறும் பொழுதும் அவளது இதயத்துடிப்பில் இருந்து ‘லப்டப்’ என்ற சத்தம் மிக துல்லியமாக அவள் காதுகளுக்குள் கேட்டதை அவளாலே உணர முடிந்தது. அங்கே விமானத்தின் உள்ளே அழகான பணிப்பெண்கள் சிரித்த முகத்துடன் பயணிகள் அனைவரையும் வரவேற்று கொண்டிருந்தனர். ப்ரியா உள்ளே நுழையும் பொழுது அவளையும் புன்சிரிப்புடன் வணக்கம் சொல்லி வரவேற்றனர். பதிலுக்கு ப்ரியாவும் புன்சிரிப்புடன் நன்றி சொல்லிவிட்டு உள்ளே தன் இருக்கை எண்ணை தேடிச் சென்றாள். அவளே எதிர்பார்க்காதது போல் அவளின் இருக்கை எண் ஜன்னல் அருகே அமைந்திருந்தது. அதை பார்த்ததும் ப்ரியாவிற்கு வானில் பறப்பது போல் இருந்தது. உண்மையில் அவள் வானில் தான் பறக்க போகிறாள் என்பதை அந்த பேரானந்தத்தில் அவளே சில நொடிகளில் மறந்து விட்டாள் போலும்.

ப்ரியா ஜன்னலின் அருகே அமைந்திருந்த அவளின் இருக்கை எண்ணை ஒருமுறை சரி பார்த்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தாள். அவளுக்கு அருகில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. அங்கே வயதான வெள்ளைக்காரர் ஒருவர் ப்ரியாவிற்கு ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லிவிட்டு சிறு புன்னகையுடன் அமர்ந்தார். வெள்ளைக்காரர் தன்னிடம் பேசியதை ப்ரியா பெருமையாய் நினைத்தாள். விமான பயணம், ஜன்னல் அருகே இருக்கை, வெள்ளைகார சக பயணி என இதையெல்லாம் அவள் ஒரு நொடி நினைத்துப் பார்த்த பொழுது ப்ரியாவிற்கு தன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்தது போல் இருந்தது.

விமானம் கிளம்ப இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அதற்குள் ப்ரியா தன் அம்மாவிடம் தான் அனுபவித்த அனுபவங்களை பகிர்ந்து விடலாம் என்று அவசர அவசரமாய் தன் கைப்பையில் இருந்த கைபேசியை எடுத்தாள். தன் கைபேசியின் வால்பேப்பரில் அழகாய் சிரித்த முகத்துடன் புகைப்படமாய் இருந்த அவள் அம்மாவிடம் ப்ரியா இவ்வாறு கூறினாள். “அம்மா நீ உயிருடன் இருந்த பொழுது உன் மகள் வானில் பறப்பதை பார்க்க வேண்டும் என்று

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.