(Reading time: 10 - 20 minutes)

கனவு கண்டிருந்தாய். இன்று நீ வானில் நட்சத்திரங்களில் நட்சத்திரமாய் இருந்து நான் வானில் பறப்பதை கண்டு ரசிப்பதை என்னால் உணர முடிகிறது. நீ ரத்தமும் சதையுமாய் உயிருடன் என்னோடு இருந்த போது நிறைவேறாத உன் கனவை இன்று நீ ஆன்மாவாய் என்னருகில் இருக்கும் போது நிறைவேறியிருக்கிறது. பொருட்களுக்கு காலாவதி தேதிகள் இருப்பது போல் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக காணும் கனவுகள். நிறைவேறுவதற்கும் காலாவதி தேதி இருக்கிறது என்பதை நான் அறியேன் அம்மா. முன்கூட்டியே அறிந்திருந்தால் என் மேல் வைத்திருந்த உன் கனவு காலவதியாவதற்குள் அதை நிறைவேற்ற நிச்சியம் நான் முயற்சித்திருப்பேன் அம்மா என்று மனதிற்குள் பேசி கொண்டிருந்தாள். காலம் கடந்திருந்தாலும் உன் கனவை நிறைவேற்றிவிட்டேனம்மா என்று புகைப்படத்தை பார்த்து கண்ணீருடன் சொன்னாள்.

விமானம் கிளம்பப் போவதால் அனைவரும் தங்கள் கைபேசியை ஆப் செய்து விடுமாறு விமான பணிப்பெண்கள் பயணிகளுக்கு அறிவிப்பு விட அனைவரும் தங்கள் போன்களை ஆப் செய்தனர். ப்ரியாவும் அவள் கைபேசியை ஆப் செய்து விட்டு காதில் ஹெட் போன்களை மாட்டிக்கொண்டு கண்களை மூடி இளையராஜா பாடல்களை கேட்க ஆரம்பித்தாள். விமானமும் அவளின் அம்மாவின் கனவை போல் பல்வேறு பயணிகளின் கனவை சுமந்து மெதுவாக வானில் பறக்க ஆரம்பித்தது. 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.