(Reading time: 5 - 9 minutes)

சிறுகதை - நீயே என் தலைவன்! - ரவை

மைச்சர் வீரப்பன், சி.எம்.மின் பி.ஏ.வுக்கு போன் செய்து, "சி.எம். நல்ல மூட்ல இருக்காரா? வரலாமா?" என கேட்டார்.

" அஞ்சு நிமிஷம் முன்பு நல்ல மூட்ல இருந்தார். இப்ப இருக்காரான்னு நிச்சயமா சொல்ல முடியாது, வந்து ட்ரை பண்ணுங்க!"

 " சரி, வரேன், ஐயா வாழ்க!"

   " என்ன வீரப்பன்? இப்ப எதிலே மாட்டியிருக்கே?"

  " தலைவா! பெரிசா ஒண்ணுமில்லே தலைவா! இந்த மேம்பாலம் டெண்டர் விஷயத்திலே, உங்க மச்சான் மகேசனுக்கு சாதகமா முடிவு எடுத்ததை, எதிர்க்கட்சி தலைவர், கண்டுபிடிச்சிட்டு, அறிக்கை விட்டிருக்காரு, அதை உங்க காதிலே போட லாம்னு வந்தேன்....."

" சரி, இப்பவே அந்தக் கட்சி கொறடாவுக்கு போன் பண்ணி மிரட்டி, அவங்க தலைவரை அடக்கி வாசிக்க சொல்லு! இல்லேன்னா, அவன் செய்த ஃபிராடை வெளிவிடுவோம்னு......"

  " சரி, தலைவா!"  " ஆமாம், என் தொகுதியை ஸ்மார்ட் சிடியிலே சேர்த்து விட்டாச்சா? ஏன்னா, நூறு கோடி ரூவா டெண்டர் அதிலே கிடைக்கும்......"

 " அதையும் உறுதிப் படுத்திடறேன், தலைவா!"

" உன் பையனை மிரட்டி வை, லிமிட் தாண்டி போறான் வீடியோ பிரச்னையிலே சிக்கி உள்ளே பூடப்போறான்......"        " அவனை வெளிநாடு அனுப்பிடறேன், தலைவா!"        " தலைவா, தலைவானு நூறு தடவை சொல்லிட்டு, பின்னாலே குழி தோண்டறே, எனக்குத் தெரியும்! உடனே ரூட்டை மாத்தலேன்னா, உள்ளே போய் கம்பி எண்ண தயாராயிரு!"

" தலைவா! உங்களுக்கு துரோகம் செய்வேனா? எவனோ எனக்கு வேண்டாதவன், உங்ககிட்ட போட்டுக் குடுக்கிறான், அவனை நம்பாதீங்க!"

  " இப்பல்லாம் நான் யாரையுமே நம்பறதில்லே, கையிலே பணம் எவ்வளவு வச்சிருக்கே?"

   " கையிலே அதிகம் வச்சிக்கிறதில்லே, பையிலே இருக்கு,எத்தனை, யாருக்கு தரணும்?"

  " என் பி.ஏ.வுக்கு அவன் கேட்கிற கொடுத்துட்டு என் கணக்கிலே எழுதிவை!"

" சரி, அவனை என் ரூம் வரச்சொல்லிட்டு போறேன், அவனை அனுப்பிவைங்க!"

  அமைச்சர் வீரப்பன் தன்னை விட்டால்போதும்னு வெளியேறினார்.

  சி.எம்.முக்கும் அமைச்சர் வீரப்பனுக்கும் ஒரு உடன்பாடு!

  சி.எம்.மின் கறுப்புப் பணத்தின் ஒரு பகுதி, அவன் அறையில் வைத்திருக்கிறான். சி.எம். சொல்படி, அதிலுள்ள பணம் பட்டுவாடா செய்வான்.

    ஒழுங்கா கணக்கு எழுதி அவ்வப்போது சி.எம். மிடம் காட்டுவான்.

    சில நாட்களாக, ஒரு சந்தேகம், சி.எம்.முக்கு!

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.