(Reading time: 6 - 12 minutes)

சிறுகதை - வந்ததே கோபம்! - ரவை

ந்த வீட்டிலே, ஒருநாளும் கோபமே வராத ஒருத்தர் யாருன்னு கேட்டால், மற்ற யாவரும் ஒரே குரலில், கோஷமிடுவார்கள், 'அப்பா!'

அப்படிப்பட்ட அப்பா, இன்று ருத்திர தாண்டவம் ஆடியபோது, ஒருவருக்கும் ஏதும் புரியவேயில்லை!

"இப்பவே சொல்லிடுங்க, நான் இந்த வீட்டிலே இருக்க வேண்டுமா, வேண்டாமா? உங்களுக்கெல்லாம் மனித தன்மையே கிடையாதா? இத்தனை வருஷம் நம்மகூட நல்லது, கெட்டது எல்லா நேரத்திலும் கூடவே இருந்த ஒருத்தியை இனிமே இந்த வீட்டுக்குள்ளே நுழையாதேனு சொன்னீங்களாமே, ஏன்?"

அப்போதுதான், மற்ற வர்களுக்குப் புரிந்தது, அப்பா கோபம் அடைந்துள்ளதின் காரணம்! வேலைக்காரி முனியம்மா அவரிடம் தன் குறையை கூறி அழுதிருக்கிறாள்!

அம்மா ஏதோ பேச வந்தபோது, பாட்டி, அவளை சைகையால் அடக்கினாள்.

" அவ என்ன பண்ணுவா? இவ்வளவு வருஷம் வேலை வாங்கினவங்களே, விரட்டி அடிச்சா, மற்றவங்க எப்படி அவளை வேலைக்கு சேர்த்து கொள்வாங்க? அவளும் அவ குடும்பமும் பட்டினியிலே சாகணுமா? அப்படியென்ன குற்றம் செய்தா அவ?"

பாட்டி கையில் குடிநீர் எடுத்துவந்து, அப்பாவிடம் நீட்டினாள்.

அதை வாங்கி, அப்பா குடித்தபோது, பாட்டி பேச்சுக் கொடுத்தாள்.

" மாது! அவளுக்கு இந்த கொரோனா தொற்றுநோய் வந்து ஒருமாதம் சிகிச்சை எடுத்துண்டாளாம்டா......."

" அதனாலே....அவ இனி நம்ம வீட்டுக்குள்ளே வரவே கூடாதா? நாமே அவளை விரட்டினா, அவ வேற எங்கே போவா? பசியிலே செத்துப் போகணுமா, அவளும் அவ குடும்பமும்....சொல்லும்மா!"

" அதில்லேடா, மாது! இந்த நோயைப்பற்றி உலகம் முழுதும் மிரண்டுகிடக்குதுடா, நமக்கு பயம் இருக்காதாடா? இந்த வீட்டிலே, பெரியவங்க, குழந்தைங்க எல்லாரும் இருக்கறதனாலே........"

" நாம பத்திரமா உயிர் வாழணும், அவ சாகணுமா?"

" கோவிச்சிக்காதேடா, வேணும்னா, அவளுக்கு பணம் கொடுத்துடுவோம், சரியா?" " ஆமாம், கிழிச்சீங்க, இந்த ரெண்டு மாச சம்பளத்தையே, அவ பத்துதரம் கேட்டபிறகு தந்த வங்க தானே, நீங்க?"

 " ஏன்டா, நீ எத்தனை கஷ்டப்பட்டு சம்பாதிக்கறே, அந்தப் பணத்திலே நாங்க உன் வியர்வையை பார்த்து நூறு தடவை யோசித்துச் செலவு பண்றோம்டா..."

" அம்மா! அந்தக் காலத்திலே, என் கல்யாணம் நடக்கறதுக்கு முன்பு, நம்ம வீட்டோட

8 comments

  • Sorry, Medico! At the this story was written MONTHS BACK, the figures given in the story are the one given by the press! Whereas your figure is the latest one!
  • சின்ன தகவல்..Corona நம்ம நாட்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு வரவில்லை, ஒரு கோடியே ஐம்பத்தாறாயிரம் பேருக்கு வந்திருக்கிறது..அதில் இறந்தது ஒரு லட்சத்து நாற்பந்தாயிரம் பேர் இங்கு சொல்லி இருப்பது போல் வெறும் நாலாயிரம் பேர் இல்லை
  • Kobam.... Aathirathil pesuvathu manasangadathai matum tharum enbathai thelivaga sutikatugirathu... Athodu corona awareness .. so 2ble msg 4 tis story... Thank you uncle
  • wow arumaiyaana kathai sir.thakka samayathil ellorum purinthu nadanthu kondaal nanmai payakkum :hatsoff: :thnkx: & :GL:
  • Porumai!! Namaloda porumai-i parthu porumai poramai padamal irundhal okay uncle...<br />Nice story uncle 👏👏👏👏👏 hope people are thoughtful. <br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.