(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

”உன் வீட்லயா இருக்க, என் வீட்லதானே இருக்க, இப்படி மாஸ்க் போடாம வந்தா எப்படி? ஏதாவது நோய் பரவினா என்னாகும்”

  

”ஏங்க மலரு என்ன இப்படியெல்லாம் பேசறீங்க, என்னால ஒண்ணும் உங்களுக்கு நோய் வராது”

  

”அதுசரி ஆமா தடுப்பூசி போட்டாச்சா”

  

”தடுப்பூசியா” என இழுத்தான்

  

”அப்ப அதுவும் போடலையா எவ்வளவோ விளம்பரம் செய்றாங்கள்ல, நோய் பரவற நேரத்தில தடுப்பூசி போடாம இருந்தா எப்படியாம், உங்களால மத்தவங்களுக்கு நோய் பரவனுமா”

  

”அய்யோ இல்லைங்க என்னால எல்லாம் நோய் பரவாது“

  

”அப்புறம் ஏன் தடுப்பூசி போடலை”

  

”அதுவா அது எனக்கு ஊசின்னா பயம்ங்க” என சொல்ல மலரோ தலையில் அடித்துக் கொண்டு உள் அறைக்குச் சென்றாள் அவள் சென்றதும்

  

”ஏங்க மலரு பால் வேணாமாங்க நான் கிளம்பவா” என கேட்க

  

”ஏய் இரு வரேன்” என அதட்டலாக சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள், வந்தவள் கையில் ஒரு ஆஸ்பிட்டலின் கார்டு இருந்தது அதை அவனிடம் தந்தாள்

  

”இந்தா இதை எடுத்துக்கிட்டு ஆஸ்பிட்டலுக்கு போ, அங்க உன்னை செக் பண்ணிட்டு தடுப்பூசி போட்டுவிடுவாங்க சரியா” என சொல்ல அவனோ பலமாக யோசித்து அந்த கார்டை வாங்கவே தயங்கினான்

  

”என்ன பார்க்கற இந்தா வாங்கிக்க”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.