(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”அதுவா” என இழுத்தான்

  

”என்னடா மறந்துட்டியா சரி சரி இவ்ளோ நீ செய்ததே போதும், களைச்சிப் போயிருப்ப பூஜை ரூமை நான் ரெடி பண்றேன் நீ போய் ஓய்வெடு”

  

”அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா நீ பால்காய்ச்சு அதுக்குள்ள நான் பூஜை ரூமை தயார் பண்ணி வைச்சிடறேன் சரியா” என சொல்லிவிட்டு அந்த வேலையில் இறங்கினான்.

  

வைதேகியும் கிச்சனுக்குச் சென்று பால் காய்ச்சத் தொடங்கினார். செல்லப் பிள்ளையாக வளர்ந்தாலும் வேலை என வந்தால் போதும் ஒரு நொடி கூட தாமதிக்காமல் மின்னலாக வேலை செய்வான் சரவணன்

  

பூஜை அறையை தயார் செய்துவிட்டு கிச்சனுக்குள் வந்தான், அவன் வந்த நேரம் பால் பொங்கவும் வைதேகி குலவை இட கூடவே சரவணனும் குலவை இட்டான்

  

”நல்ல நேரத்திலதான் பால் பொங்கியிருக்கு சரவணா” என மகிழ்ச்சியாக சொல்ல சரவணனும்

  

”சரி வாம்மா சாமி கும்பிட்டு நேரத்தோட சாமான்களை இறக்கி வைச்சிடலாம், டெம்போ காரனை அனுப்பனும்ல” என சொல்ல அவரும் சரவணனை ஏற இறங்கப் பார்த்தார்

  

”என்னப்பா இது நீ குளிக்கலையா”

  

”நேத்து குளிச்சேனே”

  

”இன்னிக்கு குளிக்கலையா”

  

”நான் எங்கம்மா நைட் தூங்கினேன், தூங்கினாதானே குளிக்கனும்”

  

”பூஜை செய்யனும்ல ஓடு போய் குளிச்சிட்டு வா” என பள்ளியில் பிள்ளைகளை அதட்டுவது

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.