(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

“என்ன அக்கா நீங்க இப்படி வேர்த்து ஓஞ்சிப் போய் வந்திருக்கீங்க, ஆட்டோல வரவேண்டியதுதானே”

  

”ஆட்டோக்காரன் சொல்ற பணத்துக்கு காய்கறியே வாங்கிட்டு வந்துடலாம் தம்பி, 2 தெரு தள்ளிதானே சந்தை இருக்கு, ஒண்ணும் பிரச்சனையில்லை, சுகர் இருக்குல்ல அப்படியே வாக்கிங் போக சொல்லி என் பொண்ணு சொன்னா அதான் நானும் வாக்கிங் போல போய்ட்டு காய்கறி வாங்கிட்டு வந்தேன்” என சொல்ல சரவணனும் உடனே பால் டம்ளரை நீட்ட அதில் இருந்து ஒன்றை வாங்கிக் கொண்டவர் முதலில் அதை குடித்து தனது சோர்வை மெதுவாக போக்கிக் கொண்டார்.

  

சரவணனோ வீட்டின் உள்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு

  

”அக்கா நீங்க மட்டும்தான் வீட்ல இருக்கீங்களா, வேற யாரும் இல்லையா அக்கா” என கேட்க அவரோ

  

”அவரு வெளியூர் போயிருக்காரு தம்பி, என் பொண்ணு ரூம்ல இருக்கா  போல இரு கூப்பிடறேன்”

  

”பரவாயில்லை அக்கா அவங்களுக்கான பால் டம்ளர் இங்கயே வைச்சிட்டுப் போறேன், அப்புறமா டம்ளர் கொடுங்க நான் கிளம்பறேன் அக்கா“

  

”இருப்பா இரு இரு இவ்ளோதூரம் பாசமா பேசற, என் பொண்ணை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் இருப்பா” என சொல்லிவிட்டு  உள் அறையைப் பார்த்தபடியே

  

“மலரு மலரு” என சத்தமாக அழைக்க

  

”அம்மா நான் குளிச்சிக்கிட்டு இருக்கேன்மா” என சொல்ல சரவணனோ இங்கிருந்துக் கொண்டே

  

”பரவாயில்லைங்க நீங்க பாட்டுபாடி மெதுவா குளிச்சிட்டு வாங்க, நான் பால் டம்ளரை வைச்சிட்டுப் போறேன், மறக்காம பாலை குடிச்சிடுங்க” என சொல்ல மலரோ

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.