(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

”டிவி சீரியலா எந்த சீரியலை சொல்ற” என கேட்க அவனும் ஒரு சீரியலின் பெயரை சொல்ல அவரின் முகம் மலர்ந்தது

  

”அந்த சீரியலை நீயும் பார்ப்பியா, எனக்கு அந்த சீரியல்னா ரொம்பப் பிடிக்கும் ஒரு நாள் விடாம பார்ப்பேன் தெரியுமா”

  

”நானும்தான் அக்கா அதுல ஒரு ஹீரோ வருவாப்லயே, அதுபோல நான் இருக்கேன்னு அம்மா சொல்வாங்க”

  

”ஆமாம் தம்பி ஒரு ஜாடையில பார்த்தா நீயும் ஹீரோ போலதான் இருக்க” என சொல்லிவிட சரவணனுக்கு வெட்கமாகிப் போனது

  

”என்னை ரொம்ப புகழாதீங்க அக்கா, எனக்கு வெட்கமா வருது”

  

“அடடே உனக்கு வெட்கம் கூட வருமா என் பொண்ணுக்கு வெட்கம்னா என்னன்னு கூட தெரியாது, அவள் வெட்கப்பட்டு நான் ஒரு நாளும் பார்த்ததில்லை” என சொல்லிவிட மலருக்கு கோபம் வந்தது

  

”அம்மா என்னம்மா இது இப்படி பேசிக்கிறீங்க ரெண்டு பேரும் கேக்க சகிக்கலை” என்றவள் சரவணனை பார்த்து

  

”இப்படியெல்லாம் அழுக்கா இன்னொருத்தர் வீட்டுக்குள்ள வரக்கூடாது, உன்னால கிருமிகள் பரவி எங்களுக்கு காய்ச்சல் வந்தா என்ன செய்றது ஆமா மாஸ்க் எங்க”

  

”மாஸ்க்கா அது வெளிய போறப்பதானே போட்டுக்கனும்”

  

”இப்ப நீ என்ன வெளியதானே இருக்க“

  

“இல்லையே நான் வீட்டுக்குள்ளதானே இருக்கேன்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.