அங்கு அவளின் தாய் சந்தியாவும் கோலம் போட வந்திருந்தார் இருவரும் பரஸ்பரம் பார்த்து சிரித்தபடியே
”எப்படியிருக்கம்மா”
”நீயில்லாம வீடே வீடா இல்லை”
”பக்கத்திலதானே இருக்கேன்மா”
”அதனாலதான் கொஞ்சம் ஆறுதலா இருக்கேன்”
”அப்பா எங்கம்மா”
”உள்ளதான் இருக்காரு ஆமா எங்க தம்பி இன்னும் எழலையா“
”அவரு எழுந்துட்டாரும்மா காபி போடறாரு”
”அவருக்கா”
”இல்லைம்மா எனக்கு” என சொல்லும் போதே சரவணன் வந்தான் காபி கப்புடன்
”மலரு மலரு இந்தா காபி குடி” என சொல்லி காபியை நீட்ட அவளோ
”இருடா கோலம் போட்டுட்டு வந்து குடிக்கிறேன்”
”நீ கோலம் போட்டு முடிக்கறதுக்குள்ள காபி ஆறிடும் நீ இதைக் குடி, கோலம்தானே நான் போடறேன்” என சொல்லியவன் உடனே காபி கப்பை அவளிடம் திணித்துவிட்டு கோலம் போடத் தொடங்க சந்தியாவோ தன் கணவரை அழைத்துக் காட்டினாள்
”பார்த்தீங்களா என்ன நடக்குதுன்னு”