(Reading time: 18 - 36 minutes)
சிறுகதை - சமையல்... சமையல்...சமையல்... - பிந்து வினோத்
சிறுகதை - சமையல்... சமையல்...சமையல்... - பிந்து வினோத்

சிறுகதை - சமையல்... சமையல்...சமையல்... - பிந்து வினோத்

   

ஹாய் ஃப்ரென்ட்ஸ், எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன்! அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

இந்த கதை... ஹ்ம்ம்... கதைன்னு சொல்ல முடியாது 😉. உண்மையில் ஒரு fan mail ஆக நான் எழுதியது இது!

எனக்கு இருக்க மிக பெரிய வீக்னஸ் சமையல் 😊 அதும் ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி எல்லாம பார்த்தீங்கன்னா ரொம்பவே மோசம்! அப்போ unexpected ஆக எனக்கு கிடைத்த ஒரு ஆன்லைன் ஃப்ரென்ட் ஒருத்தங்களை appreciate செய்ய நான் எழுதியது! இதை சிறுகதை செக்ஷன்ல போடலாமா வேண்டாமான்னு நிறைய யோசிச்சேன்... அப்புறம்... நம் அன்பை வெளிப்படுத்துற எழுத்துக்கள் எங்கேயும் இருக்கலாம், தப்பில்லைன்னு தோணிச்சு! அதான் இங்கே உங்களுக்காக!

படிச்சுட்டு ஒரு ஸ்மைல் செய்ங்க, அதுவே போதும் 😊!

   

சாந்தி பல்லைக் கடித்தாள். மனதில் பொங்கி கொண்டிருக்கும் கோபத்தை மற்றவர் அறியாது மறைக்க முகத்தில் தன் வழக்கமான ரெடிமேட் புன்னகையோடு இருந்தாள். தன்னை இங்கே இப்படி தனியே மாட்டி விட்டு விட்டு தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் கணவனை மனதில் திட்டி தீர்த்தாள்.

   

"உங்களுக்கு நிஜமாகவே கடலை பருப்புக்கும் துவரம் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாதா? பாவம்ங்க அரவிந்த்..." என்று ஒரு பத்தாவது முறையாக தன் கணவனுக்காக பரிதாபப்பட்ட கணவனின் நண்பனின் மனைவி வனஜாவை ஒரு பார்வை பார்த்து விட்டு ஈ என இளித்து வைத்தாள். இதே விதமான கேள்வி + பாவம் என்ற பேச்சை தான் கடந்த முக்கால் மணி நேரமாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

   

சாந்திக்கும் அரவிந்திற்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைய போகிறது. அவர்கள் மகள் காவியாவிற்கு 4 வயதாகிறது. சென்னையில் சாந்தியும் அரவிந்தும் கணினி துறையில் பணி புரிந்தனர். சாந்திக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தனர். கடைசி பெண் என்பதால் வீட்டில் மிகுந்த செல்லம். அரவிந்திற்கு ஒரு இளைய சகோதரன் மட்டும் இருந்தான். மகள் இல்லாத வீட்டில் மருமகளாக சென்றதால் அங்கும் அவளை அனைவரும் மகள் போலவே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.