(Reading time: 11 - 21 minutes)

வன் சொல்ல வருவது புரிந்தாலும் புரியாதது போல் “அப்படினா , நீ அப்போவே ? என்னை.... உனக்கு ... பிடிச்சு.... "

“ஆமாடி என் மக்கு பொண்டாட்டி "

“அப்போ நீ விரும்பிதான் என்னை கட்டிகிட்டியா ? நான் கூட ராதிகா கிருஷ்ணா சேரனும்காகதான் என்னை யேத்துகிட்டியோ நெனச்சேன் “ என்று சொன்னவள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் தாளாமல் கண்ணீர் சிந்தினாள் ...

“ஹே என்னடா இது ? இதுக்கு போயி அழுறியே ? எனக்கு உன்னை பார்த்ததுமே பிடித்தது .. ஆனா தங்கையின் தோழியை காதலிப்பது தப்புன்னு தோணிச்சு. அதுவும் நீ வேற கல்யாணம் ஆனபிந்தான் காதலிப்பேன்னு ராது கிட்டே சொன்னியாமே . அதுனாலேதான் நேராவந்து பெண் கேட்டுடேன் "

“இத ஏன்டா இவ்ளோ நாள் சொல்லலே ? எவ்ளோ சண்டை போட்டுருப்போம் ஒரு நாள் சொல்லிருந்தா சரி ஆயிருக்கும்ல "

“சரி ஆகிருக்கலாம்டா ... ஆனா அது ஒரு காரணத்துக்காக சொன்ன உண்மை மாதிரி ஆயிடும் . உன்மேல நான் கொண்ட காதலை ரொம்பே இயல்பா சொல்லனும்னு நெனச்சேன் . இன்னைக்கு நீ பாட்டு பாடினபோதே சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன் "

சரிசொல்லு"

என்னடா"

இப்போசொல்லு "

சொல்லிடவா"

சொல்லு "

நிஜம்மாசொல்லிடுவேன் "

ம்ம்ம்ம் "

மித்ராலவ்யு "

லவ்யுடூஅர்ஜூ "

....

றுநாள், கணவனின் இறுகிய அணைப்பில் விடுப்பட விருப்பமில்லாமல் விழிகளை மூடி இருந்தாள் சுமித்ரா .

“குட் மோர்னிங் குட்டிமா... இன்றைய நாள் உனக்கு இனிய நாளாக அமையட்டும் “ என்றபடி நெற்றியில் முத்தமிட்டான் அர்ஜுன் .

கணவனின் ஸ்பரிசத்தில் திருப்தி அடைந்த சுமித்ரா மகிழ்வுடன் அவனை அலுவலகத்திற்கு அனுப்பினாள். அப்போது

“சுமி "

“சொல்லு ராது "

“அப்பா போன் பண்ணாருடி "

“மாமா அத்தை எப்படி இருக்காங்க? "

“நல்ல இருகாங்க டி ...நம்ம நாலு பேரையும் இந்த வாரம் வீடுக்கு வர்ற சொல்றாங்க . அப்பாவுக்குதான் கொஞ்சம் மூட்டுவலி"

“ஹ்ம்ம் மாமா நல்ல ஓய்வெடுக்கணும் ராது . வயசாகுது அவங்களுக்கு . நம்ம கூடவே இருக்கலாம் தானே "

“அப்பாக்கு தொழில்தான் பிரதானம் சுமி . ரொம்பே கஷ்டபட்டு முன்னேறினார். அதுனாலே செய்யுறே தொழில விடகூடாதுன்னு பிடிவாதம்"

“அத்தைக்கு கஷ்டமா இல்லையா"

“இதை நான் அம்மாகிட்டே கேட்டேனே என்ன சொன்னங்க தெரியுமா "

“சொல்லு"

“அப்பா யாருக்காக உழைக்கிறார் நம்ம குடும்பத்துக்காக ... கண்ணே மணியே சொல்லி கொஞ்சுறது மட்டும் காதல் இல்ல. நாளைக்கு வரப்போற கஷ்டத்துக்காக இன்னைக்கே யோசிச்சு பார்த்து பார்த்து உழைக்கிறதும் காதல் தான் . காலையிலே அன்போடு வழி அனுப்புரதுலேயும் அவர் திரும்பி வரும்வரை வாசல் பார்த்து காத்திருகரதுலேயும் இருக்குறே அன்பு நாள் முழுக்க பேசிக்கிறது கூட இருக்காதுன்னு சொன்னங்க "

“எவ்ளோ உண்மை ..இதை புரிஞ்சுகிட்டா பிரச்சனயே இல்லேடி... நான்தான் அசட்டுத்தனமா அர்ஜுனை கஷ்டப்படுதிட்டேன்."

"ஹேய் அழாதேடி........... என்னடி ஜாஸ்தியா அழுறே "

“அடிபாவி சமாதனம் பண்றேன் நு சொல்லி வெங்காயம் வெட்டுன கையோடு கண்ணை துடைசிட்டியே "

“ஹாஹா சாரி டெக்னிகல் மிஸ்டேக் "

“இருடி உன்னை.............. "

சுமித்ராவுக்கு அவளின் தவறு புரிந்தது . அவள் கணவனின் காதலும் புரிந்தது. தனிமைதான் அவள் குழப்பத்திற்கு காரணம் . அந்த தனிமையை போக்க ஏதாவது செய்யணும்னு முடிவெடுத்தாள்... அன்றிரவு...,

“ஹேய் செல்லம் , வா போகலாம்"

“எங்க அர்ஜுன் ? "

“சொல்றேன் காருலே ஏறு "

“ஹே மணி இபோ பதினொன்றை தெரியுமா ? "

“தெரியும் சீக்கிரம் வா "

“சரி இபோ சொல்லு என்னை எங்க கடத்திட்டு போறே நீ ? "

“அடியே நான் உன் புருஷன் டி . கடத்திட்டு போறேன்னு சொல்றே "

“அதெல்லாம் அப்படிதான் ... "

“ஹேய் இந்த நேரத்துலே கடற்கரைக்கு ஏன்டா ? "

“ஷ்ஷ்ஷ்ஷ்..... 3.....2......1...... ஹாப்பி எனிவேர்சரி பொண்டாட்டி ... வளர்பிறையான என் வாழ்வு வெண்ணிலவு உன்னாலே பௌர்ணமி ஆகி இன்னையோடு 3 மாசம் ஆச்சு .... இது என்னோடு பரிசு பிரிச்சு பார் ..... பாருடா .............. ஹே குட்டிமா அழாதேடி ..... "

“ஐ லவ் யு கண்ணா ..... நீதான் எனக்கு பெரிய பரிசு ... நீ ஒருவன் போதும் எனக்கு ..உன்னை நான் எவ்ளோ ஹுர்ட் பண்ணிட்டேன் . எத்தனை தடவை சண்டை போட்டுருப்பேன் . உன்னை புரிஞ்சுகாமே ... ஐயோ "

“அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்ல. எனக்கு நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும். அது போதும். பழசை மறந்துடலாம் தங்கமே . இப்போ இந்த பரிசை திறந்து பார் "

“ஹை இந்த புடவை ...நான் அன்னைக்கு கடையிலே அழகா இருக்குனு சொன்னேனே அதுதானே "

“ஆமா என் விலைமதிப்பில்லாத தேவதைக்கு என் பரிசு "

“திருடா நானும் ஒரு பரிசு வெச்சுருக்கேன் ... "

"தெரியுமே” என்றபடி கன்னத்தை காட்டினான் அர்ஜுன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.