(Reading time: 11 - 21 minutes)

ய்யே அதில்லை ... கையிலே என்னடி கொண்டு வர்றேன்னு கேட்டியே ... நீயே திறந்து பாரேன் .."

சுமித்ராவின் பரிசை திறந்து பார்த்தான் அர்ஜுன் .

அழகிய மழலையை கைகளில் ஏந்தி தனது கணவனின் மார்பினில் சாய்ந்திருபதுபோல் ஓர் ஓவியம் தீட்டி இருந்தாள் சுமித்ரா .

“சுமி .... மித்ரமா ...நிஜம்மாவாடா? "

“ம்ம்ம்ம் "

“எனக்கு எவ்ளோ சந்தோசம் தெரியுமா “என்றபடி அவள் முகமெங்கும் முத்தமிட்டான் அர்ஜுன் .

“சுமி எனக்காக இப்போ ஒரு பாட்டு பாடுடா "

ப்பறம் என்ன சுமி பாட்டு பாடிட்டு இருப்பாங்க .., இருங்க இருங்க நம்ம ராதிகா என்ன ஆனாங்க பார்ப்போம்.... இங்க இவங்க ரெண்டு பேரும் கடற்கரையிலே இருக்குறே அதே நேரம், அர்ஜுன் வீட்டில்,

“போடா, நீ சரி இல்ல . என் மேல காதலே இல்ல . ரெண்டு நாளுனா சரியாய் ரெண்டு நாளு கழிச்சுதான் வருவியா ...? உனக்காக ஒருத்தி காத்துகிட்டு இருக்கேனேன்னு அக்கறை இருக்கா ?"

“ஹேய் கண்ணம்மா உன் அண்ணா இந்த நைட் நேரத்துலே எங்க போறார் ? "

“ஹ்ம்ம் அவருக்கு கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு அதுனாலே அவர் பொண்டாட்டி கூட வெளிய போறார் . அவருக்கு மட்டுமா இன்னைக்கு கல்யாண நாள் ... நமக்கும்தானே அது உனக்கு ................... ஹேய் அண்ணா வெளிய போறது உனக்கு எப்படி தெரியும் ? "

“ஹஹ கட்டின கணவனை வாசலில் நிற்க வைத்து கேள்வி கேட்கும் என் பொண்டாட்டியே கதவை திறடி "

“ஏய் மக்கு மக்கு ஏன்டா முன்னாடியே சொல்லாம என் கிட்டே திட்டு வாங்குறே ? இரு வரேன் ... அய்யய்யோ சாவி என் கிட்டே இல்லையே "

“அடிப்பாவி ............... இப்போ நான் எப்படி வருவேன் ? "

“ஹஹ அழாதே பின்பக்கம் மாடிப்படி ஏறி வா ..நான் பின்கதவு திறக்குறேன் "

“கட்டுன புருஷன் கள்ள புருஷன் ஆகிட்டேனே ..கடவுளே "

"உதைபடுவே ... சீக்கிரம் வா "

“ஹாய் பொண்டாட்டி ... ஹே அங்கே பாரு பௌர்ணமி நிலவு .... ஞாபகம் இருக்கா? "

“மறக்க முடியுமா என்கிட்டே சவால் போட்டு நடுராத்திரி என் வீடுக்கு வந்தியே "

“நீ கூட வெட்கப்பட்டுகிட்டே எனக்கு ............ "

“ஏய் ஏய் அதுக்கு முன்னாடியே நீ என் அண்ணா கிட்டே மாட்டிகிட்டியே ..கதை விடாதே "

"ஹ்ம்ம் ஆமாம்டா அன்னைக்கு உன் அண்ணா கிட்டே அதுகப்பரும் உன்கிட்டே மாட்டிகிட்டேன் "

“ஹேய் ஏதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேசு "

“ஹா ஹா இனி பேச மாட்டேனே "

“அப்போ பாடு "

“ஹ்ம்ம் பாடிருவோம் ..."

நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்

காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்

இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல்

மனம் கலங்கி புலம்புகிறேன்;

கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2)

கர்வம் அழிந்ததடி.. என் கர்வம் அழிந்ததடி

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே..

இதே அழுத்தம் அழுத்தம்.. இதே அணைப்பு அணைப்பு

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே..

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

சின்னச் சின்ன அத்து மீறல் புரிவாய்

என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்

மலர்கையில் மலர்வாய்

பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்

நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்

சத்தமின்றி துயில்வாய்

ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணெய் பூசி

சேவகம் செய்ய வேண்டும்

நீ அழும்போது நான் அழ நேர்ந்தால்

துடைக்கின்ற விரல் வேண்டும்

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே..

நேற்று முன்னிரவில் உன் நித்திலப்பூ மடியில்

காற்று நுழைவது போல் உயிர் கலந்து களித்திருந்தேன்

இன்று பின்னிரவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பது போல்

மனம் கலங்கி புலம்புகிறேன்;

கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2)

கர்வம் அழிந்ததடி.. என் கர்வம் அழிந்ததடி

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் (2)

நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்

காதில் கூந்தல் நுழைப்பேன்

உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்

நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்

உப்பு மூட்டை சுமப்பேன்

உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து

கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்

வேளைவரும் போது விடுதலை செய்து

வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு சிநேகிதனே..

இதே அழுத்தம் அழுத்தம்.. இதே அணைப்பு அணைப்பு

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே..

சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவி கொடு "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.