(Reading time: 7 - 13 minutes)

ஸ்வேதாவும் சாமுவேலும்

ரிய பவன் , எண். 6 , சாய் சரவணா தெரு,அண்ணா நகர் ,சென்னை - இங்கு தான் மிக அதிக வேகத்தில் , மிக நன்றாகவே துள்ளி ஓடியது ஸ்வேதா & சாமுவேல் காதல்.

Swethavum Samuelmஸ்வேதா - இவள் இயல்பானவள் , அழகானவள் , மென்மையானவள்.அமைதியான பெண்களுக்கு இருக்கும் பழக்கம் இவளுக்கும் உண்டு. ஆம் , கோபம் வருவது அரிது ஆகினும் கோபம் வந்துவிட்டால் அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டாள்.

சாமுவேல் - சிலந்தி மனிதன் போல் பெரிதாய் சொல்லி கொள்ள எதுவும் பவர்ஸ் இல்லை என்றாலும் நல்லவன் , நிதானமானவன்.

மதிய சாப்பாட்டு நேரம் என்றால் , சாமுவேல் எப்பொழுதும் செல்லும் ஒரே இடம் "ஆரிய பவன்". அங்கு கிடைக்கும் ரசத்துக்கு அவன் அவனது வீட்டு பத்திரத்தை அடகு வைத்தால் கூட ஆச்சரிய படுவதற்கில்லை.

கஸ்ட் ஆறாம் தேதி , பொழுது நன்றாகவே விடிந்தது. ஸ்வேதா & சாமுவேல் ஹோட்டலில் நுழைந்ததும் ஹோட்டல் அதிபர் ஒரு சிநேகமான புன்னகை தருவது வாடிக்கை. அவர்களின் வருகை நூறாவது நாளை தாண்டிய சூப்பர் ஹிட் படம் போன்றது.

ஸ்வேதா : tax ரிட்டர்ன் பதிவு பண்ணியா?

சாமுவேல் : நாளைக்கு கோச்சடயான் படம் ரிலீஸ் ஆகுது.

ஸ்வேதா : இன்டர்நெட் பில் கட்டினியா?

சாமுவேல் : ஹோசனா பாட்டுல த்ரிஷா was beautiful na ?

ஸ்வேதா : இல்ல horrible ...

சாமுவேல் : ஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ் .. my heart bleeding ...

ஸ்வேதா : அவ beautiful தான் , உன்னோட tax பில் , bsnl பில் தான் horrible

சாமுவேல் சர்வரிடம் : அண்ண, கொஞ்சமா சாதம் போடுங்க ...

அவனது அழைப்பை கேட்டு சர்வர் ராமன் சாதம் பரிமாறினார். 

"அண்ண , அப்டியே இவன இந்த ஹோட்டல்ல மாவாற்றதுக்கும் வெச்சுகோங்க என்று ஸ்வேதா தன்னுள் நினைத்துகொண்டால்.

சாமுவேல் : அண்ண , அதிகமா வேண்டாம் , கொஞ்சமா போடுங்க ...

இந்த வார்த்தைகளை கேட்ட சர்வர் சுந்தரம் , தூரத்திளிரிந்து சொன்னார்

"டேய் , கொஞ்சம்னா கரண்டில கால் சாதம் , சரியா" ..

ஸ்வேதா : என்ன டா நடக்குது இங்க .. உங்க அம்மா கூட இவ்ளோ அன்பா சொல்ல மாட்டாங்க போல .. சுந்தரம் அண்ணா கிட்ட எவ்ளோ காசு குடுத்த ?

சாமுவேல் : ச்ச ச்ச .. இது உண்மையான அன்பு ...

சர்வர் சுந்தரம் சர்வர் ராமனிடம் கூறினார் "நான் அங்கயே பார்த்தேன்... சாமுவேல் தம்பி கொஞ்சம்னு சொன்னா , கரண்டில கால் சாதம் தான் எடுக்கணம் .. நீ போ நா போடறேன்" .. 

சாமுவேல் : அண்ண, அதிகமா வேண்டாம் ..

சர்வர் சுந்தரம் : தம்பி , எப்பவுமே நான் தான் உங்களுக்கு சாப்பாடு  போடுவேன் ... எனக்கு தெரியாதா எவ்வளவு போடம்னம்னு ...

சாப்பாடு போட்டவுடன் ...

சர்வர் சுந்தரம் : பாருங்க எவ்ளோ கரெக்ட்'a போட்டுருகேன்னு ...

ஒரு அப்பாவிதனமான புன்னகையுடன் அன்றைய மதியம் நன்றாக முடிந்தது ...

சில நாட்களுக்கு பின் ...

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதற்கு ஏற்ப , நாட்கள் நகர நகர ,ஸ்வேதா சாமுவேல் காதலில் ஒரு வித கசப்பு தோன்றியது.

கொஞ்ச காலத்தில் , ஸ்வேதா சாமுவேல் இருவருக்கும் மெலிதாக இருந்த விரிசல் சற்று அதிகமானது.

செப்டம்பர் ஆறாம் தேதி இருவரும் ஒரு காபி ஷாப்'இல் சந்தித்து கொள்ள முடிவு செய்தனர் ...

அந்த சந்திப்பு அவர்களுக்குள் விரிசலை இன்னும் அதிக படுத்தியது. இருவரும் விடைகுடுக்கும் வேலையில் மோதி கொண்டனர்.

ஸ்வேதா : உன்னயெல்லாம் காதலித்தேன் என்று நான் வெக்க படறேன்.

சாமுவேல் : டென்ஷன் ஆகாத, நம்ம ரெண்டு பேருக்கும் செட் ஆகல , உன்ன போய் எப்டி லவ் பண்ணேன் என்று எனக்கே தெரில ...

ஸ்வேதா : first , உன் நம்பர்'அ  டெலிட் செய்யணம் ...

சாமுவேல் : உன்ன பத்தியெல்லாம் எனக்கு கவலை இல்ல ... good bye ...

ஸ்வேதா : தொலஞ்சு போ ..

கண்ணீர் கடல் போல் பெருக , ஸ்வேதாவும் சாமுவேலும் பிரிந்தனர்.

ஸ்வேதா , அழுகையை கட்டுபடுத்திகொண்டு வீட்டிற்கு சென்றால்.

வழக்கம் போல் முகம் கழுவிய பிறகு , ஸ்வேதாவிடம் ஸ்வேதாவின் அம்மா பேச தொடங்கினாள்.

அம்மா : உனக்கு நம்ம மாமா மகன் கோகுல் தெரியும்ல .. அவன் U.S 'ல வேலை பார்கிறான். உனக்கு ஓகே'னா fix பண்ணிடலாம்.

சாமுவேல் மேல் அதிக கோபத்தில் இருந்த நிலையில்,ஸ்வேதா தன்  சம்மதத்தை தெரிவித்தாள்.

ஸ்வேதா: எனக்கு ஒகே  பிக்ஸ் பண்ணிடுங்க..

ஸ்வேதா'வின்  அம்மா சந்தோஷமாக நிச்சயதார்த்த வேலைகளில்  இறங்கினால்...

சாமுவேல் வீட்டிலும்  இதே வார்த்தைகள் ஒலித்தன...

சாமுவேலின்  அம்மா : என்னோட friend பொண்ணு பேர் ஜோசெளின்.  ரொம்ப அழகா இருப்பா.. அவள கல்யாணம் பண்ணிகரியடா ..?

சாமுவேல் : சரிமா  ... டபுள் ஓகே ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.