(Reading time: 7 - 13 minutes)

வ்வாறாக இருவரும் பிரித்து இரண்டு நாட்களான பிறகு ,...

ரு நாள் ...

சாமுவேல் அவனது கம்ப்யூட்டர் டேபிலில் ஒரு அன்பளிப்பு இருப்பதை  கண்டான் ...

அது அவன் ஸ்வேதாவிற்காக வாங்கிய மோதிரம் என்பது அவன் நினைவிற்கு வந்தது ..

சாமுவேல் நினைத்தான் "அவ என்ன ரிஜெக்ட் பண்ணதுக்கு எதாவது  பழி வாங்கணும்"

"நல்ல ஐடிய , அவளுக்கு வாங்கின இந்த மோதிரத்த ஜோசெளினுக்கு கொடுத்துடுவோம்"

திருப்தி பெருமூச்சுடன் அவன் இதை நினைத்து கொண்டிருந்த வேலையில் , ECR ரோட்டில் ஒரு வெள்ளை நிற கார் மிக வேகமாக ஓடியது..,

அந்த காரில் ஸ்வேதாவும், அவள் திருமணம் செய்யவிருக்கும், அவள் மாமா பயன் கோகுலும் இருந்தனர்.

கார் ஓட்டியபடியே கோகுல் ஸ்வேதாவிடம் சொன்னான்... : லஞ்ச் டைம் வேற, என்னக்கு ரொம்ப பசிக்குது, எங்க போகலாம்"

ஸ்வேதா நினைத்து கொண்டால், " ஒரு கவலையும் இல்லாமல் என்னை காய படுத்திய  சாமுவேலை நானும் ஏன் காய படுத்த கூடாது.

கோகுலுடன் நான் இருப்பதை பார்த்தால் அவன் என்னை மிஸ் பண்ணதை நினைத்து feel பண்ணுவான் "

இந்த நினைவுகள் அவள் மனதினுள் எழுந்த அதே தருணத்தில் அண்ணாநகரில் இருக்கும் சாமுவேலின் கைபேசி சினுங்கியது..

மறுமுனையில் ஜோசெளின் ...

"ஹாய் ஜோசெளின் , நம்ம இன்னிக்கு மீட் பண்ணலாமா?" என்றான் சாமுவேல்.

"ஓகே. எங்க மீட் பண்ணலாம்" என்றால் ஜோசெளின்.

இதே தருணத்தில் ..

ECR  சாலையில் காரில் எங்கு லஞ்ச்க்கு  போகலாம் என்று கேட்ட கோகுலிடம் விடையளித்தால் ஸ்வேதா ...

"அண்ணா நகர் ஆரிய பவன்" ...

அதே தருணத்தில் , "அண்ணா நகர் ஆரிய பவன்" என்று ஜோசெளினிடம் கைபேசியில் பதில் அளித்தான் சாமுவேல் ...

வழக்கத்திற்கு மாறாக வானிலை இடி மழையுடன் இருண்டு காணப்பட்டது .

புயலென வீசிய காற்றில் , சீறி பாய்ந்த மழை துளிகளை துளைத்துகொண்டு ஆரிய பவன் ஹோட்டல் முன் நின்றது இரண்டு கார்கள்.

சாமுவேலும் ஜோசெலினும் காரிலிருந்து இறங்க ... ஸ்வேதாவும் கோகுலும் அவர்கள் காரிலிருந்து இறங்கினர்.

இயற்கை நிர்ணயம் செய்தது போல் சாமுவேல் அமர்ந்த நான்காம் டேபிளின் வலது புறம் உள்ள ஐந்தாம் டேபிளில் ஸ்வேதாவும் கோகுளும் அமர்ந்தனர்.

இயல்பாக சாமுவேல் வலது பக்கம் பார்க்க , ஸ்வேதா கோகுலுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.

சாமுவேலை ஜோசெளினுடன் பார்த்த ஸ்வேதாவுக்கு , பகை உணர்ச்சியில் பொறாமை எனும் நெய் ஊற்றியது போல் ஆனது.

சிறிது நேரத்திற்கு பிறகு சாமுவேல் சர்வர் ராமனை நோக்கி கேட்டான் "அண்ண, கொஞ்சமா சாதம் போடுங்க".

சர்வர் ராமன் பக்கத்தில் வந்ததும் சாமுவேல் அவரிடம்

"சுந்தரம் அண்ண எங்க?" என்று கேட்டான்.

"உங்க பேர் என்ன" என்று சர்வர் ராமன் கேட்டார்.

"சாமுவேல்" என்று சற்று தயக்கத்துடன் சாமுவேல் பதில் கூறினான்.

"ஒ நீங்க தான் சாமுவேலா , ஒரு நிமிடம்" என்று சொல்லி , தனியாக வேறு ஒரு கரண்டியில் தயாராக இருந்த கால் அளவு சாதத்தை சர்வர் ராமன் பரிமாற வரும் வேலையில் சாமுவேல் மறுபடியும் கேட்டான்

"சுந்தரம் அண்ண எங்க?"

நிலைமை சற்று இறுக்கமாக மாற , நான்காம் டேபிளில் இருந்த சாமுவேலும் ஐந்தாம் டேபிளில் இருந்த ஸ்வேதாவும் சர்வர் ராமின் பதிலை எதிர் நோக்கி இருந்தனர்.

சர்வர் ராமன் இவ்வாறாக பதில் கூறினார்

"இன்னிக்கு காலை 11:30'க்கு அவர் இறந்துட்டார்... ஹார்ட் அட்டாக் .."

"இந்த கால் அளவு சாதத்தை எடுத்து வெச்சு "சாமுவேலுக்கு போட்டுடு"னு சொல்லிட்டு ... தண்ணி வேணும்னு கேட்டார் .. தண்ணி கொடுகறதுக்குள்ள  அவர் உயிர் பிரிஞ்சிடுச்சு".

அதிர்ச்சியில் நடுங்கிய கைகளுடன் சாமுவேல் ஸ்வேதாவை பார்க்க ...

இருவறது கண்களும் பேசி கொண்டன .

ஸ்வேதாவின் கண்களிலிருந்து சில கண்ணீர் துளிகள் விழ ....

சர்வர் சுந்தரத்தின் உண்மையான அன்பை நினைத்து சாமுவேல் தலை குணிய ..

இயற்கை மெலிதாய் இவ்வார்த்தைகளை பேசியது "நிலைத்து நிற்பதே உண்மையான அன்பு".

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.