(Reading time: 3 - 5 minutes)

விருப்பம்

ன் பள்ளிப்படிப்பிற்கு விடைக்கொடுத்த துள்ளலிலும், தன் கனவுகளை நனவாக்க அடுத்த அடியை எடுத்து வைக்கபோகும் உற்சாகத்திலும், தன் பள்ளித் தோழர்களை பிரியப்போகும் சோகத்திலும், தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருந்தான் முகுந்தன்....... சொந்தங்கள், தெரிந்தவர்கள் என்று பலர் பலவிதமான கருத்துகணிப்பை நடத்திவந்தனர்..

Viruppam‘கடவுளே!... சீக்கிரம் முடிவுகள் வரவேண்டும்... எனக்காக மட்டுமல்ல, இந்த விவாதங்களில் இருந்து என் பெற்றோரையும் காப்பாற்ற வேண்டும்......... அதற்காகவாவது சீக்கிரம் முடிவுகளை வெளியிட வேண்டும்......’ அவனது தினசரி பிரார்த்தனைகளில் மிக முக்கிய பிரார்த்தனையாக இது இருந்தது...... ஒருவழியாய் தேர்வு முடிவுகளும் வெளிவந்தன..... முகுந்தன் மதிப்பெண்கள் தூள் கிளப்பியிருந்தான... என்ன படிக்க வேண்டும் என்று முன்பே திர்மானித்திருந்ததால், எங்கு படிக்கலாம் என்பதே அவனை குழப்பி கொண்டிருந்தது... முடிவு வந்த நாளே அவனது தந்தை, பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பம் வாங்கிவந்து, அவனை சந்தோஷப்படுத்தியவர், இறுதியில் அவர் சேர்க்கும் பிரிவில் தான் படிக்க வேண்டும் என்று இரும்பு பிடியாயிருந்தார்...

இரண்டு நாட்களுக்கு பிறகு,

ணிக்குசென்று திரும்பியிருந்த அவனது தந்தை தொலைக்காட்சியில் ஊர்கதையை பார்த்துக்கொண்டிருந்தார்.... அப்பொழுது அவரது நண்பர் அவரைத் தொலைபேசியில் அழைத்து பேசினார்... ஆரம்பத்திலேயே அதிர்ச்சியடைந்தவர், அவர் பேச பேச உறைந்து விட்டார்...

“ஏன்பா ரவி, உனக்கு சேதி தெரியுமா?... நம்ப சுரேஷின் பையன் தற்கொலை செய்துக்கொண்டான்........”

“என்ன.... என்னப்பா சொல்றே?.... “

“அட... ஆமாப்பா..... அதை தற்கொலைனு சொல்றதை விட கொலைன்னே சொல்லலாம்.......”

“விளையாடதேப்பா... விஷயத்தை சொல்லு......”

“நம்ம சுரேஷின் மகன் படிக்கும் படிப்பு பிடிக்காமல், அதில் நாட்டமில்லாமல், மனம் வெறுத்து செத்துட்டான் ......... அவனுக்கு வணிகவியல் படிக்க ஆசை... அவன் அப்பனுக்கு அவனை என்ஜினியர் ஆக்கணும்னு ஆசை.. மகனின் ஆசைக்கு தலையசைக்காதவர், அவனை ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்த்து விட்டார்... தகப்பனோட ஆசையை விட படிக்கும் பிள்ளையோட விருப்பம் தானே மிக முக்கியம்..... அந்த முக்கியத்துவத்தை சுரேஷ் கொடுக்க தவறிட்டான்.. அதனால், அவன் புள்ளை தவறிட்டான்...... “ அதற்கு மேல் அந்த நண்பர் பேசியதேதும் கேட்கவில்லை.... அவர் மேலே சொன்ன அந்த வரிகளே ரவியை நன்றாய் தாக்கியிருந்தது.....

ண்பர் மகனின் இறுதி சடங்குகளை முடித்துவிட்டு வந்தவர்... கையோடு தன் மகனை அழைத்து ‘என்ன படிக்க விரும்புகிறாய் ?’ ‘ எங்கு படிக்க விரும்புகிறார்?’.... என எல்லாவற்றையும் கேட்டுத்தெரிந்து கொண்டு அவனது விருப்பபடியே சேர்த்து விட்டாருன்னா பாருங்கோளேன்....

குறிப்பு: இதனால் நாட்டுமக்களுக்கு சொல்லும் சேதி என்னனா, நம்ம புள்ளைங்க ஆச படுற படிப்ப படிக்க வையுங்க.... அவங்க விருப்ப படுற படிப்பு அவங்களுக்குள்ளே எந்தாளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு சேர்த்துவிடுங்கோ.... அப்போ தான் அவங்களோட வாழ்க்கை ஒளிமயமாய் இருக்கும்........ என்ன நான் சொல்லறது.........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.