(Reading time: 12 - 23 minutes)

அன்று ஒரு நாள்

காலை 9.30 - சென்னை

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

பூரணி - என்னடி 9 மணிக்கே , என்ன ஸ்பெஷல் ....

Andru oru naalரேணு - ஹலோ மேடம்... கொஞ்சம் ஓவரா தெரியல ... ஹ்ம்ம் ...நீ ஏன் சொல்ல மாட்ட நாளைக்கு காலேஜ்'ல மீட் பண்றதா ஒரு பிளான் இருக்கு தெரியுமா ... இல்லையா ??? hope u remember ....

பூரணி - என்னமா ஆபீஸ்'லய ?? ஒரே இங்கிலீஷ் தான் வரும் போல ..

ரேணு - இப்போ எதுக்கு இந்த வெட்டி ஜோக்... சொல்லுடி வர தானே ???

பூரணி - y ma tension , வராம எங்க போவேன் .. ஏண்டி அந்த லூசு என்ன சொல்றா .. வரலையா ?? செம பிஸி போல... ரெண்டு நாள் போன் பண்ணவே இல்ல ... ஹ்ம்ம்

ரேணு - இருடி அவளை conference call பண்றேன் ...

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

மீரா - ஹலோ .. என்னடி யாச்சு early morning call ..... as usual பூரணி வரலையா....?? எனக்கு தெரியும்டீ கடைசி நேரத்துல... இப்டி தான் அவள் .. இப்போ என்னவா ப்ரொப்லெம் அவளுக்கு..... காலேஜ் complete பண்ணி 6 months ஆச்சு ... இந்த caution deposit பேர்ல மீட் பண்லாம் நினைச்சேன்... ச.....

ரேணு - ஹ ஹ அஹ அஹ

மீரா - என்னடி ???

ரேணு - 30 secs டைம்'ல எவ்ளோ பேசுற ... எவ்ளோ டென்ஷன் ... ஹ ஹ எப்படிடி .. இப்டி எல்லாம் ....

பூரணி - ஹலோ என்னபா நடக்குது இங்க .... மீரா என்னடானா பேசிட்டே போற ... அதுல ரேணு உனக்கு வேற சிரிப்பு வருதா .. நாளைக்கு வருவ இல்ல பாத்துக்கறேன்.. ஹ்ம்ம்

மீரா - சாரி டி .......

பூரணி , ரேணு - ஹ ஹ அஹ ..

மீரா - நீ வரமாட்டியோன்னு நினைச்சு தான் .. சாரி டி..

பூரணி - விடு செல்லம் .. நாளைக்கு treat மட்டும் மறக்காம கொடுத்திரு என்ன ??

மீரா - oh ! started .... போடி பார்க்கலாம்... i am so excited to meet you girls .... அப்புறம் பார்த்து வாங்க என்ன ... நைட் travel வேற .. be careful ok ... பஸ் ஸ்டார்ட் பண்ணதும் கால் பண்ணு என்ன .... reached office bye ...

பூரணி - ரேணு 'மதர் இந்தியா' போன் கட் பண்ணியாச்சா ???

ரேணு - பாவம் டி அவ.... உன்ன திட்றதுல தப்பு இல்ல .... டேக் கேர் ... பாய்

பூரணி - ஹ ஹ அஹ bye

மாலை - 6.45 p .m

மீரா பெங்களூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள் ... பஸ் டைம் 7.30 தான் ... என்று எண்ணி கொண்டே ரேணுவை அழைத்தாள் . இதை எதிர்பார்த்த ரேணு,

சொல்லுமா ஏறியாச்சா ...

மீரா வெயிட் பண்றேன்டி ... நீ கோயம்புத்தூர் bus stand வந்தாச்சா ...

நான் பஸ் ஏறிட்டேன் மீரா .....

மீரா அவளது அறிவுரை படலத்தை துவக்கினாள் ...

ஏய் ரேணு யார் கூடேயும் பேசாத ,,, இரவில் travel வேற .. வாய் பார்க்காம ஒழுங்கா வா என்ன ......

ரேணு புன்னகையுடன் 'உத்தரவு' என்றாள்......

சிறு மௌனத்தின் பின் வைக்கவா என்று மீரா கேட்க ...

ஏய் நீ இப்போ பூரணிக்கு தான போன் செய்ற ..... நான் நீ பேசனத record பண்ணிட்டேன் ... சோ நானே சொல்லிடறேன் என்ன ???

மீரா சிரிப்புடன் இணைப்பை துண்டித்தாள் ......

மீரா ஒரு முறைக்கு பத்து முறை platform உறுதி செய்து கொண்டாள் .... அங்கு பூரணி'யோ ரேணுவை,

என்னடி மதர் இந்தியா போன் பண்ணியாச்ச ....

ரேணு - ஹ ஹ அஹ . உனக்கு தான் தெரியுமே.. அவளை மாற்ற try பண்லாம் .. பட் கொஞ்சம் கஷ்டம் ..... என்ன பண்றது அவளுக்கு இறைவன் நம்பிக்கை கொடுக்கணும் .... நம்ம மட்டும் ட்ரை பண்ணா அது வேஸ்ட் டி .... அவள் வாழ்கைல ஏற்ப்பட்ட கசப்பான அனுபுவங்கள் அவளை யாரேயும் நம்ப முடியாமல் போயிற்று ...

பூரணி - அவள் இப்டி மொத்த குடும்பத்தையும் யோசிக்குறா .. அவங்க யாரும் இவள பத்தி பெருசா யோசிக்ற மாதிரி இல்ல ... எப்போ பாரு குத்தி பேசுவதும் .... ச்ச .... என்னடி நீ இருக்கிய ??

ரேணு - ஓகே டி நாளைக்கு அவ கிட்டயே கேட்கலாம் என்ன ???

பூரணி - உடனடி பதில் வருமே .. "அவங்க என்ன எடுத்து வளர்த்தாங்க அவங்களுக்கு வேண்டி எத வேணாலும் செய்வேன் "..... ஹ்ம்ம்

ரேணு - நீ எங்க பஸ்'லய ??

பூரணி - ஏய் .. சும்மா பேசாதடி .. எனக்கு லூசு கொஞ்சம் தையிரமா , நம்பிக்கையோட , சுதிந்தரமா இருக்கணும் என்று ஆசை அவ்ளோ தான்.ஹ்ம்ம்

ரேணு - எனக்கு உன்ன தெரியாத ....ஹ்ம்ம் ...நான் பஸ் ஏறிட்டேன் டி(கோயம்புத்தூர் டு காலிகட் ) .... நீ ?

பூரணி - நானும் தான் . (சென்னை டு காலிகட் ) லூசு ??

ரேணு - அவளுக்கு 7.30 பஸ் .. வந்திருக்கும் டி ... பாய் டியர்

பூரணி - பாய் டி

மீரா - நேரத்தை கண்டவுடன் திகைத்தாள் ... ச்ச என்ன இது ...இன்னைக்கு பார்த்து இந்த பஸ் இவ்ளோ தாமதமா ....நேரம் ரெக்கை கட்டி பறந்தது ... 9..... 9.30..... பொறுமை இழந்தாள் மீரா ... enquiry யில் மீண்டும் கேட்க அவரும் தனது எரிச்சலை மீராவிடம் காட்டினர் ...

என்னம்மா நீ பத்து நிமஷதுக்கு ஒரு தடவ வந்து கேட்ட பஸ் வராது .. போ மா பொய் வெயிட் பண்ணு என்றார் .....

அங்கிருந்த ஒரு அங்கிள் அவளிடம் வந்து விவரம் கேட்டு அறிந்தார் .... பிறகு அவர் அவளிடம் பஸ் என்றும் platform உள்ள வராது .. வெளிய இருக்கு அது தான் பஸ் .. போ மா ..... அவரிடம் தன் நன்றியை தெரிவித்து விடை பெற்றாள்... பஸ் கண்டக்டர் டிக்கெட் பார்த்து ஏறி அமர சொன்னதும் மீரா சுவாசம் நன்றாக வந்தது ... 3 மணி நேரம் நின்றதினால் ..கண்களை மூடி கொண்டாள் ...... தன்னை யாரோ அழைப்பதை உணர்ந்த மீரா கண் திறந்தாள் .. அங்கு நல்ல உயரத்தில் ஒருவன் அவளிடம் பேச முயற்சி செய்ததை உணர்ந்து கண் மூடினாள் ..

அவன் மீண்டும் அழைத்து,

'தாங்கள் இருப்பது என்னுடைய seat என்றான் ....

மீரா நம்பாமல் அவனை பார்த்த போது .. டிக்கெட் அவளிடமே நீட்டினான் .... அதை வாங்கியதும் அவளுக்கு கை கால்கள் விரைப்பதை போல் உணர்ந்தாள் ... கண்ணில் நிறைந்த நீரினால் பார்வை மங்குவதை உணர்ந்தாள் ...

மெதுவாக அவனுக்கு வழி விட்டு கண்டக்டர் நாடி சென்றாள்... கண்டக்டர் மீண்டும் ஒரு முறை பரிசோதித்து மீராவின் பஸ் போயி ஒரு மணி நேரம் ஆகிவிட்டது என்றார் ..... அதிர்ச்சியில் மீரா அடக்க முடியாமல் அழ துவங்கினாள் ... பக்கத்துக்கு சீட்டில் இருந்த ஒரு வாலிபன் அவளிடம் விவரம் கேட்க, முகத்தை திருப்பி கொண்டாள்...

ஆனால் நேரம் 10.30 என்றதும் அவள் பயந்து போனாள் ... பஸ் ஏறிய அனைவரும் அவளிடம் அழ வேண்டாம் என்றும் .. மேலும் ஒரு வயதான தம்பதியினர் கண்டக்டர் அழைத்து இந்த பஸ்சில் ஒரு seat arrange செய்ய கோரி அதை அவர் ஒப்பு கொள்ளவும் அனைவரும் ஆனந்தமாக விவரம் கூறினர் . கண்டக்டர் அவளிடம் வந்து முதல் சீட்டில் அமரும் படி கூறி சென்றார் ...... மற்ற பயணிகளை நினைக்கையில் அகம் மகிழ்ந்தாள் மீரா.... ஒரு கஷ்டம் என்றதும் எத்தனை பேர் அவளுக்கு உதவினர் ... இறைவினிடம் நன்றி கூறி கண் மூடினாள் ...

கண்டக்டர் அவளை அழைத்து டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார் ... அவள் தன் கைப்பையை திறந்து பார்கையில் அவளுக்கு இரண்டாவது முறையாக பூமி கால் கீழில் நழுவதை உணர்ந்தாள் ..

ந்த வாலிபன் மீண்டும் அவளிடம் விவரம் கேட்கவும் , ஒரு கணம் இவன் என்னை பார்த்து கொண்டா இருக்கிறான் என்று தோன்றியது .. அதற்குள் தன் மனது அவளிடமே பயணிகள் முழுவதும் உன்னை தான் வேடிக்கை பார்க்கிறது முட்டாள் என்றது..... சுதாரித்து கொண்டு கண்ணில் திரண்டு ஓடிய நீரை துடைத்தாள் மீரா .. அதை கண்ட அவன் உள்ளம் கசிய,

என்னமா any problem again ??

மீரா தன் கைப்பையில் purse காணவில்லை என்றாள் ...

மீண்டும் அவள் அழுவதை கண்ட மற்ற பயணிகள் அவளிடம் விசாரிக்கவும் அவள் கூறிய செய்தியை கேட்டு அவர்கள் ஒன்றும் பேசாமல் சென்றனர் .... அதிலும் சிலர் அவளை கேலியோடு பார்ப்பதை உணர்ந்து தலை குணிந்தாள்.... நான் அவர்களிடம் பணம் கேட்பேன் என்று நினைத்தார்களா ...சே சே ....

கண்டக்டர் வந்து தன்னை இறக்கி விட்டால் இந்த நேரத்தில் எப்படி தனியாக என்றபடி கண்கள் மீண்டும் கலங்கியது .... பிறந்த பொழுது தாய் தந்தைக்கு என்னை வேண்டாம் .... இன்று இந்த நள்ளிரவில் வெளியேற்ற பட்டாள் .. அவ்ளோ தான் மீரா உன் வாழக்கை என்று மனம் குமுறியது ... இனி வளர்த்தவர்களும் விட்டு விடுவார்கள் ...இறைவா உனக்கு ஏன் என்னிடம் இந்த கோபம் என்று கண் நிறைந்தாள்...

அந்த வாலிபன் தன் அருகில் வந்து அமர்ந்து டிக்கெட் அவனே எடுப்பதாகவும் கூறி புன்னகைதான் .... பணம் இல்லை என்றதும் மற்றவர்கள் ஓடவும் ..இவன் இப்படி கூறவும் தன்னுடைய இயலாமையை எண்ணி கண்களில் நன்றியுடன் அவனை பார்த்தாள் ..

அவன் கூர்மையுடன் அவளை பார்த்து சிரித்தான்

த்து முறையேனும் கண்களில் நீருடன் எப்படியும் பணத்தை திருப்பவதாக கூறினாள்...

I am சுரேஷ் , என்று தன்னுடைய விசிடிங் கார்டு அவளிடம் கொடுத்து ..

பெங்களூர் வந்து சேர்ந்த பின் இதை கொண்டு என்னை தொடர்பு கொள் என்றவுடன் ... ஒரு நிமிடம் அவனை வெறித்தாள் ..

அந்த புரியாத பார்வையை கண்டு ......

நான் பணத்தை உன்னிடம் இருந்து பெற்று கொள்கிறேன் என்றேனே இந்த கார்டு அதற்கான வழி என்றான் ஒரு புன்னகையுடன் .. ... டிக்கெட் வாங்கி கொடுத்தான் .....

கண்களில் கண்ணீர் நிற்கும் அறிகுறியே தென்படவில்லை .... இது என்ன இறைவா சோதனை என்று மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள் ..... இதற்கிடையில் அவன் தனது பெயர் ..கம்பெனி என்று தனது விவரங்களை கொடுத்து ..அவளிடம் நிம்மதியாக இருக்குமாறு கூறி விடை பெற்றான் ........ அவனை தவறாக நினைத்த தன் மனதை வெறுத்தாள் .... ஒருவாறு calicut வந்து சேர்ந்தாள் ..... தோழிகளை கண்டு உற்சாகம் ஆகாமல் ஏதோ இழந்ததை உணர்ந்தாள் ......

ரேணுவும் பூரணியும் வந்து விடவே கதையை கேட்டு இருவரும் முதலில் வேதனை பட்டனர், பிறகு மீராவின் மன நிலையை மாற்ற,

ஏய் ஆளு எப்டிடி handsome அஹ ??

ஐயோ விடு டி ... என்று மீரா சலிக்கவும் விடாமல் அவளை மீண்டும் மீண்டும் கிண்டல் செய்து ஒருவாறு அவளை சரி கட்டினர்...

பூரணி மெதுவாக இறங்கும் போது ஹீரோ என்னடி சொன்னாரு என்றாள் ....

அவர் என்னிடம் உங்கள் நண்பர்களை bus stand வந்து அழைத்து போக சொல்லுங்கள் என்றார் டி .....

ரேணு விழுந்து விழுந்து சிரித்தாள் ......

மீரா என்னடி என்று கேட்கவும் ..

அவள் உன்னை கலைக்ராடி ..நீ எதுக்கு அவளுக்கு answer பண்ற .. விடு டி .....

பூரணி சிறிது கொண்டே சரி வாடி ஹீரோ பார்த்ததற்கு treat என்றாள் ....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.