Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 4 - 7 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
Pin It

நிஜம்

காலை 7 மணி

"னு எழுந்திரு டா மா, ஸ்கூல்க்கு டைம் ஆகுது பாரு" என்று அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த வேலையாளை மேற்ப்பார்வையிட்டவாரே தன் மகளை எழுப்பிக் கொன்டு இருந்தார் லக்ஷ்மி.

Nijamஅன்னையின் இனிமையான குரலில் தன் உறக்கம் தெளிந்து, மான் போன்ற விழிகளை கசக்கியவாரே எழுந்த அனு அன்னையை கண்டு ஒரு நிமிடம் அசந்து தான் போனாள்

பிங்க் நிற புடவையில் எழிலாக தன்னை அலங்கரித்து, மென்மையான புன்னகையுடன் நின்றவளை கட்டிக் கொண்டு "யூ ஆர் தீ பியூட்டிஃபுல் மாம் இன் தீ வேர்ல்டு" என்று முத்தமிட்டாள்.

"சரி சரி முதல்ல போய் குளிச்சுட்டு வா டீ" என்று கூரி பூஜையறைக்கு சென்று விட்டார் லக்ஷ்மி. பூஜையை முடித்து சமையல் ஆளிடம் அன்றைய காலை உணவிற்கு வேண்டியவற்றை கூறி கையில் காபியுடன் ஹாலுக்கு வந்தவரை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டார் ராஜன். (அனுவின் தந்தை, பெரிய பிஸினெஸ்மேன்)

இந்த சிறு சிறு இடைவெளிகளைத் தவிர அவருக்கு மனைவியை கொஞ்சவொ மகளுடன் அன்பாக விளையாடவோ  நேரம் கிடையாது.எப்பொதும் அலுவலகம் மீட்டிங் என்று பிஸியாக இருக்கும் மனிதர்.

"என்னங்க இது நடு ஹால்ல இப்படியா பண்றது யாரவது பார்த்தால் என்ன ஆகிறது" என்று பொய்யாக கோபித்து கொண்டார் லக்ஷ்மி. கோபம் உள்ளதை போல் நடித்தாலும் உள்ளுக்குள் அதை ரசித்துக் கொண்டிருந்தார்.

"அதுக்கு என்ன டீ என் பொண்டாட்டி நான் எங்க வேணாலும் எப்படி வேணாலும் கொஞ்சுவேன்" என்று கூறி மனைவியை தன்னோடு அணைத்துக் கொண்டார்.அந்த நேரம் சரியாக அனு "அப்பா" என்று அழைத்துக் கொண்டே கீழே வந்தாள்.

அவளை கண்டவுடன் விலகிய லக்ஷ்மி, " என்னடி இது, இப்போ எதுக்கு உங்க ஆன்ட்டி அனுப்புன இம்பொர்டெட் ட்ரெஸ்ஸ போட்டு கிளம்புற???" என்றார் கண்டிக்கும் குரலில். "என்னம்மா மறந்துட்டீங்களா? இன்னைக்கு சனிக்கிழமை ஸ்கூல்க்கு கலர் ட்ரெஸ் தானே" என்றாள் அன்னைக்கு நினைவு படுத்தும் விதமாய்.

"அது எனக்கு தெரியும் டீ அதுக்கு இந்த காஸ்ட்லி ட்ரெஸ் தான் போடனுமா போய் மாத்திட்டு வா"

"பாருங்க அப்பா அம்மாவ, ப்ளீஸ் இன்னைக்கு இதவே போட்டுக்கரேன் பா" என்று தந்தையிடம் முறையிட்டாள். அவரும் கெஞ்சுதலான பார்வையை மனைவியிடம் வீசி விட்டு ஒப்புக் கொண்டார்.

என்ன தான் கண்டித்தாலும் நீல நிற இம்போர்டட் உடைக்கு பொருத்தமாக அணிகலன்கள் அணிந்து பதுமை போல நின்ற தங்கள் வீட்டு இளவரசியை கண் அகற்றாமல் பார்த்து ரசித்தார் லக்ஷ்மி

"அப்பா ப்ளீஸ் என்னை ஸ்கூல்ல டிராப் பண்றீங்களா?"

"ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு டா செல்லம் இன்னைக்கு ட்ரைவர் கூட போய்டு டா"

" போங்கப்பா டெய்லியும் இதவே சொல்ட்றீங்க" என்று கையை கட்டிக் கொண்டு கோபமாக அமர்ந்து விட்டாள் அனு. "சாரிடா செல்லம், இன்னைக்கு உன் friendsக்கு பார்ட்டி கொடுக்கலாமா? ஈவனிங் நானே வந்து உன்னையும் உன் friendsயும்  பிக்கப் பண்ணிகறேன் ப்ளீஸ் கொஞ்சம் சிரிடா" என்று மன்றாடினார் ராஜன்.

அவளும் சரி என்று ஒப்பு கொள்ள, பல விதமான பலகாரங்களை லக்ஷ்மி பரிமாற இருவரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.

மாலை 4 மணி

ன்  தோழியரை தன்னுடன் அழைத்துக் கொண்டு அனு பள்ளி கேட் அருகில் வந்து தன தந்தையை தேடினாள். அவளை பார்த்த ராஜன் ஹாரனை அழுத்தி அவளுக்கு சைகை செய்தார். 

காலை 7.45 மணி

ஹாரன் ஒலி கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் அனு.

தன் தந்தை மழைக்கு ஒதுங்குவதற்கு கட்டி விடப்பட்டிருந்த பழைய தார்ப்பாயினுள் இருந்து கண்களை கசக்கிக் கொண்டு  வெளி வந்து பார்த்தாள்.

சிவப்பு நிற ஒளியின் தடையால் நின்றிருந்த வாகனங்கள் , பச்சை ஒளியை கண்டவுடன் சீறிச் செல்ல ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டு ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. சில வினாடிகளில் தன் நினைவு பெற்றவளாய் திரும்பி அன்னையை தேடினாள்.

அன்றைய பொழுதை எப்படி ஓட்டுவது என்ற கவலையோடு, இருந்த கைப்பிடி அரிசியில் கஞ்சியை செய்து கொண்டு இருந்தார் லக்ஷ்மி. நெஞ்சின் வலி மிக தந்தையை பார்த்தாள், அவரோ நேற்றைய போதை தெளியாமல் உளறி கொண்டிருந்தார்.

“லக்ஷ்மி - ராஜன், ம்ம்ம் இருவருக்குமே பொருத்தமில்லாத பெயர்கள்” என்று எண்ணிக்கொண்டே திரும்பிய அனுவின் கண்களில், கடந்து சென்ற கார்களில் ஒன்று பட்டது. அதில் தன் வயது சிறுமி ஒருத்தி தன் தந்தையுடன் ஆனந்தமாக பேசியபடி பள்ளி செல்வதைக் கண்டாள்.

காலை கண்ட கனவின் நினைவில் ஏதோ ஒன்று தொண்டையை அடைக்க, கண்களில் நீர் பெருக சிலை போல் நின்றாள் அனு. அந்த 11 வயது பிஞ்சு மனதை தீயென சுட்டது நிஜம்!!!.

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Priya

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# RE: நிஜம்kalpana 2014-06-26 15:32
nice dear :GL: for ur other stories
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-27 06:39
Thanks dear......... :)
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Valarmathi 2014-06-25 15:50
Nice story Priya :-)
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்swetha chandra sekaran 2014-06-23 18:18
(y) superr...,, karpanikkum nijathirkkum ulla thooram alaga eduthu kaateerkeenga... all the best... keep going... :-)
Reply | Reply with quote | Quote
# RE: NijamPriya 2014-06-23 17:53
Once again Thanks for all who have given their precious time read my story and share the comments..... :thnkx: :) see u all soon thru another good story..... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: Nijamsahitya 2014-06-23 18:04
we are waiting madam... :-)
Reply | Reply with quote | Quote
# RE : NIJAMradhika 2014-06-23 15:36
NICE
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Dhivya S 2014-06-23 15:35
Nice Story Priya. Its really touching. All the best for your future ones :)
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-23 17:34
Thanks dhivya...
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்jaz 2014-06-23 14:18
wow ithu nijamana nijam mam............. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-23 14:54
Thanks jaz.... Neenga priya nu mention pannalam.... mam ellam vendam..
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Nithya Nathan 2014-06-23 13:02
Nice story. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-23 14:25
Thnaks nithya Nathan
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Jansi 2014-06-23 11:24
Nice story Priya :)
kadaisiyil adu kanava.......so sad :sad:
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-23 14:24
thanks jansi.... amanga kanavu thaan..
Reply | Reply with quote | Quote
+1 # RE: நிஜம்sahitya 2014-06-23 10:29
hai priya
super touching story...
feeling pity on anu....
nijam endra thalaipu miga poruthamaga ullathu...
all the best for your future stories
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-23 14:22
Nandri sahitya.... adhu verum thalaipu mattum alla.... meyyum adhuve....
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்parama 2014-06-23 10:04
Im proud of u priya :-) Nice story .. Im expecting more from you...
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-23 14:20
thanks parama...
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Keerthana Selvadurai 2014-06-23 08:45
Very very nice... Nijathin nitharsanathai arium pothu manathin oorathil siru vali earpaduvathai thavirka mudiyavilai..
Reply | Reply with quote | Quote
+1 # NijamPriya 2014-06-23 14:17
thanks keerthana..... Saalai oram irukkum pinju muganagalil yekkangalai paartha podhu earpatta valiyin prathipalippu thaan indha siriya kadhai... :sad:
Reply | Reply with quote | Quote
# RE: NijamKeerthana Selvadurai 2014-06-23 21:18
Antha eekathai correct-a kondu vanthutinga priya...
:GL: for future stories...
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Swathi emaya 2014-06-22 23:42
Nice story priya :) good one..expecting many more good touching stories
Reply | Reply with quote | Quote
# NijamPriya 2014-06-23 14:16
Thnks for ur support swathi.... feeling happy..... :)
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Madhu_honey 2014-06-22 22:50
Beautiful story!!! Hope someday the little girl's dream comes true... :GL: for more n more stories priya
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-23 14:15
thanks madhu....
Reply | Reply with quote | Quote
# Good article ...Poobalan 2014-06-22 22:33
:GL: .... Nan padithathil piditha alagiya padaipu.... Oru kulanthayin ekathay veli paduthiya vitham mikka alagu ...inum ithu ponra padaipugal pala kana virumbugiren ....
Reply | Reply with quote | Quote
# Re: NijamPriya 2014-06-23 14:14
Mikka nandri poobalan.....
Reply | Reply with quote | Quote
# awesome narration ..Pavithra Poobalan 2014-06-22 22:27
An excellent work my dear .. :GL: ... My best wishes for thee ... expecting many such articles....
Reply | Reply with quote | Quote
# awesome narration ..Pavithra Poobalan 2014-06-22 22:27
An excellent work my dear .. :GL: ... My best wishes for thee ... expecting many such articles....
Reply | Reply with quote | Quote
# NijamPriya 2014-06-23 14:13
Thanks pavi ma....
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Meena andrews 2014-06-22 21:50
Nice story mam (y)
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-22 22:06
Thanks meena.... Mam ellam illanga.... nan china ponnu thaan...
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Thenmozhi 2014-06-22 21:29
alagiya kathai Priya.
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Priya 2014-06-22 22:05
Nandri thenmozhi.....
Reply | Reply with quote | Quote
# RE: நிஜம்Bindu Vinod 2014-06-22 21:28
Superb story priya (y)
Nijathai therintha konda pothu manam kanathu ponathu!
Reply | Reply with quote | Quote
+1 # RE: நிஜம்Priya 2014-06-22 22:04
Mikka nandri Vinodha... :thnkx: Idhu thaan ennoda first story... romba happy ah feel pandren.. :dance: koodiya seekiram thodarkadhaiyil sandhippom....

enakkum eludhum podhu nenjam kanathu thaan ponadhu :sad:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top