(Reading time: 13 - 26 minutes)

பயணம்… பஸ்…!!! டிக்கெட்...??? - ஸ்வேதா

ரு மனித மனம் எப்போதெல்லாம் பெருமை கொள்ளும்??. அதன் வாழும் அர்த்தம் தெரியும் நேரம் தானே. அப்படிப்பட்ட தருணங்கள் வாழ்வில் சில நேரமே அமையும் அதுவும் புரியும் வகையில்.அப்படி பட்ட தருணம் ஒன்றை தான் விரித்துரைக்க போகிறேன்.

பயணம் பஸ் டிக்கட்நான் அதிர்ஷ்டசாலி என்று எனக்கு எப்போதுமே கர்வம் உண்டு. எனக்கு  நடந்த இந்த நிகழ்ச்சியை வைத்து சொல்லுங்கள் நான் அதிர்ஷ்டசாலி தானே. நன்மை நாடும் சுற்றம், தப்பு செய்தாலும் மனிப்பு கேட்கும் நட்பு, மனித நேயம் கொண்டவர்களின் அறிமுகம்,  சாதிக்க சூழ்நிலை போதுமே வாழ்கை வாழ.

தேர்வு முடிந்த மகிழ்ச்சி, அதுவும் என் விடுதி அறையில் எனக்கு தான் முதலில் முடிந்தது. மாலை நேரம் கிளம்பினால்  நடுஜாமத்தில் வீடு சேரும் என்பதால் அந்த இரவு அங்கேயே தங்கி விட்டு அடுத்த நாள் காலை கிளம்பினேன். மற்றவருக்கெல்லாம் மேலும் ஒரு வாரம் தங்க வேண்டிய நிலை. குதுகலம் கொந்தல்லிக்க கிளம்பிவிட்டேன் கிடைத்தெல்லாம் அள்ளி பைக்குள் திணித்துக்கொண்டு. திணித்ததில் இரண்டு பைகள் மற்றும் தோளில் லேப்டாப் பை என்று மூன்று பைகள். பாரம் தெரியவில்லை வீட்டு சாப்பாடு, அம்மா, அப்பா, அண்ணா   என்றெல்லாம் நினைக்கும் போது.

“ஸ்வீட்…..டு கிளம்பியாச்சா" என்று ஏக்கமாக கேட்ட ஷர்மிளாவை எரிச்சலை கிளப்பி அதில் கொஞ்சம் குளிர் காய்ந்து அந்த காலை வெயிலில் பஸ் ஏறியாகிவிட்டது. பெங்களூர் பைபாஸ்ஸில் காலேஜ் இருப்பதால் பஸ்ஸ்டான்ட் போகவும் அவசியம் இல்லை. 

சென்னை டு பெங்களூர் பஸ் என் நல்ல வேளை எஸ்.இ.டி.சி கிடைத்தது அதுவும் பகல் நேரம் என்பதால் கொஞ்சமே ஆட்கள் இருக்க. இப்படி காலியாண சீட்டுக்களுடன் இருக்கும் பஸ்ஸில் பயணம் எவ்வளவு சுகமானது. நெருக்கி அமர்ந்துகொண்டு இறைச்சளுடன் வெயிலில் பயணம் கொடுமையின் உச்சக்கட்டம்.

முதல் சீட் காலியாக இருக்க அங்கேயே அமர்ந்துக்கொண்டு டிக்கெட் என்று கேட்ட கண்டக்டரிடம் நிமிராமல் "ஓசூர் " என்றேன் பர்ஸ் தேடிக்கொண்டே. 

லேப்டாப் பையை அலசிவிட்டேன்.  பர்ஸ் காணவில்லை தேடலில் என்றோ சொருக்கி வைத்த நூறு ருபாய் கிடைக்க 

"இல்லை வேலூர் வரை டிக்கெட் குடுங்க" என்றேன் 

அவர் என்னை பார்த்த பார்வையில் ஏளனம் இருந்ததா, இரக்கமா??  இல்லை "சாவு கிராக்கிடா சாமி" என்று சலிப்பு இருந்ததோ. 

நல்லவேளை என் பக்கத்துக்கு சீட்டும் காலியாக இருக்க, லேப்டாப் பையிலிருந்த அனைத்தும் அதில் கொட்டி தேடினேன். மற்ற ரெண்டு கைப்பைகளையும் சேர்த்தே ஒன்றும் கிடைக்கவில்லை.

சுற்றி பார்த்தேன் எனக்கு இணையான அந்த பக்க சீட்டுகளில் ஒரு வயதான ஆனாலும் இளமையான அம்மா ஒருவர், அவர் பக்கத்தில் என்னை போலவே கல்லூரியிலிருந்து வீட்டிற்க்கு செல்லும் பெண் போல  அமர்ந்திருந்தாள். அடிகடி என்னை திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.

என் போன் மணி அடித்தது. ரிங்க்டோனே சொல்லியது அது அப்பா என்று. பிரச்சனையை எடுத்து சொன்னால் வழி சொல்லி விடுவார் ஆனால் வாழ்கை முழுதும் சொல்லிகாட்டியே பாதி கொன்றுவிடுவாறே. யோசிக்க நேரமில்லை பேச தொடங்கினேன் 

"ஹலோ அப்பா.."

"என்னம்மா பஸ் ஏரிட்டியா??, நான் கேட்ட டாகுமென்ட்ஸ் எல்லாம் எடுத்துகிட்டாச்சா" தந்தைகளுக்கே உரிய  மிரட்டும் தொனியில் அவர் 

"அதெல்லாம் பத்திரமாக எடுத்து வெச்சாச்சு பட்.."

"என்ன மறந்த சொல்லு சீக்கிரம்.."

"பர்ஸ் மறந்துட்டேன் பா"

"என்னது..??? அப்பறம் இறங்கி ஹாஸ்டல் போய் எடுத்துட்டு ஏற வேண்டியது தானே"

"இல்லப்பா, பஸ் ஏறிட்ட பின்னாடி தான் தெரிஞ்ச்சது"

“சரி பஸ்ல இருக்கியே எப்படி???"

"பாக்லே நூறு ருபாய் இருந்தது வேலூர் வர டிக்கெட் வாங்கிட்டேன்"

"சரி சரி கையில காசு எவ்ளோ இருக்கு இப்போ??" மிரட்டும் தொனி போய் சங்கடமாக பேசினார் 

"மூன்று ரூபா, வேலூர்க்கு டிக்கெட் தொனூற்றி ஏழு ரூபாய் தான் "

நான் பேசியது கோபம் வந்திருக்க வேண்டும் ,

"என்னமோ பண்ணு." கர்ஜித்துவிட்டு போனை வைத்து விட்டார்.

அப்பாடி என்று ஓயும் முன் இன்னொரு தரம் போன் மணியடித்தது ஐயோ அப்பாவை கொஞ்சி கெஞ்சி சமாளித்து விடலாம் ஆனால் இவனோ முடியாத காரியம் சமாளித்து போன் அட்டெண்ட் செய்தேன் .

அவன்  "அப்பு...., கிளம்பிட்டியா..., சாரிம்மா பார்க்க முடியல பத்திரமா பஸ் ஏறிட்ட தானே!! இன்னைக்கு எனக்கு கண்ட்ரோல் ரூமில் வேலை போன் அடிகடி பண்ண முடியாது "

கேட்ட விவரம் எதோ ஒரு வகையில் நிம்மதி தர "ஹப்பாடா " என்று வாய்விட்டே சொல்லி விட்டேன் .

"ஏய் என்ன அப்படி ஒரு நிம்மதி? இரு நீ ஏன் பேசவே மாட்டேங்கற?? அப்படி என்ன பண்ணே ??"

அது தானே!! சரியாக பாயிண்டை பிடித்து விட்டானே. இருக்காதா என்ன நாலு வருடம் நட்பு மேலும் நட்பையும் மீறிய அன்பு இருக்க கண்டுபிடிப்பது கடினமா என்ன ??

"ஒண்ணுமில்லை, ஒரு சின்ன தப்பு செய்துட்டேன் "

"அப்படி என்ன பண்ணே, ஆபிஸ் போன்க்கு கால் செய்து எதாவது பேசீட்டியா என்ன!! போன்  என் கிட்ட இல்லை "

நெனப்பு தான் இவனுக்கு, "இல்லை பர்சை மறந்து ஹாஸ்டல்ல வெச்சிட்டு பஸ் ஏறிட்டேன்  "

"அடிப்பாவி....., இப்போ எங்க இருக்க எப்படி பஸ்லே இருக்க" அதிர்ச்சி குரலில் தெளிவாக தெரிந்தது.

" நூறு ரூபா இருந்தது வேலூர் வரை டிக்கெட் வாங்கிட்டேன்" என்றேன்.

"லூசே, வேலூரிலிருந்து எப்படி போவே? அறிவு இருக்கா உனக்கு, இரு நண்பன் ஒருத்தன் ஆற்காடு போறேன் சொன்னான் எங்க இருக்கான் என்று கேட்கிறேன் "

ன் பரபரப்பு வெளிபடையாக தெரியாமல் காத்தாலும் கண்டக்டரும், அந்த பக்கம் என்னையே பார்த்துகொண்டிருக்கும் இரு பெண்களுக்குமே புரிந்திருக்கும்.

"ஐயோ!!! இந்த பொண்ணுக்கு முன்னாடி என் மானம் போகுதே" கதறியது மனம். 

அடுத்து என்பதுப்போல் அம்மா அழைக்க 

“அம்மு ஏன்ம்மா இப்படி பண்ணே நான் இப்போ பஸ் ஏறினா நாலு மணிக்கு வேலூர் வந்திடுவேன்" என்றார் பரப்பரப்பு பயம் என்று கலவைகளாக.

"அம்மா, நான் பார்த்துகிறேன்ம்மா நீங்க கவலைப்படாதீங்க கண்டக்டர் கிட்டே பேசி வந்துர்றேன் பஸ்ஸ்டாண்ட்ல அப்பாவை பணம் கொடுத்திட சொல்லு எப்படி என் ஐடியா" என்றேன்.

அம்மாவிற்கு கோபம் வந்திருக்க வேண்டும். அவருக்கு கடன் கேட்பது, தேவையில்லாமல் மற்றவரிடம் உதவி கேட்பதெல்லாம் பிடிக்காது. உண்மையில் அது அவரது கோட்பாடும் கூட.

நிறைய விவாதம் செய்து அவர் அழைப்பை துண்டித்தேன். எல்லாம் என்னவன் கொடுத்த தைரியம் அவன் நண்பன் மூலம் உதவி கிடைத்து விடும் எனும் நம்பிக்கை இருந்தது.

என் நம்பிக்கைக்கு உடனே அடி விழுந்தது. திரும்ப அவன் அழைக்க "சொல்லுப்பா " என்றேன். இப்போது எனக்குள்ளும் ஊருக்கு சென்று சேர்ந்து விடுவோமா என்ற பயம் இருந்தது.

அவன் எரிச்சலில் இருந்திருக்க வேண்டும், "உன் நல்ல நேரம்!!! அவன் காலையே ஊர் போய் சேர்ந்தாச்சு "

"அப்படியா.....!! சரி விடு வேற வழி பார்க்கலாம்" என்றேன் 

கோபம் தெறிக்க "மயி......று" என்றான் அழுத்தமாக 

"செருப்பு" அதே அழுத்தத்துடன் இன்னமும் கோபாமாக நானும் சொல்ல 

"ஏய் என்ன" மிரட்டினான் அவன்.

"பின்ன என்ன என்னையே கெட்ட வார்த்தையில் திட்டற, இதை வேற யார்கிட்டயாவது வெச்சிக்கோ....." என்றேன் கோபத்தில் 

"நீ செய்திருக்க வேலைக்கு இந்த வார்த்தையே கம்மி "

"போன் சார்ஜ் கம்மியா இருக்கு ஊரு போய் சேரும் வரை வேண்டும்" என்று நான் சொல்ல சட்டென்று போன் அழைப்பை துண்டித்தான். இப்படி காயப்படுத்துவது ஆண்கள் குலத்திற்கே உரிய ஒரு கேடு போல.

அடுத்து என்ன????!! அரைமணி நேரத்தில் வேலூர் வந்துவிடும். நான் இறங்கியே ஆகவேண்டும். போன் பாட்டெரி குறைந்துகொண்டே வந்ததில் இப்போது ஐம்பது சதவிதமே இருந்தது.

னம் அழுத்தம் தாங்காமல் சுற்றி பார்வையை சுழற்ற எனக்கு இனையான சீட்டிலிருந்த ஆண்டி "நான் உனக்கொரு ஐடியா சொல்லட்டா டா " என்றார். என்னை கவனித்திருப்பார் போலும்!!

நான் அவரை முழித்து பார்க்க "நான் ஓசூர் வரை டிக்கெட்க்கு பணம் தரேன் நீ பஸ்ஸ்டான்ட் லே உங்க அப்பாகிட்டே வங்கி தந்திடு நான் பெங்களூர் போறேன்" என்றார்.

என் மரபணுவில் ஒட்டியிருந்த சுயகௌரவம் எட்டிபார்க்க அவர் "இந்த வெயில்ல லக்கேஜ் வேற தூக்கிட்டு  நீ அலையணும் பாரு " என்றார்.

சந்தனமும் சிவப்பு பார்டெருமான  பருத்தி புடவை, ஒரு கையில் தங்க வளையல் இன்னொரு கையில் கடிகாரம், தடிமான கழுத்து சங்கலி, நேர் பார்வை, ஒரு கோணலில் என் பண்ணிரெண்டாம் வகுப்பில் எனக்கு கெமிஸ்ட்ரீ எடுத்த மிஸ் போலவே இருக்க "தேங்க்ஸ் ஆண்டி " என்றேன்.

வேலூர் பஸ் ஸ்டான்ட் வந்தது.  கண்டக்டர் டிக்கெட் என்று வந்து நிற்க அந்த ஆண்டி நூற்றி  இருபது ருபாய் கொடுத்து எனக்கு டிக்கெட் எடுத்தார்.

ஒருப்பக்கம் குன்றலாக இருந்தப்போதும் இன்னொருப்பக்கம் நிம்மதி பரவியது. அடுத்த பத்து நிமிடத்தில் அப்பா அம்மா இருவருக்கும் சொல்லிவிட்டு கொஞ்சம் நிம்மதி கொடுத்தேன்.

அடுத்த நான்கு மணி நேரம் என் வாழ்கை மாற்றத்தை கையில் இருக்கும் தொலைபேசி அழகாய் உணர்த்தியது.

என் கைபேசியின் பரிணாம வளர்ச்சியும் என் உறவுமுறை வளர்ச்சிக்கும் நிறைய தொடார்புண்டு. கையில் நோக்கியா டபுள் ஒன் ஜீரோ எய்ட் (1108) இருந்த போது பறந்து விரிந்த இந்த உலகிற்கும் எனக்குமான பிணைப்பு ரசனையில் இணைந்திருந்தது. பின் அந்த போன் அதன் நிலை மாற மாற விளையாட்டு, தேடுதலின் விடை, உறவுகளை வளர்க்கும் அழிக்கும் துணை என்று எதிலுமே அதன் பங்கு நிறையவே உண்டு.

இன்று அது குறைந்தது, காரணம் மிடுக்கான கைபேசிகளின்  (ஸ்மார்ட் போன்) குறையான பாட்டரி வசதி தான். பொதுவாக இந்த வகை கைபேசிகள் ஐம்பது சதவிதம் பட்டெரி வரை மெதுவாக குறையும் அதன் பின் சடசடவென குறைந்து விடும்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.