(Reading time: 13 - 26 minutes)

தை ஊர் சேரும் வரை நான் காத்தாகவேண்டும். அனாவசியமாக போனை ஆன் செய்யவில்லை. குறிப்பாக முகபுத்தகம் நோண்டவில்லை.வாட்ஸ்அப் பக்கமே போகவில்லை. திருதிரு வென முழித்தப்படி அமர்ந்திருந்தேன்.

விளையாட்டு இடத்திற்கு ஏற்ப மாறும் தானே.அப்படி சிறு வயதில் பயணத்தின் போது  கடந்து போகும் மரங்களை எண்ணுவது, எதிர்க்கே வரும் வண்டி எந்த கம்பனி, கலர் என்று பார்ப்பது இப்படியாக இருந்தது பின் நாட்களில் மறந்துப் போன ஒன்று.

தனிமை வாட்டி வதைக்க அமர்திருந்தேன். சுற்றி பார்வையை செலுத்த அந்த ஆண்ட்டி என்னை பார்த்து முரிவளித்தார், அந்த பெண்னும் என்னை போல் செய்வதரியாது உட்கார்ந்திருந்தாள், பின்னிருந்த இருவர் நான் பார்த்ததும் என்னை பார்த்தானர் ஆனால் அவர்களுள் கால்பந்து போட்டியை  பற்றிய விவாதம் பலமாக இருந்தது.

கடந்துபோன ஒவ்வொரு ஊரையும் பார்த்து மனம் குதுகலித்தது. பள்ளிகொண்டா கடந்தாயிற்று, ஹாப்பாடா ஆம்பூர், ஐ....  வாணியம்பாடி, நாட்றம்பள்ளி என்று கடக்க இன்னும்  குறைந்தது இரண்டே மணிநேரம் தான் பயணம்  இருந்தது.

போன் மணியடிக்க வேகமாக பேசினேன் "அப்பா!! பர்கூர் கிட்டே இருக்கேன் நான் சூளகிரி தாண்டியதும் கால் கொடுக்கிறேன் அப்பறம் கொஞ்ச நேரம் விட்டு கிளம்பிடுங்க பஸ் ஸ்டான்ட்க்கு " என்று திட்டமிட்டேன்.

பதிலுக்கு "சரிம்மா " என்று அழைப்பை துண்டித்தார். 

அவர் கோபம் புரிந்தது. சமாளித்தாக வேண்டுமே.  தவறு  வாழ்வில் சகஜம் தான் ஆனால் அலட்சியம் கூடாத ஒன்று.

அய் யோ புத்திமதி சொல்லும் அப்பா , கிண்டல் அடிக்கும் அண்ணன், புலம்பி தீர்க்கும் அம்மா கண்முன்னே வந்து நின்றனர்.

திங் ஆப் டெவில், டெவில் அப்பியர்ஸ் என்று ஆங்கில கூற்றிற்கேற்ப அருமை அண்ணன் போன் செய்ய பாட்டரி விஷயம் மறந்தது.

"என்ன பாசமலரே இந்த தடவை என்ன கூத்து ?"

"ஏன்டா.., நீ இப்போவே ஆரம்பிச்சிட்டியா!!"

அவன் சிரிப்பு போன் வழியே இந்த பக்கம் அதிர்ந்தது. 

"அருமை அண்ணனே!! போன்ல சார்ஜ் கம்மியா இருக்கு, பை " என்று சொல்லி வைத்தேன்.

கடந்த  ஆறு மணி நேரம் சோர்வு, தொண்டர்ந்து மூன்று நாட்களாக தூக்கமின்மை, இரண்டு நாட்கள் படித்து கழித்தது என்றால் கடைசி நாள் கதை பேசி களித்தது.இப்படி எல்லாம் சேர தானாக கண் அயர்ந்தேன்.

சிறிது நேரம் கழித்து யாரோ எழுப்பவது போலிருக்க கடினப்பட்டு கண் திறந்தால்  அந்த ஆண்டி "வரியா காபி குடிக்கலாம் " என்றார்.

"இல்லை ஆண்டி வேண்டாம் பரவாயில்லை"

"காலையிலிருந்து எதுமே சாப்பிடவில்லையே நீ, சரி தண்ணியாவது குடி வா " இயல்பாக அவர் அழைக்க கீழே இறங்கினேன்.

தண்ணீர் மட்டும் வாங்கி குடித்து விட்டு பேருந்தில் வந்து அமர்ந்துகொண்டேன். எனக்கே என் மீது கோபம் வந்தது. மனம் இவ்வளவு அலட்சியம் இருந்திருக்க வேண்டாம் உனக்கு என்று குத்திற்று.

வீசும் எதிர் காற்று தலை வலி கொடுக்க நெளிந்துக்கொண்டே இருந்த என்னிடம் பேச்சுக்கொடுதாள் அந்த அழகான பெண் 

அந்த பெண் " வென் வில் வீ ரீச் பெங்களூர் " என்று கேட்டாள்.

"குறைந்தபட்சம் ஏழு மணியாகும் என்றேன்"

பேச்சு வளர, அவளுக்கு தமிழ் தெரியாதாம். விமான துறையில் வேலை பார்ப்பதாக அவள் சொல்ல ஆர்வமாக என்ன பதவி என்று கேட்டேன்.

சாதரணமாக "டிராபிக் கண்ட்ரோளர் " என்றாள். சென்னை விமான நிலையத்தில் பயிற்சி என்று வந்தவள் விதியின் சதியில் விமானத்தில் பயணத்தை தவிர்த்து பஸ் ஏறினாள் போலும். மிதவை பேருந்து மிதமான வேகத்திலேயே போக  பொறுமையை இழந்திருப்பாள் போலும்.

பாரதியார் கணா கண்ட புதுமை பெண்கள் வளர்ந்துக்கொண்டே வருகிறோம்  என்று மனதின் ஒரத்தில் பெருமை பொங்கியது. 

அடுத்த  அரை  மணி நேரம் பரந்து செல்ல ஊரூக்குள் பஸ் நுழைந்தது. போன் பீப் என்று சத்தம் கொடுக்க ஆரம்பித்தது. திரையில் "லோ பாட்டரி " என்று தெரிய தொடங்கியது. 

அப்பாவும் அழைக்க "அப்பா ட்ராபிக் சிக்னல் கிட்ட வந்தாச்சு ப்பா., நூற்றி இருபது ரூபா எடுத்து வெட்சிகோங்க" என்றேன்.

எதிர் பக்கம் சத்தமே காணோம். நான் போனை பார்க்கையில் அது உயிரை விட்டது.

ஸ் ஸ்டான்ட் வர கிழே இறங்கினேன். முறைத்தப்படியே என் மூட்டை முடிச்சுகளை வாங்கினார். பணம் ஜன்னல் வழியே அந்த ஆண்டியிடம் நன்றியுடன் திருப்பி கொடுத்தார். வண்டியில் வீட்டிற்க்கு போகும் வழியில் அவருக்கு தொடர்ந்து அழைப்பு வந்துக்கொண்டே இருக்க என்னிடம் கொடுத்து அதை பார்க்க சொல்ல போனை காதில் வைக்க 

பரிட்சயமான குரல் "ஹலோ அங்கிள்" என்று தயக்கத்துடன் கூற 

யார் என்று புரிந்தது எனக்கு "நான் தான் பேசுவது. என் போன் சார்ஜ் போட்டு பேசுறேன் " என்று சொல்லி கட் செய்ய போனேன்.

"ஏய்..." சிறு இடைவெளி விட்டு "சாரி, வீடு போய் சேர்ந்ததும் மெசேஜ் பண்ணு" என்றவன் அவனே போன் கட் செய்தான்.

வீட்டிற்க்கு போய் கைபேசியை சார்ஜில் போட்டு, குளித்து முடித்து, நான் சாப்பிட்டு  முடியும் வரை  பேசாமிலிருந்தவர்கள் தொடங்கினார்கள் அவர் அவர் ஆலோசனை, புத்திமதி, அறிவுரை என்று பலவிதமாக 

அம்மா "அந்த ஆண்டி உனக்கு ஹெல்ப் பண்ணலே?? என்ன பண்ணிருப்ப??"

நான்,"கைல காதுலே இருக்கிறத வித்து  ஊரு வந்து சேர்ந்திருப்பேன்"

உண்மையில் அந்த நேரத்தில் எதுமே தோன்றவில்லை. நான் வீடு போய் சேர்ந்துவிடுவேன் என்ற நம்பிக்கை தவிர.

அண்ணன், "செய்ற எதுலயுமே சுவாரசியத்த கலக்கலேனா உனக்கு தூக்கமே வராதோ" என்றான்.

அவன் எப்பவும் அப்படி தான்.துப்பறானா??? தூவுகிறானா?? புரியாது. 

அப்பா பல விதமாக பேசி விட்டு கடைசியாக "என் பொண்ணு புத்திசாலி, காசே இல்லாம ஊரு வந்து சேர்ந்திருக்கா.. குருட்டு தைரியம்மா  உனக்கு " என்று சொல்லி தலை கோதி விட்டார். அவர் பேசியதில் என் இது போன்ற செயல் தொடரவும் கூடாது இவையாவும் என் மனதையும் பாதிக்கவும் கூடாது என்பதில் அவர் தெளிவு வெளிப்படையாகவே புரியும் படி இருந்தது.

என் அழைப்பிர்காக காத்திருந்தவனிர்க்கு போன் செய்தேன், முதல் ரிங்கிலே எடுத்தவன் விடாமல் பேசிமுடித்தான் அவன் தவிப்பை புரிய வைத்து விடும் தோரணையில்.

னி இப்படி நடக்காது என்று எல்லோருக்கும்  சொல்லி,  ஹாஸ்டலில் இருக்கும்  ஷர்மிளாவிற்கு போன் செய்யதேன்,

"ஹலோ, ஷர்மி....., என் வாலெட் எங்க இருக்கு என்று பாருடி, பணமே இல்லாம ஊரு வந்து சேர்ந்திருக்கேன், இருக்கா என்று பார்த்து சொல் முதலில் " அன்றைய நாள் அனுபவம் கொடுத்த வேதனையை நான் குரலில் காட்ட 

பேசியப்படியே தேடியவள் "ஹே.. அன்னைக்கு நீ மட்டும் காண்டீன் போறேன் சொன்னப்போ நான் பர்ஸ் மறைத்து வைய்தேன்!!! நீ எடுத்துக்கவே இல்லையா "

"அடிப்பாவி...” நான் இழுக்க 

“சரி அதை விடு இது என்ன காலேஜ் போனபைட் இங்கே விட்டு போயிருக்க "

அவள் கேட்கவும் அதிர்ந்தே போனேன். அப்பா கேட்ட டாகுமென்ட்டில் அது தானே தேவையான ஒன்று... 

“டீயே ..... அந்த பர்ஸ், டாகுமென்ட் எல்லாத்தையும் கூரியர் பண்ணுடி... உனக்கு புண்ணியமா போகும் " என்று வழிந்து நின்றேன்.

“செய்றேன் செய்து தொலைக்கிறேன்.” என்று அன்றைய கதை பேசி முடிக்க “பாவம் சோர்ந்திருப்ப போய் தூங்கு போ." என்றவள் கட் செய்ய தூங்கலாம் என்று முடிவு செய்தேன்.

ந்த நாள் முடிந்தது என்று பெரும் மூச்சு இழுத்து விட்டு யோசிக்கலானேன். பெருமையாக இரண்டு விஷயம் இருந்தது. ஒன்று என் மேல் அக்கறைபடும் உறவுகள். இன்னொன்று என் தைரியம், நம்பிக்கை, நல்லதே நடக்கும் என்னும் அந்த நம்பிக்கை. 

என் அம்மாவின் வேண்டுதல், அப்பாவின் கவலை, உறவாக போகும் ஒருவனின் கோபம் எல்லாமே என் நன்மைக்கே எனும் போது ஏதோ ஒருவகையில் பாக்கியசாலியாக உணர்வு பொங்கி வழிந்தது. அலட்சியத்தால் வந்த இக்கட்டு கற்றுகொடுத்தவை பல. மறவாத அனுபவமும் கூட. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.