(Reading time: 23 - 45 minutes)

ட என்னம்மா. இங்க நம்ம நாலு பேரு தானே இருக்கோம். அவங்கவங்க எடுத்து போட்டு சாப்டுக்கலாம். நீயும் உட்காரு”

“இல்ல மாமா” என்று நந்தினி தயங்கி கொண்டிருக்கும் போதே, வருண் “நீயும் உட்காரு. நம்ம போட்டு சாப்டுக்கலாம். நாங்க எல்லாம் ஒன்னா சாப்டுட்டு நீ தனியா சாப்பிடுவியா” என்றான்.

கல்யாணம் ஆனதில் இருந்து வருண் பேசிய பெரிய வாக்கியம் இது தான். ஆனால் நந்தினிக்கு இதுவே சந்தோசமாக இருந்தது.

“சரி” என்று நந்தினி எல்லோருக்கும் பரிமாறி விட்டு அமர்ந்தாள்.

வருணின் தட்டில் பொறியல் இல்லாததை பார்த்து விட்டு அவன் தட்டில் பீட்ரூட்டை வைத்தாள்.

அதை பார்த்த காவேரி “ஐயோ அவனுக்கு பீட்ரூட் பிடிக்காது” என்று கூற நந்தினி மலங்க மலங்க விழித்தாள்.

வருண் அவளை பார்த்து “பரவால்லை. ஒன்னும் ப்ராப்லம் இல்லை.” என்று கூறிவிட்டு அதை சாப்பிட ஆரம்பித்தான்.

ரத்தினசாமியும் காவேரியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவருக்கும் சந்தோசமாக இருந்தது. வருண் சின்ன வயசுல இருந்தே பீட்ரூட் சாப்பிட மாட்டான். ரொம்ப அடம். இப்ப நந்தினி வச்சி அவன் அதை சாப்பிட்டது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. எப்படியோ அவங்க வாழ்க்கை நல்லாயிடும் என்ற நம்பிக்கை வந்தது.

வருண் ஆபிசிலிருந்து வீட்டிற்கு வந்து தன் அறைக்கு செல்லும் போது யாரோ பேசும் சத்தம் கேட்டு நின்றான். எல்லாம் ஏதோ படிப்பை பற்றிய பேச்சாகவே இருந்தது. யாரடா இந்த படிப்ஸ் என்று நினைத்துக் கொண்டான்.

“ஏய் என்னடி, நானே விட்டா போதும்னு காலேஜ்ல இருந்து ஓடி வந்திருக்கேன். நீ என்னடான்னா படிப்பை பத்தியே கேட்டு என் உயிரை வாங்கற” சலிப்பாக வந்தது குரல்.

“சரி விடு, நான் உனக்காக எதாச்சும் சாப்பிட கொண்டு வரேன்”

“ஐயய்யோ. நீ செய்யறதுன்னா வேண்டாம்மா. உங்க அத்தை செய்யறதுன்னா வேணும்னா கொண்டு வா”

“ஏய் ரொம்ப பண்ணாத. நான் தான் சமைக்கறேன். நல்லா தான் இருக்கும்”

“என்னடி சொல்ற. உலக அதிசயமா இருக்கு. என்னால நம்ப முடியலையே”

“அதெல்லாம் விடு. உனக்கு என்ன வேணும் கேளு. செஞ்சி கொண்டு வரேன்”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்டீ. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம். அப்புறம் பார்த்துக்கலாம் அதெல்லாம்”

“ம்ம்ம்.”

“என்ன இப்பவாச்சும் சீக்கிரம் எந்திரிக்கரியா இல்ல வழக்கம் போல தானா”

“இல்ல. காலைல ஐஞ்சி மணிக்கெல்லாம் எழுந்துடுவேன்”

“என்னடி. இன்னைக்கு புல்லாஹ் எனக்கு ஒரே ஷாக் குடுதிட்டிருக்க. நீ வழக்கமா எட்டு மணிக்கு தானே எந்திரிப்ப. என்னடி அதிசயம்.”

“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் மாறிடும்டீ. நம்ம சுதந்திரம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்ன வரைக்கும் தான்”

“என்னாச்சிடீ. நீ நல்லா தானே இருக்க, ஏன் இப்படி பேசுற”

“என்ன. நான் நல்லா தான் இருக்கேன். பின்ன கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் எட்டு மணிக்கு எந்திரிப்பாங்களா.”

அதன் பின் அவர்கள் பேசிய எதையும் வருண் கேட்கவில்லை. நேராக மாடிக்கு சென்று விட்டான்.

அவன் மனசாட்சி அவனை கொன்றுக் கொண்டு இருந்தது.

ஆம். அவள் சொன்னது உண்மை தானே. கல்யாணத்துக்கு அப்புறம் அவளோட லைப் சுத்தமா மாறி போயிடுச்சி. எவ்வளோ அவளை மாத்திகிட்டு இருக்கா. ஆனா நான் என்னை நம்பி வந்த பொண்ணை சந்தோசமா வச்சிக்க ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்கல என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தான்.

வருண் இப்போதெல்லாம் நந்தினியிடம் நன்றாக பேச ஆரம்பித்தான். முன் இருந்த ஒதுக்கம் இப்போது சுத்தமாக இல்லை. நந்தினியும் அவனிடம் நன்றாக தான் பேசினாள். ஆனால் அவள் மனதில் தான் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது.

ஆனால் வருணுக்கு அவளின் மன உறுத்தல் ஏதும் தெரியவில்லை. தினம் தினம் அவளிடம் பேசும் போது அவன் மனம் உற்சாகமாக பறந்தது. ஆனால் இது ஏதும் நந்தினிக்கு தெரியவில்லை. முடிந்த வரை அவனுடன் ஒரு பிரண்ட் போல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

இவ்வாறாக சில நாட்கள் சென்றது.

வருண் ஆபிஸ் சென்றவுடன் வேலையை முடித்து விட்டு அறைக்கு வந்த நந்தினிக்கு போர் அடித்ததால் ரூமை கிளீன் செய்யலாம் என்று முடிவெடுத்து செய்ய ஆரம்பித்தாள்.

ஓரளவு எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு ஸெல்ப்பில் உள்ள புக்சை அடிக்கி வைக்க ஆரம்பித்தாள். அவற்றை அடிக்கி வைக்கும் போது சில புத்தகங்கள் கீழே விழுந்தன.

அதை எடுத்த நந்தினி அவற்றை பார்வையிட்டாள். மனசை அமைதியாக்குவது எப்படி, யோகா, இன்னும் சில தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்கள் இருந்தன. அவற்றினிடையே ஒரு டைரியும் இருந்தது. அதில் ஒரு பார்பி கேர்ள் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. அதை பார்த்த நந்தினிக்கு அதை பிரித்து பார்க்க தோன்றியது.

அந்த டைரியில் சில பக்கங்களுக்கு மேகா மேகா என்று மட்டும் எழுதியிருந்தது.

அதை பார்த்த நந்தினிக்கு மனதில் ஏதோ பிசைந்தது. சில நிமிடங்களுக்கு படிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து விட்டு, ஏதும் தெரியாமல் இருப்பதை விட தெரிந்து கொள்வதே மேல் என எண்ணி திரும்ப அந்த டைரியை பிரித்தாள்.

அந்த டைரியில் ரொம்ப ஒன்றும் எழுதியில்லை. வருண் மேகா என்ற பெண்ணை காதலித்திருக்கிறான் என்பது மட்டுமே தெரிந்தது.

மேலும் மேகா ரொம்ப அழகு, அவள் பொம்மை மாதிரி அப்படி இப்படி என்று அவளை பற்றிய சில வருணணைகள், அப்புறம் மேகா எப்பவும் அவங்க ரெண்டு பேரோட பெயர் ஒற்றுமையை பற்றி சொல்லுவாளாம். வருணுக்கு அது மிகவும் பிடிக்குமாம், அப்புறம் அவங்களுக்குள்ள நடந்த சில சம்பவங்கள் என்று இருந்தது.

நந்தினிக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. தானும் இந்த கல்யாணம் பிடிக்காமல் தான் செய்து கொண்டோம். வருணும் அப்படி தான் என்று திருமண இரவின் போதே தெரிந்து போனது.

வருணுக்கு ஏன் இந்த கல்யாணம் பிடிக்கலை என்று யோசிக்கும் போது ஒருவேளை அவர் யாரையாவது காதலிச்சிருக்கலாம் என்று கூட நந்தினி எண்ணியிருந்தாள். ஆனால் நிதர்சனம் தன் முகத்தில் அறையும் போது அவளால் அதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

சரியாக அந்த நேரம் பார்த்து அவள் வீட்டிலிருந்து அவளுக்கு போன் வர அதை எடுத்த நந்தினி “நல்லா இருக்கியாம்மா” என்று தன் தாயின் குரலை கேட்டு உள்ளே இருந்த கோபம் பொங்கி கொண்டு வர

“நான் நல்லா இருந்தா என்ன இல்லைன்னா என்ன அப்படின்னு நினைச்சி தானே எனக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வச்சீங்க. அப்புறம் என்ன கேள்வி நல்லா இருக்கியான்னு” என்று கோபமாக பேசி விட்டு போனை கட் செய்தாள்.

அன்று முழுவதும் நந்தினி யாரிடமும் ஏதும் பேசவில்லை. வருணும் வந்தவுடன் அவளிடம் பேச ஆரம்பித்தான். ஆனால் நந்தினி ஏதும் சரியாக பேசவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.