(Reading time: 12 - 24 minutes)

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் – புவனேஸ்வரி கலைசெல்வி

ணி 12 ஆகப்போது... கண்ணீர் வகிடோடு கடிகாரத்தை பார்த்தப்படி ஆயாசமாக அமர்ந்திருந்தாள் மித்ரா...  யாரும் எதிர்பார்க்காத நிலை அது ...

அவ கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாத சூழ்நிலை..போன வருஷம் இதே நாள் அவள் அவன் பக்கத்துல இருந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னாள்... வாழ்த்து மட்டுமா ? அந்த நாள் முழுக்க அவன் அவளோடு தானே இருந்தான் ? ஆனா இந்த வருஷம் எல்லாம் மாறிடுச்சு ? யாரு இதற்கு காரணம்? வழக்கம் போல தன்னை தானே நொந்து கொண்டாள்... கடிகார ஓசை அவள் சிந்தனையை தயக்கத்துடன் போன் பண்ணினாள்...

அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்

" ஹலோ "

" ஹேய் மதூ"

" அர்ஜுன், நான் மது இல்ல மித்ரா பேசறேன் "

" ஹேய் மித்ரா சாரி நான் மதூ நு நெனச்சு போனை பார்க்கம........... ஐ எம்  சாரி ...."

" இல்ல பரவால.... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் "

" ஹேய் தேங்க்ஸ்..... "

" யாரு முதல்ல விஷ் பண்ணாங்க? "

" ம்ம்ம்ம் நீதான் மித்ரா .... மதூ கூப்டுவானு நெனச்சேன்... தூங்கிட்டா போல ...."

" ஒ ....... சரி ....................... ம்ம்ம்ம் அர்ஜுன் ......"

" சொல்லு மித்ரா "

" இல்ல ஒண்ணுமில்ல .....:"

" மித்ரா நீ பழசை மறக்கலே நு தெரியுது .... பட் அது உனக்கு நல்லது இல்ல ,.....நான் சந்தோஷமா இருக்குற மாதிரி நீயும் சந்தோஷமா இரு ...இலேன்ன எனக்கு அது குற்ற உணர்ச்சியா இருக்கும்...என் பிறந்தநாளுக்கு நீ இததான் பரிசா தரனும் ..சரியா ? "

( எப்படி அர்ஜுன் இதை உன்னாலே சொல்ல முடியுது ? என் உயிருக்கும் மேலானவன் நீ ..என் உலகமே நீதான் ... என்னைக்கு மதுவர்ஷினி உன் லைப் ல வந்தாளோ அன்னைக்கே எல்லாம் மாறிடுச்சு ..அதற்காக ? நானும் எப்படி என் மனசை மாத்திக்க முடியும் ?)

" ஹலோ ....ஹலோ ...மித்ரா ,.. இருக்கியா?  என்ன சைலென்ட் ஆகிட்டே ? "

" அர்ஜுன் ..இருக்கேன் ...உன் சந்தோசம் தான் என் சந்தோஷமும்....நான் பழைய நினைவுகளை விட்டுட்டு போறதுதான் உனக்கு சந்தோஷம்னா அது கண்டிப்பா நடக்கும்.... எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் வேணும் ..."

" என்ன மா ? "

" நாளைக்கு நீ பிசியா இருப்பேன்னு தெரியும் ..நாளை மறுநாள் நான் உன் வீடுக்கு வந்து என் பரிசு தந்துட்டு போய்டுறேன் ..கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்றியா ? "

" ஹே இவ்ளோதானா ? கண்டிப்பா நான் வீட்டுல உனக்காக வெயிட் பண்றேன் "

" தேங்க்ஸ் அர்ஜுன்... வச்சிடுறேன் "

என்று அவன் பதிலுக்கு எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தாள் மித்ரா .... அணைப்போட்ட கண்ணீர் துளிகள் அவளையும் மீறிவிட்டன... கைகளால் முகத்தை அறைந்துகொண்டு கதறி அழுதாள்...

"யோ ஆண்டவா ? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? அம்மா அப்பாவை தான் நீ உன் கூடி வெச்சுகிட்டே...என் அர்ஜுன் தான் இனி என் வாழ்க்கை நு நெனச்சேனே இப்போ அவனும் இல்லையே .... அவன் இல்லாம நான் எப்படி இருக்க முடியும் ? எனக்குன்னு யாரு இருக்கா ? யாருக்காக நான் வாழ போறேன் ... என்னாலே மூச்சு கூட விட முடிலையே.... நான் இருந்த என் அர்ஜுன் மனசுல இப்போ இன்னொரு பொண்ணா ? எனக்கு ஏன் இந்த நிலைமை ? நான் யாருக்கு துரோகம் பண்ணேன் " என்று கதறி அழுதவள் சிறிது நேரத்தில் ஓய்ந்து போனாள்...

அவனுக்காக அவள் வைத்திருந்த பரிசை எடுத்தாள்... மனதில் தோன்றிய வார்த்தைகளை எழுதினாள்..தூரத்தில் இருந்து அவளுக்காகவே ஒரு பாடல் ஒலித்தது...

மனம் மனம் எங்கினும்

எதோ கணம் கணம் ஆனதே

தினம் தினம் ஞாபகம் வந்து

ரணம் ரணம் தந்ததே

அலைகனில் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்

நீயா (முழுமையாய் )

நானோ (வெறுமையாய் )

நாமா இனியும் சேர்வோமா ..

யாரோ மனதிலே

ஏனோ கனவிலே

நீயா உயிரிலே

தீயா தெரியிலே

மிக மிக கூர்மையாய் என்னை

ரசித்தது உன் கண்கள்தான்

ம்ருதுவாய் பேசியே என்னுள்

வசித்தது உன் வார்த்தை தான்

காங்கலாய் காணவே இமைகளை மறுப்பதா

வெனிர்[வெண்ணிலா]

கண்ணிற்[கண்ணில]

நானும் வெறும் கானல

யாரோ மனதிலே

ஏனோ கனவிலே

நீயா உயிரிலே

தீயா தெரியலே

காற்று வந்து மூங்கில் என்னை

பாட சொல்கின்றதோ

மூங்கிளுக்குள் வார்த்தையில்லை

ஊமை ஆகின்றதோ………….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.