(Reading time: 12 - 24 minutes)

 

4 ஏப்ரல்

இன்னைக்கு உன் ஆபீஸ் லே மதுவர்ஷினி நு ஒரு பொண்ணு வந்துருக்கா ..அவளை உனக்கு புடிக்கவே இல்ல ..... அவ டிரெஸ்ஸிங் சென்ஸ் சரி இல்லன்னு நீ திட்டிகிட்டே இருந்த....

" ஏண்டி எந்த பொண்ணும் உன்னை மாதிரி இல்ல? " அப்படி நு என்னை பார்த்து கேட்ட நீ ..... எனக்கு எவ்ளோ பெருமையா இருந்துச்சு தெரியுமா.... ஒரு காதலிக்கு தன் காதலனோடு பாராட்டுதலை விட பெரிய பரிசு என்ன இருக்கு ?

7 ஏப்ரல்

என்னமோ மனசு சரி இல்ல.... நாமே பிரிஞ்சுடுவோமொனு பயம்மா இருக்கு ... உன் கிட்டே சொன்ன நீ சிரிக்கிறே ..... இன்னைக்கு இவ்வளோதான்..நாளைக்கு ஏதும் தோணினா எழுதுறேன் ...

10 ஏப்ரல்

நீ என் கிட்ட லவ் சொல்லி  ஒரு வருஷம் ஆச்சு ... உனக்கு விஸ் பண்ணலாம் நு கால் பண்ணேன் .... நீ போன் எடுக்கலே .... மதியம் பேசும்போது  உனக்கு ஞாபகம் கூட இல்ல..... எனக்கு சண்டை போட வரல அழுகை தான்  வந்துச்சு .,.... அழுதேன்.... உனக்கு அது புடிக்கல.........  எல்லாம் சரி ஆகிடும் நு என்னை நானே தேத்திக்கிட்டேன்....

20 மே

இதை நான் எதிர்பார்க்கலே ....... அன்னைக்கு புடிக்காதுன்னு சொன்னியே அந்த பொண்ணு இப்போ உனக்கு எப்படி க்ளோஸ் ஆனாள் ?

" அவ நல்ல பொண்ணு ... என்ன கொஞ்சம் முகத்துக்கு நேரா பேசுற கேரக்டர் .... அதான் திமிரு மாதிரி இருக்குனு சொன்னே....நான் பதில் ஏதும் பேசல....பட் அதை நீ கண்டுக்கவே இல்ல.....அவளை பத்திதான் பேச்சு ........

எனக்கு இது நெருடலா இருக்கு ...பட் இதை சொன்ன நான் உன்னை சந்தேகபடுறேன் நு  நீ நெனைசுகுவியொ பயம்மா இருக்கு ? என் அர்ஜுன் எங்க போய்ட போறான் :) எல்லாம் சரி ஆகிடும் ....

23 மே

நைட் 11 மணி ஆச்சு நீ இன்னும்  தூங்கல.... இது உனக்கு புது பழக்கம் ..... நான் எதிர்சையா போன் பண்ணபோது தான் நீ இதை என் கிட்டே சொன்ன..... அந்த பொண்ணு பேசிகிட்டு இருந்தா டைம் போனதே தெரில நு சொல்றே...... ஒரே ஆபீஸ் லே தானே இருக்கீங்க .... பகல்ல பேசிக்கலாமே ... என்னமோ போ ...நான் உன்னை நம்புறேன் ...அதுனாலே கேள்வி கேட்க விரும்பல....

3 ஜூன்

இந்த நாள் எனக்கு ரொம்ப வலியா இருக்கு ....  ஒரு வாரம் காய்ச்சல் ..இப்போதான் குணமானேன் .... எனக்கு உடம்பு சரி இல்ல... ரெஸ்ட் தேவை நு நீ சரியாவே பேசல .... ஒரு வாரம்கழிச்சு இப்போ பேசுனா நீ அந்த பொண்ணை பத்தி பேசுறே..... அவ உன் மேல ஏதோ கோபமா இருக்கா நு ..... எனக்கு வலிக்கிறது .... என் கிட்டே பேசும்போது நீ அவளை பத்தியே பேசுறே .... கோபம் வந்துச்சு ஆனா எங்க நான் உன்னை சந்தேகபட்டா உன் மேல உள்ள காதல் பொய்யா இருக்குமோ நு அமைதியாவே இருந்தேன்

12 ஜூலை

 நான் செத்துட்டேன்  அர்ஜுன் ....... எப்படி உன்னாலே அப்படி சொல்ல முடிஞ்சது ....

" மித்ரா நான் லைப் ல ரொம்ப கஷ்டப்படும்போது நீ எனக்கு நல்ல தோழியா உதவி செஞ்சே..... நானும் உன் தனிமை போக நல்ல துணையாக இருந்தேன்... இதை நாமே காதல் நு  நெனச்சோம்... ஆனா அது இல்ல .... அவசரத்துல வந்த உறவு இது .,... நீயே யோசிச்சு பாரு .... ஒரு காதலியா நீ எப்போதுமே  என் மேல பொசசிவ் காட்டினது இல்ல .... இப்போலாம் நமக்குள்ள   ரொம்பே சைலென்ட் தான் இருக்கு .... எப்டி இருக்கே ? சாப்டியா ? இதை தவிர நாமே வேற என்ன பேசிகிறோம் ? "

" என்ன சொல்ல வர்ற அர்ஜுன் ? "

" இது லவ் இல்ல மித்ரா ..... நாம்தான் குழம்பி இருக்கோம் "

" அப்டினா எது லவ் அர்ஜுன் ? "

" மித்ரா "

" வேணாம் அர்ஜுன் ...உன் மேல நான் ரொம்பே மரியாதையை வெச்சுருக்கேன் .... காதல் வெச்சுருக்கேன் .... அது அப்படியே இருக்கட்டும் .... நீயா தேடி வர்ற வரை என்  தொல்லை உனக்கு இருக்காது "

நான் வேற என்ன சொல்றது  அர்ஜுன் ? நமக்குள்ளே இருந்தது வெறும் நட்பா? நான் போசெசிவா இருந்திருந்தா ? உன் நிம்மதி போயிருக்கும் .... காதல் உனக்கு சந்தோஷத்தை கொடுக்கணும் நு சொல்லி மனசு எப்போ கேள்விகள் கோபம் வந்தாலும் அதை மனசுக்குள்ளேயே பொதி வெச்சேன் ..... அதுக்கு இதுதான் பரிசா?  இப்போலாம் ரொம்பே சைலெண்டா இருக்கோம் ஏன் ? என்ன நீ என்கிட்ட பேசறதே இல்லையே ................

நீ வருவா அர்ஜுன் கண்டிப்பா ஒரு நாள் வருவே .........

20 ஜூலை

ஒரு வாரம் ஆச்சு .... நீ வந்தே ....ஆனா தனியா இல்ல...... மதுவர்ஷினி கூட..... எனக்கு என்ன சொல்ல தெரில அர்ஜுன் ...  நான் எங்க தப்பு பண்ணேன் தெரில .... ஒரு வேலை சராசரி பொண்ணு மாதிரி தினமும் சந்தேகபட்டு உன் கிட்டே சண்டை போட்ருகனுமா? என் காதலை நானே போக விட்டுடேனா ?

கடைசி பக்கம்.,

அர்ஜுன்  இந்த டைரி எழுத ஆரம்பிக்கும்போது சத்தியமா தெரியாது இதோடு முடிவு சோகத்துல முடியும் நு..... இதெலாம் படிச்சு முடிக்கும்போது நாம வாழ்ந்த வாழ்க்கை எவ்ளோ அழகா இருந்துச்சு நு உனக்கு ஞாபகம் வருத்த அர்ஜுன்? நான்தான் தப்பு பண்ணிட்டேனா ?

எனக்கு காதலிக்க தெரியலையா அர்ஜுன்?

ஒரே ஒரு அட்வைஸ் டா..... உன் கஷ்டத்துல உனக்கு வந்த காதல் தான் மித்ரா... அதாவது உன் கோபம் , வெறுப்பு, கவலை இதெலாம் நான் தான் பார்த்துருக்கேன் .... நீ கோபம் வந்த அப்டி வார்த்தைய கொட்டிடுவே ..ஆனா அடுத்த நிமிஷம் குழந்தை மாதிரி மன்னிப்பு கேட்பே..... உனக்கு பிடிவாதம் ஜாஸ்தி .... இதெலாம் அந்த பொண்ணுக்கு தெரியுமா தெரில ... ஏன்னா அவ உன் சிரிச்ச முகத்தை தான் பார்த்துருக்கா. ... சோ எதிர்காலத்துல  கொஞ்சம் பார்த்து பொறுமையா நடந்துக்கோ கண்ணா

இதை நான் கொடுத்ததுக்கு காரணம் இனி இது மட்டும்தான் நம்ம உறவை பேசும் அர்ஜுன் ...

ஆமா , இனி இதை பேசவோ இல்ல  உனக்கு குற்ற உணர்ச்சி கொடுக்கவோ நான் இங்க இருக்க மாட்டேன் .....

நான் போறேன் ... இல்ல நான் போய்ட்டேன் ... இதை படிக்கும்போது நான் ஏதோ ஹாஸ்பிடல் ல இருக்கலாம் இல்ல வீதியில  இருக்கலாம் பட் கண்டிப்பா உயிரோடு இருக்க மாட்டேன் ...எல்லாம் முடிவு பண்ணிடு தான் உன்னை பார்க்க வந்தேன் ... இந்த புக் நீ படிக்கும்போதே நான் போய்டணும் நு முடிவு பண்ணிட்டேன்... கவலை படதே .... இது ஒரு விபத்து நு தான் செய்தி வரும் .... நீ எனக்காக பாடிய பாட்டை ஹெட் போன் லே கேட்டுகிட்டே ரோடு ஐ தப்பா கிராஸ் பண்ண போறேன் ....

உனக்கு குற்ற உணர்ச்சி  தரனும் நு நான் சாகலே டா... என்னால வாழவே முடில.. நான் அநாதை பொண்ணுடா ....அந்த நெனப்பு இப்போலாம் ரொம்பே வருது .. காலையில் எழுந்துரிச்சதுல இருந்து தூங்குறவரை எல்லாமே நீதான் .... என் உடம்பெலாம் எரியுது ... என் மனசு பதறுது .... நான் என் அப்பா அம்மா கிட்ட போறேன்.... நீ எப்பவும் நல்ல சந்தோஷமா இரு .... அதுதான் என் காதலுக்கு நீ தருகின்ற ஆறுதல் ..... கடைசியா ஒரே ஒரு தடவை

" ஐ லவ் யு டா "

..................................

ண் கலங்க படித்த அர்ஜுன் திக்ப்ரம்மையானான் ..... கைப்பேசியில் மித்ராவிற்கு தொடர்பு கொண்டான் கிடைக்க வில்லை ............சில வினாடிகளில் மீண்டும் அவனுக்கு போன் வந்தது , அவள் இறந்துவிட்டாள் என்ற செய்தியுடன் ...........!

இந்த கதையை நான் இங்கயே முடிச்சுக்க விரும்புறேன் .... ஏனென்றால் இது ஒரு உண்மை கதை ..... ஆனா மித்ரா சாகல.... நிஜ வாழ்க்கையில மித்ராவுக்கு அப்பா மட்டும் இருக்காரு .... அவருக்காக மித்ரா வாழ்ந்துகிட்டுதான் இருக்கா.,....

இந்த கதைக்கு காரணம், இதை படிக்கும்போது அர்ஜுன் மேல எவ்ளோ கோபம் வந்திச்சு ? எவ்வளோ பேரு பீல் பண்ணிங்க ? உண்மை ,நாம பல பேரு இப்போ , அர்ஜுன் மித்ரா மாதிரி தான் இருக்கோம்... எதுக்கும் மனசு விட்டு பேசறது இல்ல.... நட்புக்கும்  காதலுக்கும் வித்தியாசம் புரிஞ்சு நடக்குறதில்லை.... புதுசா வந்தவங்கவங்களுகாக நம்ம கூட எப்பவும் இருக்குறவங்களை காக்க வைக்கிறோம் ...... நம்மளை சுத்தி இருக்குற எல்லாரும் நல்லவங்களா இருக்கலாம், அருமையாக பேசலாம், அழகா இருக்கலாம் ஆனா எந்த அளவுக்கு அவங்க நம்மளை நேசிகுறாங்க ? தகுதி இல்லாதவங்க மேல அன்பு காட்டுறோம் ... அன்பு காட்டுரவங்களை உதாசீனம் படுதுறோம் .... காதலை அடையறதுக்கு எடுக்குற முயற்சி அதை தக்க வைச்சுக்க ஏன் எடுக்குறது இல்ல ...? நம்ம காதலி தானே ? நம்ம காதலன் தானே? நம்ம புருஷன் தானே? நம்ம அம்மா தானே? நம்ம தம்பி தானே நு ஒரு அலட்சியம் ? வார்த்தைகளை புரிஞ்சுக்கணும் நு சொல்லி உரையாடுரோமா ? அவங்க என்ன சொன்னால் நாமே என்ன சொல்லலாம் நு தான் யோசிக்கிறோம் .... எதற்கு இந்த அவசரம் ?

இந்த அவல நிலையை மாற்றவும் .... எல்லா உறவுகளையும் அன்பால் தொடங்கி அன்பால் முடிப்போம் .. மித்ரா மனதளவில்  இறந்து போயிட்டா ..... இந்த கதை நான் அவளுக்கு சமர்ப்பிக்கிறேன் . நன்றி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.