(Reading time: 12 - 24 minutes)

 

ரண்டு நாட்களுக்குப்பிறகு,

" அர்ஜுன் "

" ஹே மித்ரா ...வா வா உள்ள வா "

" அத்தை ..... சாரி அம்மா இல்லையா ? "

" கோவில் போயிருக்காங்க....வந்துருவாங்க இப்போ"

" ம்ம்ம்ம் அர்ஜுன் இது என்னோட பரிசு..  பிறந்தநாள் வாழ்த்துக்கள் "

" தேங்க்ஸ் டா...என்ன பரிசு ..... புக் மாதிரி இருக்கே "

" ஆமா ...ஆஅ ........ அர்ஜுன் ப்ளீஸ் நான் போனதுக்கு அப்பரும் படி..... கண்டிப்பா ..உனக்கு புக் படிக்க பிடிக்காது ..பட் இது அவ்ளோ நீளமான விஷயம் இல்ல சீக்கிரம் முடிஞ்சுரும் ...ப்ளீஸ் ஒரே ஒரு தடவை படி... அதுகப்பரும் அதை தூக்கி எரிஞ்சாலும் பரவலே"

" ஹே ஏன் இப்படி பேசுற ? உன் பரிசை நான் எப்படி வீசுவேன் ? ஏன் ஒரு மாதிரி இருக்க  நீ ?  முகமே சரி இல்ல .... இங்க வா "

" இல்ல பரவாலே அர்ஜுன் நான் போறேன் "

" என் மேல ப்ராமிஸ் அங்கேயே நில்லு "

" அர்ஜுன் ................"

" மித்ரா .......... " என்றபடி கைகளை நீட்டினான் அர்ஜுன் ...ஒரு கணம் நின்றவள் ஏதும் யோசிக்காமல் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்...

" மித்ரா ....அழாதே மித்ரா ப்ளீஸ் "

" அர்ஜுன் ஏன் என்னை விட்டுட்டு போனே அர்ஜுன் "

" மித்ரா ......... "

" ரொம்ப தூரம் போய்ட்ட அர்ஜுன் நீ ...... "

" ஹேய் நான் உன்னை விட்டுடு எங்க போனேன் .... எப்பவும் உனக்கு நல்ல நண்பனா உன் கூடத்தானே இருக்கேன் ?"

என்றவனை உதறி விட்டு ஆயாசத்துடன் பார்த்தாள் மித்ரா .........

" மாறிடுச்சு அர்ஜுன்.... எல்லாம் மாறிடுச்சு ...... எல்லாம் போச்சுல.... இனி நீ எப்பவும் எனக்கு நண்பன் மட்டும்தான் ...அப்படி தானே ? "

" மித்ரா ..............."

" எதுவும் சொல்லாதே அர்ஜுன் ... அந்த புக் மட்டும் படி போதும் ....நான் வரேன்.... நீ எப்பவும் சந்தோஷமா  இரு அர்ஜுன் ....அதான் எனக்கு வேணும்.... ஒரே ஒரு நிமிஷம்னாலும் உன் கைசிறைகுள்ள நான் இருந்ததே போதும் அர்ஜுன் ...... வரேன் "

" ஹேய் மித்ரா "

" அத்தை நீங்க எப்போ வந்திங்க ? "

" இப்போதான் ...நீ எப்படி இருக்கே "

" என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா ...நான் வரேன் "

" ஹேய் இரு மித்ரா........................... மித்ரா..................... "

" என்னாச்சுடா மித்ராவுக்கு ? உங்களுக்குள்ளே  பிரச்சனையா ? அழுதுகிட்டே போறா ? நீயும் இப்போ கொஞ்ச நாளா அவளை பத்தி பேசுறதே இல்ல.... அம்மா நு கூப்டுடு போறா ..... எப்பவும் அவ அத்தைனுதானே கூப்பிடுவா ........."

" அம்மா என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க..........." என்ற அர்ஜுன்  தனதறைக்குள் சென்று அவள் தந்த புத்தகத்தை திறந்தான் ... அது ஒரு டைரி.............................. 

னி அந்த டைரியை பார்ப்போம் ........

 அர்ஜுன் ,

 இந்த டைரி என்னோட ஒரு வருஷ ஏற்பாடு ... நாம ஒன்னா இருந்த தருணங்கள் எல்லாம் எழுதி வெச்சு உனக்கு இன்ப அதிர்ச்சி தரலாம்னு நெனச்சேன் . உனக்கு புக் படிக்க பிடிக்காது ..சோ எல்லாமே ஷர்ட் அண்ட் ஸ்வீட்டா எழுதிருக்கேன் ........ இதை தினமும் ஒரு ஒரு பக்கமா எழுதாமால் கொஞ்சம் வித்தியாசமா எழுதிருக்கேன்.... உனக்கு பிடிக்கும் நினைக்கிறேன் .....

அடுத்த பக்கம்...

23 -பிப்ரவரி

ஹேய் இன்னைக்கு என் ரூம் மேட் கிட்ட  மாட்டிக்கிட்டேன் ...தூக்கத்துல உன் பேரை சொல்லிட்டேணாம்..... எப்படி என்னை ஓட்டினா தெரியுமா ? பட் அதுவும் சூப்பர் பீலிங் தான்  மாமா ..... என்ன மாமா நு சொல்றேன் பார்த்தியா ? உன்னோடு திருட்டு பார்வை முரட்டு மீசை இதெலாம் பார்க்கும்போது எனக்கு மாமோய் நு கூப்டனும் போல இருக்கும் .... கல்யாணத்துக்கு அப்பறம் கூப்டுறேன் ..சரியா மாமா ;)

17- மார்ச்

இன்னைக்கு காலையிலே செம்ம ரகள பண்ணிடியே டா நீ..... என்ன பேசுனோம் நு  எழுதிருக்கேன் நீயே படி :-

" அர்ஜுன் கண்ணாடி முன்னாடி நிற்கவே முடில டா "

" ஏண்டி "

" எனக்கு பிம்பல் வந்துருக்கு கன்னத்துல "

" ஹா ஹா அதெல்லாம் அய்யாவின் மகிமை தான் "

" தூ தூ ...என் கன்னத்துக்கும் உனக்கும் என்னடா சம்மந்தம் "

" அது நிறைய இருக்கே "

" எப்படி எப்படி "

" அப்படி அப்படி "

" டேய்  ,.....சொல்லு"

" ஹா ஹா அதுவா ...பொதுவா பையன் சைட் அடிச்சாதான் பொண்ணுக்கு பிம்பல் வருமாம் "

" இது யாரு சுவாமி அர்ஜுன் ஆனந்தா சொன்னாரா ? "

" ஹேய் நிஜமாடி ...இதுக்கு வைத்தியம் கூட இருக்கே ? "

" என்ன வைத்தியம்"

" பிம்பல் வந்த கன்னத்துக்கு சைட் அடிச்ச பையன் ஒன்னு கொடுக்கணும் "

" ஏய் ஏய் போதும் ..நீ உடனே அடல்ட்ஸ் ஒன்லி யா பேச ஆரம்பிக்காதே"

" ஹேய் நான் உன் புருஷனடி ."

" ம்ம் அது மேரேஜ் கு அப்பறம்,..... சரி போதும் போனை வை "

" முடியாது... இபோ அந்த கன்னம் என் கிட்ட என்னமோ கேக்குதே "

" அதெல்லாம் ஒன்னும் கேக்கல "

6 ஜனவரி 2013

எனக்கு புடிச்ச ரஹ்மான் சார் பர்த்டே .... உனக்கு நான் அவரோட சொங்க்ஸ் எல்லாம் டெடிகேட்  பண்ணேன் ... நீ எனக்காக ஒரு சாங் பாடுனியே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு

உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு

நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு

காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.