(Reading time: 8 - 15 minutes)

விவாகரத்து - ஸ்வேதா

மே 22, 2012 இரவு 9.30  சென்னை.

வன் மனம், " ஏன் அபி என்னுடன் வாழ உனக்கு பிடிக்க வில்லையா.??  இது  நிஜம் தானா. இனி நான் தனி தானா. எப்படி அபி நான் உன்னை அடிச்சேன், துன்புறுத்தினேன்  என்றெல்லாம் பொய் சொன்னே. ஆத்திரத்தில் ஒரு வார்த்தை சொல்லியதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?? பத்தொன்பது வயதில் காதல், இருபதில் திருமணம்,இருபத்திமூன்றில் முறிவு.., நம்முள் காதல் இவ்வளவு தானா அபி..?? உன் மேல் மட்டும் தவறே இல்லையா அபி?? நான் இல்லாமல் உன் வாழ்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்....... "

Vivgarathu

மே 22, 2012 இரவு 9.45 சென்னை.

அவள் மனம், "எவ்வளவு ஈகோ அவனிற்கு முகம் கூட நிமிர்ந்து பார்க்க மாட்டானாம்!! எனக்கென்ன இருபத்திமூன்று வயது தானே. அவனில்லை என்றால் என்னால் வாழவே முடியாதா என்ன?? கோபம் வந்தால் கை ஓங்குவானா என்னை பார்த்து. என் மேல் பாசம் என்றல்லவா நினைத்தேன். எல்லாரும் சொன்னது சரி தான் காசு பணம் மட்டும் தான் அவனிற்கு முக்கியம்.என்னை கல்யாணம் செய்துக்கொண்டால் என் சொத்தெல்லாம் அவனிற்கு வரும் என்ற நினைப்பு இருந்திருக்கும். பொங்கி வழிந்த அன்பெல்லாம் எங்கே போனது . தவறேதும் நானும் செய்திருப்பேனோ ?? "

ஜூன் 23, 2012 இரவு 10.30 சேலம்

அவள் மனம்," அவனால் மட்டும் தூங்க முடிகிறது.. ஏன் என்னால் முடியவில்லை. இன்னமும் வாட்ஸ் அப்பில் ஆக்டிவாக இருக்கிறான். பேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கான். நான் மட்டும் ஏன் ஓய்ந்து போய் இருக்கிறேன். இனி  நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். என்னை கஷ்டப்படூ…த்திய அவனே நிம்மதியாக இருக்க என்னால் முடியாதா என்ன.  எப்படியெல்லாம் பொய் சொல்லி என்னை மயக்கினான். அவன் என் வாழ்கையில் இல்லாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவனை  விட்டு வந்து ஒருமாதமகி விட்டது. மறந்தே போனானா என்னை!!

ஜூன் 25, 2012 இரவு 11.00 சென்னை

அவன் மனம், "உடம்பெல்லாம் கொதிக்குதே அபி!! முடியவில்லையே என்னால்... நானும் மனிதன் தானே கோபம் வரும் தானே!! ஆத்திரத்தில் யோசிக்காமல் பேசியதற்கா இந்த தண்டனை. திருமணம் செய்துக்கொண்ட அன்று "இனி உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன்" என்றாயே.... ஏதேனும் ஒரு வகையில் என்னை தொடார்புகொள்ள கூட உன்னால் முடியவில்லையா...!! எப்படி உன்னால் என்னிடம் இருக்கும் கோபத்தை இவ்வளவு நாள் மனுதுக்குள்ளேயே வைத்துக்கொள்ள முடிகிறது. வெளிபடயானவள் நீ எப்படி மாறினாய்.”

ஆகஸ்ட் 16, 2012 இரவு 11.30 கொடைகானல்

அவள் மனம்," சே..!! எங்கே போனாலும் இவன் ஞாபகம் வருதே.இதே ஓட்டலில் தானே தங்கினோம். எப்படி எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நினைவுகள் வருகிறது. அவனுக்கென்ன நித்யா, வித்யா என்று ஏதாவது பொண்ணுங்க கிட்ட பேசிட்டு இருப்பான். பேசி மயக்குவதில் பெரிய மன்னன் ஆச்சே!! உன் கண்ணு நல்ல இருக்கு. உன் மூக்குத்தி நல்லா இருக்கு!! எப்படியெல்லாம் பேசினான். எவ்வளவு சந்தோசம், குதுகலம் என்று அதெல்லாம் எப்படி பொய்யாகி போனது. திருமணம் ஆனா பின்பும் பொறுப்பற்று இருந்தவன் அவன் தானே. அதை எடுத்து சொல்ல ஆரம்பித்ததில் தானே தொடங்கியது. குடும்பம் என்றான பின் இரண்டு லட்ச ரூபாய்க்கு வண்டி தேவையா என்ன. ச்சே... நான் என் பிரெண்ட்ஸ் கூட வெளிய போனது தப்பு என்றால் அவன் செய்ததும் தப்பு தான்.”

அக்டோபர் 17, 2012 இரவு 10.30, சென்னை

அவன் மனம் "அபிம்மா நான் டெல்லி போறேனே அதுக்குள்ளே உன்னை ஒரு தடவை  எங்கேனும்  பார்த்திடனும். உனக்கு தானே தெய்வ நம்பிக்கை அதிகம். நீ எனக்க வேண்டவே இல்லையா என்ன???!! உன் கோபத்தோட அளவு  இவ்வளவு  பெரிசு என்று அன்னைக்கே தெரியலையே  எனக்கு.  ப்ரெண்ட் சொல்றான்  காதலிக்கிறேன் என்று. எனக்கு பொறாமையா  இருக்கே நீ இல்லையே என் கூட. தேட்டர், பீச், பார்க் எங்க ஜோடியா இருக்குறவன பார்த்தாலும் சுட்டு  கொல்லனும் என்று கோபம் வருதே. இவங்ககுள்ள எல்லாம் சண்டையே  வராதா ?? அம்மா என்னை பார்த்து கஷ்டப்படறது என்னால தாங்கிக்கவே முடியலையே நான் டெல்லி போறேனே இன்னும் தனியா போறேனே அபீ.....

டிசம்பர் 12, 2012 இரவு 10.30 சேலம்

அவள் மனம் " அப்படி எங்கே போயிருப்பன். சென்னையில் பார்த்து மூன்று மாதம் ஆகிவிட்டது என்கிறான் அந்த அசோக். அமெரிக்க லண்டன் என்று சுற்ற போயிருப்பானோ??? அப்படியெல்லாம் போக பிடிக்கும் அவனிற்கு. தலைவலி நானும் இல்லை கூட. அப்படித்தானே சுற்ற போயிருப்பான். சம்பாதிக்கும் காசை சேர்த்து வைக்கலாமென்று என்று சொன்னேன் அதில் என்ன தப்பு. சண்டே லீவ் பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போனேன் அதில் என்ன தப்பு. எனக்கு துணி துவைக்க பிடிக்காது என்று அவனிற்கு தெரிந்து தானே கல்யாணம் செய்துக்கொண்டோம். பின் அதெல்லாம் செய் என்று சொன்னால் எப்படி???? உன் டிரஸ் உன் இஷ்டம் சொன்னவன் வெஸ்டெர்ன் போட்ட திட்டலாமா??? அவனிர்க்கொரு நியாயம் எனொக்கொரு நியாயமா?

ஜனவரி 2, 2013 காலை 4.30 டெல்லி 

அவன் ," இந்த குத்துற குளுற விட உன் ஞாபகம் தான் அபி என்னை கொல்லுது. சனியனே எதுக்குடி என் வாழ்கையில் வந்த.. ?? ஒனக்கு டி போட்டு கூப்பிட்ட பிடிக்காது தானே?? நான் தண்ணி அடிச்சா பிடிக்காது தானே??? அப்படி தான் செய்வேன். உன்னால என்ன முடியும் என்னை அனாதையா விட்டுத் போக முடியும் போய்ட்ட!!! போ!! யாருக்கு வேணும் உன் சகவாசம். நான் இப்போ சந்தோஷமா தான் இருக்கேன். இதோ கைல தண்ணி,  வெளில எனக்கு புடுச்ச வண்டி, கூட பிரெண்ட்ஸ். என்ன??? நிம்மதி தான் இல்லை" "விடு மச்சி பழகிடும்" "அவ இல்லாத ஒரு வாழ்கையை நினைச்சிக் கூட பார்க்க முடியல அதான் சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணி சட்டுபுட்டுனு டிவோர்சும் ஆகியாச்சு."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.