(Reading time: 8 - 15 minutes)

 

பிப்ரவரி 14, 2013 இரவு 10.30 சேலம்

அவள் " போன வருஷம் இந்த நாள் தானே எனக்கு எமனாக வந்தது. காதலித்தவன் காதல் வாழ்த்து சொல்லாமல் போனது, பிறந்த நாளை மறந்தே போனது, எத்தனை? எத்தனை? இதில் இன்னொரு கல்யாணமாம் வீட்டில் பேச ஆரம்பித்து விட்டார்களே விக்கி.. அந்த இடத்தில் உன்னை தவிர வேறு யாரையும் யோசிக்கவே முடியலையே. அம்மாவிற்கு வெறுப்பாகி போனேன், அப்பாவிற்கு தலைவலியாகிப்போனேன். எனக்கே பாரமாகி போனேன்.இப்படியே யோசித்து வாழ்கை வீணாகி போகுமா என்ன? ஏன் பெண்ணாக  பிறந்தால் கல்யாணம் செய்தே ஆக வேண்டுமா? அது என்ன ஆண் மேல் தவரென்றாலும் தண்டனை பெண்ணுக்கு தானா.? நான் வாழா வெட்டி என்றால் அவன் யாராம்? உருப்படியாக நம்பி  வந்த பெண்ணை வைத்து வாழ தெரியாத முட்டாள் தானே. அதை ஏன் யாரும் சொல்லிக்காட்டாமல் இருக்கிறார்கள்."

ஜூன் 16, 2013 இரவு 11.00 டெல்லி

அவன் " சென்னை வர போறேனே அபிம்மா. என்னை பார்த்தா என்ன பண்ணுவ?? எப்படி இருப்ப?? என்னை மறந்திருப்பியோ. இன்னைக்கும் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்க முடியலையே என்னால் !! உன்னால மட்டு முடியுமா என்ன?? இரண்டு வாரத்தில் மாறினவள் தானே ஆறு ஏழு ஒரு வருடத்தில் மறந்தே போயிருப்பாள்."

ஜூலை 2, 2013 இரவு 10.30 சேலம்

அவள் " விக்கி இனி நீ இல்லவே  இல்லையா என் வாழ்கையில். உன் காதல், கோபம், முத்தம், எதுமே எனக்கில்லையா?? கண்டவனெல்லாம் பெண் பார்கிறேன் என்று பார்வையிலே கொல்றானே  விக்கி. பேச்சோ அதுக்கும் மேல, யாரிடமும் சொல்ல முடியலையே. சொன்ன அம்மாவும் தள்ளிப்போட வழி பார்கிறேன் என்று என்னை தானே குத்தம் சொல்றாங்க."

ஆகஸ்ட் 13, 2013 இரவு 11.00 டெல்லி

அவன் " கல்யாணம் செய்துக்க ஒத்துக்கிட்டளாம்!! ஐயோ நிஜமாவே காதலோடு தான் கல்யாணம் செய்தோம் அது  வயதுக்கோளாரில்லை. எத்தனை போராட்டம் கல்யாணம் செய்துக்க ஒரே வார்த்தையில் காதல் இல்லை நமது கல்யாணமில்லை சொல்ல்லிட்டு போய் இன்னொருத்தனை கல்யாணம் செய்துக்கறா??, வலிக்கவே இல்லையா அவளிற்கு என்னைப்போல்??"

டிசம்பர் 14, 2013 இரவு 12.00 சென்னை

அவள் " எதுவும் வேண்டாம் எனக்கு என் சம்பாத்தியம் போதும் எவன் ஆறுதல் துணை எல்லாம் வேண்டாம். நான் தனி தான், போதும் இந்த கைதிதனம். எதிர்பார்ப்பு ஏமாற்றமில்லாத வாழ்கை போதும். இந்த சென்னை நகரம் போதும் வாழ்க்கை போக ஐம்பது வயதானபின்  எதாவது ஆசிரமத்தில் போய் சேர்ந்து கொள்ளலாம்"

மார்ச் 16, 2014 சென்னை

அவள் " என் மேலும் தவறு இருக்கு. அன்றைய சூழல் எதுவும் யோசிக்க தோன்றவில்லையே!!. இனி  எது செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும் . இனிமேல்லெல்லாம் வேதனையை  தங்க முடியாது. இந்த வெறுமை இல்லாமல் இருந்தால் நன்றாக  இருக்குமே. இந்த சிங்கார சென்னை கூட இப்படி போர் அடிக்குமா என்ன?? எங்கே பார்த்தாலும் மக்கள் தனிமையே இல்லை."

ஜூலை 14, 2014, இரவு 11.30 சென்னை

அவள் " அவனை பார்த்தால் என்ன பேசலாம். ஏனோ பார்ப்பேனோ என்று தோணுதே. தனியாக இல்லாமல் பெண்ணோடு இருந்தால்.??!! யாரோப்போல் என்னால் போக முடியுமா என்ன ? பேசிவிடலாமா… எதற்கு ஈகோ ஒருவேளை என்னைப்போல் அவனும் என்னை மறக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி தான் இருக்க வேண்டும். காய்ச்சல் என்றலே அழுவானே மறந்த போயிருப்பன். வருவான் என்ற நம்பிக்கையே இவ்வளவு இனிக்கிறதே. ஐயோ என் மகிழ்ச்சியை நானே தொலைத்துவிட்டேனே. நீ சொன்னது  சரிதான் விக்கி வாழ்கை அனுபவிக்க தான் கவலைப்படவோ அலட்டிக்கொள்வதற்க்கோ இல்லை என்று சொல்லணும்,”

ஆகஸ்ட் 10, 2014 இரவு 10.30 சென்னை

 அவன் "நாளைக்கு அவ நம்பர் வாங்கி போன் பண்ணி எங்கேனும் வர சொல்லி  பார்க்கணும். ஏன் டீ!! எனக்கு இப்படி துரோகம் பண்ண என்று கேட்கணும். நான் சந்தோஷமா இருக்கேன் என்று சொல்லணும். அவ எதிர்க்க அழுதிட கூடாது. நம்ப ரேஸ் பைக் எடுத்திட்டு போகலாம். விட்டுகொடுத்து பழகு , சூழல் தெரிந்து நடந்துக்கோ, மத்தவங்களுக்கு அவங்க ஸ்பேஸ் கொடு, புரியாமல் குரல் ஓங்கி பேசாத என்றெல்லாம் அறிவுரை சொல்லிட்டு வரணும். முடிந்தால் ஒரே ஒருமுறை... சீ  வேண்டாம் அவள் இன்னொருவனுக்கு மனைவி"

ருமனமும் உண்மை காதலை புரிந்து மீண்டும் புது வாழ்வை தொடங்க வாழ்த்துவோம் இல்லையில்லை வேண்டுவோம். இவங்க ஈகோவே இவங்கள சேர விடாம பண்ணாலும் பண்ணிடும். பிரிவின் வலி மரணத்தை விடவும் கொடியது. உறவில் குறைபாடை கருதாமல் வாழ்பவரே வெற்றியடைகிறார்கள். இப்படி புரியாமலே யோசிக்காமலே பிரிந்து அவதி படுவோர் ஏராளம். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.