உணர்விலே உயிராக - நந்தினி.S
அது கார்த்திக்கிற்கு பொறியியல் இறுதியாண்டு.தனக்கென நண்பர்கள்,விடுதி,அரட்டை என போய்க்கொண்டிருந்த அவன் வாழ்வில் முதலாய் தோழி கிடைத்தாள் சரண்யா. இப்படி ஒருத்தி வாழ்க்கையை கடந்து போவாள் என கனவிலும் நினைத்திருக்க மாட்டான் கார்த்திக். சக நண்பர்களைப் போலவே அவளும் பழகினாள் இவனிடம் கொஞ்சம் அதிகமாகவும்.
இத்தனை நாள் வகுப்பறை வெறுமையாய் இருந்த கார்த்திக்கிற்கு சரண்யா அமர்ந்திருந்த வகுப்பறை வசந்தமாய் இருந்தது. நண்பர்கள் கேட்டால் மறுத்துக் கொண்டும் தனக்கே தெரியாமலும் அணு அணுவாய் காதலித்தான் அவளை...

அவள் வரும் பாதையில் வேண்டுமென்றே அவளை எதிரே பார்த்து சிரித்துவிட்டு போவது அவளை இமைக்காமல் ரசிப்பது என நகர்ந்து போனது இவனது காதல்.
வழக்கம்போல நண்பர்களும் இதை விடுவதாய் இல்லை
" ஏய்,மச்சான் இப்ப சொல்லப்போறியா இல்லயா? " அதென்ன சரண்யா வந்தா மட்டும் எங்க இருந்தாலும் அவள கிராஸ் பண்ணிப் போற, கிளாஸ்லயே இருக்க மாட்ட இப்ப என்னடானா எல்லா கிளாசையும் அட்டன் பண்ற என்ன லவ்வா ??? ஒழுங்கா சொல்டா...”
என சக தோழமைகள் வினவ குழப்பத்துடன் மௌனமாய் கடந்தான்.
தூக்கமில்லாமல் மாடியில் உலவிக் கொண்டிருந்தான் தனக்குத் தானே பேசிக் கொண்டான், " அவளப் பாக்காம இருக்க முடியல அவளுக்காகவே காலேஜ் போறேன் இப்பலாம் அவளோட இடத்தயே அவ அங்க இல்லாட்டியும் பாக்குறேன் எத்தனயோ பொண்ணுங்கள பாத்துருக்கேன்,ஆனா இவக் கிட்ட எதோ இருக்கு கன்ஃபார்மா லவ் தான் அவனுக சொன்னமாதிரி" என்று தானாக பேசி சிரித்துக்கொண்டான்.
மறுநாள் காலையில் வழக்கம் போல கல்லூரிக்குள் நுழைந்தான் தூரத்தில் சரண்யா, வெள்ளையும் பச்சையும் கொண்ட சுரிதாரில் வழக்கம் போல கார்த்திக்கின் கண்களுக்கு மட்டும் தேவதையாய்,
அருகில் வந்தவள் கார்த்திக் வாடா போலாம் என்ன அப்டி ஏதோ ஃபர்ஸ்ட் டைம் பாக்குற மாதிரி பாக்குற,
நான் எப்டி இருக்கேன் ஹேய் சொல்லுடா என்றாள்.
உனக்கென்ன சூப்பரா இருக்க சரண்யா என்றான்.
இப்படியாக போய்க்கொண்டிருந்தவர்கள் நெருக்கமான நண்பர்களாய் மாறினர் கார்த்திக்கிற்கு மட்டும் அவள் காதலியாய்...
வகுப்பறையில் அரசல் புரசலாக பேசப்பட்ட இவர்களின் கதை சரண்யாவின் செவிகளையும் அடைந்தது தோழிகளின் மூலமாக,
" ஏய் சரண்யா உனக்கு ஒன்னு தெரியுமா கார்த்திக் உன்ன ஒன் சைடா லவ் பண்றானாம்டி !!! "
நான் கேன்டின் போய்ருந்தப்ப அவன் ஃபிரண்ட்ஸ் இருக்கானுகளே சிவா, அருண்,சதிஸ் எல்லாரும் சத்தமா பேசி சிரிச்சிட்டு இருந்தானுக டி ,
சரண்யாவுக்கு அதிர்ச்சியாய் இருந்து, "ஏய் லூசு மாதிரி பேசாதீங்கடி அவனும் நானும் ஒன் இயரா ஃபிரண்ட்ஸா இருக்கோம் அவன் அந்த என்னத்துல எல்லாம் பழகல இப்ப மட்டுமில்ல கார்த்திக் எப்பவுமே எனக்கு பெஸ்ட் பிரண்டா இருப்பான் டி சும்ம உளராதீங்க " ... என்று சொல்லிவிட்டு சட்டென நகர்ந்தாள் சரண்யா...
இரண்டு நாட்கள் கழித்து கார்த்திக் முடிவெடுத்துக் கொண்டான் இன்று தன் காதலை தேவதையிடம் சொல்லிவிட வேண்டுமென்று,
கல்லூரிக்குள் நடந்து வந்துகொண்டிருந்தான் தூரத்தில்,
" கார்த்திக் !! ஹேய் கார்த்திக் நில்லுடா " !!
கையில் பூங்கொத்துடன் ஓடி வந்தாள் சரண்யா கார்த்திக்கிற்கு சந்தோசத்தின் உச்சம் அப்படியே பறப்பது போல் இருந்தது தன்னிடம் அவளும் காதலை சொல்லத்தான் வருகிறாள் என நினைத்து அத்தனை காதல் பாடல்களும் பின்னிசையாய்.ஓடிக்கொண்டிருக்க, அருகில் வந்தாள்
"கார்த்திக் ரொம்ப நாளா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நெனக்கிறேன் டா அய்யோ அத எப்டி சொல்ல !!! "
அட என்கிட்ட தான சும்மா சொல்லு என சந்தோசத்தில் மிதந்தான்.
"கார்த்திக் IT dept ல சந்தோஷ் தெரியும்ல ஒனக்கு,
ஆமா தெரியும் என்னாச்சு அவனுக்கு
இல்ல அவனும் நானு ஒன் இயரா லவ் பண்றோம்டா வீட்லயும் ஒத்துக்கிட்டாங்க காலேஜ் நெக்ஸ்ட் மந்த் முடியப்போதுல அப்பறம் கல்யாணம் தான் டா இந்த பொக்கே உனக்கு தான் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் நீ உன்ட்ட சொல்லனும்னு தான் ஓடி வந்தேன் சரி வரேன்டா,,,
என்று அவனுடைய இறந்த காதலுக்கு மலர் வளையம் வைத்து நகர்ந்தாள்.
கண்கள் குளமாக வாயைடைத்து கண்ணீர் மட்டுமே அவன் உணர்வுகளை எழுதிக்கொண்டிருந்தது. வீட்டிற்கு சென்றவன் கதறி அழுதான் ஒரு வாரம் கல்லூரிக்கு போகவே இல்லை. பின்னொரு நாள் சென்றான் தூரத்தில்,
"கார்த்திக், ஹேய் கார்த்திக் நில்லு !!! "
அதே பூங்கொத்துடன் வந்தாள் நிவேதா !!!!!!
நிவேதா கார்த்திக்கின் நெருக்கமான தோழி சரண்யா அவன் வாழ்வில் வருவதற்கு முன் வரை,
கார்த்திக் நினைத்தான் " அடச்சை நிவிய மறந்தே போய்ட்டேனே அப்டில்லாம் சரண்யாவ லவ் பண்ணிருக்கேன் மனுசனே இல்ல நான் " ,,,, என தனக்குள்ளே நினைத்தான்.
"கார்த்திக் வெல்கம் பேக் டா நான்லாம் உன் நியாபகத்துலயே இல்லேல,
ஏய் சீ அப்டிலாம் இல்ல நிவி
சரி சரி ஒரு வாரமா தேடுனேன் உன்ன ஆளக் காணோமே டா நேத்து தான் சிவா கிட்ட கேட்டேன் இன்னைக்கு நீ வரதா சொன்னான் இது உனக்கு தான்டா " ,,,,,, ஈவ்னிங் பார்க் வாடா வெளில போலாம்,
எதையும் யோசிக்காமல் சரி என்று நகர்ந்தான்.
வீட்டிற்க்கு சென்று புலம்பினான் ச்ச என்னோட காதல் என் ஃபிரண்ட்ஸ கூட மறச்சிடுச்சு அப்டி லவ் பண்ணிருக்கேன் அவள என அழுதான். மாலையில் நிவேதாவை சந்திக்க ஆயத்தமாகினான்.
பார்க்கிற்கு சென்றான் இவனுக்கு முன்னே நிவி காத்திருந்தாள்.
"ஹே கார்த்திக் வாடா ஏன் உம்முனு இருக்க சரி வா நடந்துட்டே பேசலாம், நேரா விசயத்துக்கு வரேன்
கார்த்திக் உன்ன நா மூணு வருசமா லவ் பண்றேன் டா இன்னைக்கு என்ன ஆனாலும் சரி அதான் உன்கிட்ட சொல்லிட்டேன் உள்ளயே வச்சு செத்துட்டு இருக்கேன் டா "
( கார்த்திக்கிற்கு அதிர்ச்சியும் கண்ணீருமாய் வார்த்தைகள் எதும் வரவில்லை )
" ஐ லவ் யூ கார்த்திக் !!! " எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லிடு டா ப்ளீஸ் என்றாள் நிவி,
அவன் இருந்த வேதனையில் அவளை இறுக்கமாய் கட்டிப்பிடித்து அழுதுவிட்டான்
"என்ன விட்டு போய்டாத டி நிவி லவ் யூ டி " என்றான் கார்த்திக்.
சந்தோசத்தில் நிவியும் இறுக்கமாய் பிடித்துக் கொண்டு அழுதாள் , " உன்ன விட்டு எங்கயும் போமாட்டேன்டா அழாத கார்த்திக் நா இருக்கேன் என்ன ஆச்சு உனக்கு அழாத டா ப்ளீஸ் " என்று மார்போடு அணைத்தாள் கார்த்திக்கின் அழுகை குறையவில்லை....
கார்த்திக்கின் நெற்றியில் முத்தமிட்டு ஒரு கணம் தாயாகவும் எத்தனித்து போனாள் நிவேதா
/// இந்த மாதிரி சொல்லப்படாத காதல் நெறைய இருக்கு இந்த உலகத்துல நெருக்கமான ஒருத்தர் நமக்கு இல்லைனு ஆய்ட்டாங்கனா அதவிட நெருக்கமா நம்மள அதிகமா விரும்புற ஒருத்தர் நாம வாழ்க்கைல வருவாங்கனு நம்புங்க, "காதல் வாழ்க்கையை அழகாக்கும் " ////
- அன்புடன் நந்தினி
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.