(Reading time: 6 - 11 minutes)

உனக்காக நான் - நந்தினி.S

ஜய்க்கு அழைப்பு வந்தது வீட்டில் இருந்து " டேய் ஆபிஸ் வீட்டு சீக்கிரம் வீட்டுக்கு வா ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம் வர்ர " என அம்மாவின் குரல் ஒலிக்க " ம்மாஆஆ சொல்றத ஹலோ ஹலோ " கட் ஆகி இருந்தது.

Unakkaga naan

அஜய் பேங்க்- இல் வேலை செய்யும் இளைஞன.

வேலை நேரம் முடிய வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சற்று தாமதமாகவே..!!

"ஏம்மா ஃபோன் பேசுனா என்ன ஏதுனு சொல்லமாட்டிங்களா? நான் என்ன சொல்ல வரேன்னும் கேக்குறதில்ல., என பொருமினான்.

ஆமா டா உனக்கு பொண்ணு பாக்க போறோம் சொன்னா வந்துருவியாக்கும் போய் கெளம்புடா என்றார் அஜய் அம்மா. " சொல்லவே இல்ல யாரு பொண்ணு எங்க போறோம்?? என அஜய் கேட்க  " டேய், சீதா பொண்ணு பாரதிய தெரியும்ல, ஆமாம்மா காலேஜ் படிக்கிறானு சொல்லிருக்காங்க ஒரு தடவ நீ வேலயா அங்க அனுப்புனப்போ கூட அங்க பாக்க முடியல அந்த பொண்ண சரி நீ சொல்ற பாக்கலாம்., என சொல்ல போதும் போதும் கெளம்பு டா என்றார்... 

கண்களில்  பளிச்சென மின்னியது அவனுக்கு 

மனதுக்குள்ளும் தான்...!! 

( அஜய் குடும்பத்தினர் பாரதியின் வீட்டில்) :

ழக்கமான எல்லா சம்பிரதாயங்களும் முடிய 

பாரதியை அழைத்தார் பாரதியின் அம்மா,

சிலையென வந்து  நின்றாள்...!!

அஜய் அவளை முழுதாய் மேலும்,கீழும் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

" ம்மா இந்த கல்யாணம் நடக்காது நான் வீட்டுக்கு போறேன்,என்ன எதும் கேக்காதீங்க  அவ்ளோதான்  படபடவென பேசிவிட்டு சட்டென கிளம்பினான் அங்கிருந்து!!! சுற்றியிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து விட்டு...

றுநாள் பாரதியின் கல்லூரிக்கு விரைந்தான்.வாசலிலேயே பார்த்து விட்டான் " பாரதி நான் உன் கிட்ட பேசனும் அந்தப் பக்கமா வா என்றான். ஹ்ம் வாங்க "  சொல்லுங்க அஜய்,

எனக்கு எல்லாம் தெரியும் பாரதி உண்மைய சொல்லு  " போன மாசம் 6 ம் தேதி நைட்டு 8 மணிக்கு அந்த பிரிட்ஜ்க்கு கீழ ஒருத்தன உன் துப்பட்டாவால கழுத்த நெரிச்சு கொன்னதயும் பாத்தேன், அவன இழுத்துட்டுப் போயி அந்த இரயில்வே ட்ராக்ல போட்டதயும் பாத்தேன் "  நீ எதுக்கு அவன கொன்ன உனக்கும் அவனுக்கும் என்ன எனக்கு தெரிஞ்சாகனும் இப்போ, என்றான் அஜய் " .

நேத்தே நான் உங்க கிட்ட சொல்லிருப்பேன் அஜய்,  என்று பேச ஆரம்பித்தவள் அவளிடம் வார்த்தைகள் மட்டுமல்ல கண்ணீரும் சேர்ந்தே பதில் பேசிக்கொண்டிருந்தது அஜயிடம்,

ஆமா அஜய் அவன நான் தான் கொன்னேன்!!!!  நானும் ரகுவும் காதலிச்சோம் எந்த பிரச்சனையும் இல்லாம போய்ட்ருந்த எங்க காதல்ல ரகுவே என்ன அனாதயா விட்டு போய்டுவாருன்னு நெனைக்கல,  ரகுவுக்கும் அந்த ராஸ்கல் திவாகர்க்கும் ஏற்கனவே பிரச்சன இருந்துருக்கு அடிக்கடி ரகுவ சீண்டிக்கிட்டே இருப்பான் வழக்கமா நாங்க மீட் பண்றது அந்த பிரிட்ஜ்க்கு கீழ தான்

அன்னைக்கும் அங்க தான் போய்ருந்தோம்  பேசிட்டு இருந்தோம் நாங்க எதிர்பாக்கல அங்க அவனும் அவன் ப்ரண்ட்ஸ் மூணு பேரும் வருவாங்கன்னு!!!! 

அப்ப திவாகர் எங்க கிட்ட வம்பிழுத்தான்  " என்ன ரகு சூப்பர் ஃபிகரா இருக்கு என்ன ரேட்டு உன்னோட டைம் முடிஞ்சதா நான் கொஞ்சம் ட்ரை பண்ணவா?? " னு கேக்க ரகு திவாகர அடிச்சுட்டாரு அப்பறம் அவன் ப்ரண்ட்ஸ் அடிக்க வர ரகு அடிச்சுட்டாரு அவனுங்கள. திவாகர் பக்கத்துல கிடந்த கம்பிய எடுத்து அவர அடிக்க வந்தான் ரகு அவன தடுத்து  அழுதுட்டு இருந்த என்கிட்ட " பாரதி நீ போய்டு  எனக்கு ஒன்னும் ஆகாது சீக்கிரம் வந்துருவேன், போ போன்னு சொல்றேன்லனு கத்த நான் அந்த இடத்த விட்டு ஓடி வந்துட்டேன்.

மறுநாள், நியூஸ்ல ரகு தண்டவாளத்துல அடிப்பட்டு இறந்ததா போட்டாங்க  ஒரு சொட்டு கண்ணீர் கூட விடல மொத்த கண்ணீரும் சேத்து வச்சேன் அந்த திவாகர பழிவாங்கிட்டு தான் அழனும்னு,

"ரகு மிஸ் யூ" என கதறினாள் இளகிய மனதுடன் அஜய் அவள் கரம் பற்றினான் அழாத பாரதி சொல்லு என்ன நடந்துச்சு,

போன மாசம் 6 ம் தேதி அதே பிரிட்ஜ்க்கு அடில நடந்து வந்துட்டே இருந்தேன் என்னோட ரகுவ நெனச்சுக்கிட்டு,  தூரத்துல ஒரு சத்தம் கேட்டுச்சு " ஓய் நில்லு அப்டின்னு ஆமா அது திவாகரே தான், என பாரதி சொல்ல

அஜய்,

" அப்ப தான் பாரதி கால் வந்துச்சுனு வண்டிய ஓரமா நிறுத்திட்டு பிரிட்ஜ் பக்கம் வந்தேன் வழக்கமா அந்த வழில ஆள் நடமாட்டமே இருக்காது ஒரு பொண்ணு மட்டும் நிக்கிறான்னு பாத்துட்டு நின்னுட்டேன் பாரதி அங்கயே"!!!

( "அழுதுகொண்டே மீண்டும் ஆரம்பித்தாள் பாரதி" )

அவன் மட்டும் தனியா வந்தது என்கிட்ட அவனா சிக்கிருக்கான்னு சந்தோசப்பட்டேன் !!!!!!

பக்கத்துல வந்த அவன் " ஓய் பொண்ணே அதான் அவன் போய்ட்டான்ல என்ன கவனிக்கிறது" னு கேட்டான் ஓஓஓஓ கவனிச்சுட்டா போச்சு அப்டின்னு அவன் கைய புடிச்சு அவன் எதிர்பாக்காத நேரத்துல பின்னாடி மடக்கி துப்பட்டாவால நெறிச்சு, "கடவுள் என் கூட இருக்கான் அஜய்,"  நான் நெறிச்சு அஞ்சாவது நிமிசத்துல அவன் செத்துட்டான்.

உடனே வேகமா இழுத்துட்டுப் போய் ட்ராக்ல போட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன் அஜய்,

மறுநாள் என் ரகுவுக்கு எப்படி நியூஸ் வந்துச்சோ அதே மாதிரி அவனும் செத்தான்னு,

அதுக்கப்றம் ரகுவ நெனச்சு அழாத நாள் இல்ல அஜய்,

பிரம்மை புடிச்ச மாதிரி இருந்தேன் அதுனால தான் வீட்டுல கம்ப்பல் பண்ணி இந்த நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்ணாங்க.

நீங்க தான் பாக்க வர்றீங்கனு கொஞ்சம் தெம்பா இருந்துச்சு அஜய் ஏன்னா உங்கள பத்தி அம்மா நெறையா சொல்லிருக்காங்க அதுனால தான்.

நேத்து நீங்க சரின்னு சொல்றதுக்கு முன்னாடியே உங்க கிட்ட தனியா பேசனும் னு கூப்புட வாய் எடுத்தேன் நீங்க நடக்காதுனு அங்க இருந்து போய்ட்டிங்க...,,

ஆமா ஏன் அஜய் என்ன பாத்தும் போலீஸ்ட்ட காட்டி குடுக்கல,

இல்ல பாரதி அன்னைக்கு உன்ன அங்க பாத்தப்ப நல்ல பொண்ணா தெரிஞ்ச நான் எதிர்பாக்கல அடுத்து அப்டி பண்ணுவேன்னு, ஒரு பொண்ணு ஏன் இப்டி பண்ணனும் கண்டிப்பா இதுக்கு பின்னாடி எதோ இருக்குனு அங்க இருந்து வந்துட்டேன் உன்ன பாக்கனும்னு நெனச்சேன் ஆனா உன்ன பத்தி எந்த டீடெய்லும் இல்ல என்ட்ட அப்பறம் அப்டியே விட்டுட்டேன்.

ஆனா நீ தான் சீதா ஆன்ட்டி பொண்ணா இருப்பனும் நெனைக்கல உன்ன தான் நிச்சயம் பண்ணப் போறாங்கனும் நெனைக்கல

"அவன் சாக வேண்டியவன் தான் பாரதி" நீ பண்ணது சரிதான்,

நீ இருக்குற நெலமைல இப்ப கல்யாணம் லாம் சரியா வராது ஆனா உங்க வீட்டுல இப்ப இல்லாட்டியும் திருப்பி மாப்ள பாப்பாங்க,

நீ உண்மையா இருக்க பாரதி என்னைக்குனாலும் நீ மட்டும் தான் என்னோட மனைவி.

இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் உனக்குனு ஒரு துணை இருந்தா நல்லாருக்கும்னு தோணும் பாரதி,  " அன்னைக்கு திரும்பிப்பார் இந்த அஜய் இருப்பான் உனக்காக"  வீட்ல எதாவது சொல்லி சமாளிச்சுடுவேன் உன் வீட்டுலயும் தான் சரி நான் கெளம்புறேன். 

" சரி அஜய் ரொம்ப தாங்க்ஸ் ப்பா  "  என புன்முறுவலுடன் நகர்ந்தார்கள்.

தூரத்தில் சென்று திரும்பி அஜய் கூப்பிட்டான், "ஹேய் பாரதி, ம் சொல்லுங்க அஜய்  

பெயருக்கு ஏத்த மாதிரி நீ ரொம்ப தைரியமான பொண்ணு தான் நீ " !!!!!!!!!  

சிறு புன்னகையை உதிர்த்தால் பாரதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.