(Reading time: 13 - 25 minutes)

 

ன்றிரவு,

" அருள்  "

" ம்ம்ம்ம்"

" நாம மும்பை போறோம் "

" போய்ட்டு வாங்க "

" நான் உன்னையும் தான் கூப்பிட்டேன் "

" நான் என் அம்மாவை விட்டுட்டு வர முடியாது "

" நான்தான் உன் அம்மா "

" அது இப்போதான் உங்களுக்கு ஞாபகம் வந்திச்சா? " என்று கர்ஜித்தான் அருள்மொழிவர்மன்....

" ஓஹோ .... காசுக்காக உடம்பை வித்து போலைக்குற அவதான் உன் அம்மாவா ? " என்று வார்த்தைகளை துப்பினாள் ருத்ரா....

( ஆம், ஸ்வாகினி ஒரு விலைமாது .... சமுதாயத்தின்  பார்வையில் அவள் தீண்டத்தகாதவள் ...ஆனால் அவனுக்கு அவள் பெற்றெடுக்காத தாய் .... உடலை வேட்டையாட வந்த ஆண்களின் மத்தியில் அவளின் தாய்மைக்கு உரிமை தந்த மகன் அருள்)

அவளின் வார்த்தையில் கொதித்தவன்,

" ஏன் பணத்துக்காக பெத்த புள்ள என்னை நீங்க விக்கலையா ? " என்று கேள்வி எழுப்பினான்.

"  அருள்.... என்ன பேசுறோம்னு புரிஞ்சு பேசு .... "

" போதும் நீங்க பேசினது,... யாருக்கு வேணும் உங்க அன்பு ? பணம் பணம் பணம் .... பிசினஸ் இதுதானே உங்க வாழ்கை ... சின்ன வயசுல எனக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை அன்பு கிடைக்காம எத்தனை நாள் நான் ஏங்கி அழுதுருப்பேன் ? இன்னைய வரைக்கும் எனக்கு எப்போ காய்ச்சல் ? எப்போ நான் நல்ல இருக்கேன் ? ஏதாச்சும் உங்களுக்கு தெரியுமா ? எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சது ஸ்வாகினி அம்மாதான்... உங்க  பார்வைக்கு அவங்க தப்பா தெரியலாம்... ஆனா எனக்கு அவங்கதான் அம்மா " என்றவன் வேகமாய் அவர்கள் இருந்த அறையில் கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியே சென்றான்.

அவனின் வார்த்தைகளில் விக்கித்து போனாள் ருத்ரா ,.. அதே நேரம் அருளை ஸ்வாகினியிடம் இருந்து பிரித்தே தீருவேன் என்று சூளுரைத்து கொண்டாள்...

ரண்டு வாரங்களுக்கு பிறகு, ருத்ராவிற்கு அருளின் காலேஜிலிருந்து  போன் வந்தது. கெமிகல் லேபில் ஏதோ ரசாயனம்  எதிர்பாராத விதமாய் வெடிக்க, அது அருளின் கண்களில் பட்டு அவன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டான்...

மருத்துவமனை,

" டாக்டர் ? "

" ஐ எம் சாரி ருத்ரா மேடம் .... உங்க மகன் அவரின் பார்வைய இழந்துடாரு "

" ஐயோ டாக்டர் ..... ப்ளீஸ் அப்படி எதுவும் சொல்லாதிங்க டாக்டர் .,.. எவ்வளவு  செலவு  ஆனாலும் பரவாயில்லை ... அருளுக்கு பார்வை வரணும் ... "

" கவலை படாதிங்க மேடம்.... சர்ஜரி மூலமா வேற கண்ணை பொருத்தினா நிச்சயம் அருளுக்கு பார்வை வர வாய்ப்பு இருக்கு "

இந்த விஷயம் எப்படியோ அறிந்து  கொண்டு ஸ்வாகினி மருத்துவமனைக்கு வந்தாள். ருத்ராவின் ஏற்பாட்டில் அருளுக்கு அறுவை சிகிச்சை நடந்தும் முடிந்தது .... சில நாட்களில் குணமாகி மீண்டும் பார்வை பெற்று  வீடு திரும்பினான் அருள். அவன் குணமாகும் காலங்களில் அவனை நன்றாக கவனித்து கொண்டாள் ருத்ரா .. ஆனால் அருளின் மனம் மட்டும் அமைதி இல்லாமல் தவித்தது ...அவனின் மனம் ஸ்வாகினியை நினைத்து மருகியது ...

" அம்மா  ஏன் என்னை பார்க்க வரல ? " என்று பல தடவை மனதிற்குள் கேட்டு கொண்டான்.

 நாட்கள் நகர்ந்தன...ஒரு நாள் ...

" அருள் .... எங்க போற? "

" அம்மாவை பார்க்க "

" என்ன அருள் இது ...இன்னும் எத்தனை நாள் எனகிந்த தண்டனை .... எப்பவும் உனக்கு அவதான் பெருசா ? "

" கண்டிப்பா இதில் என்ன சந்தேகம் ? "

" சும்மா பணம் பணம் நு இருக்கேன்னு சொன்னியே .,.. அந்த பணம் இல்லன்னா உனக்கு இவ்வளவு சீக்கிரம் பார்வை  கிடைச்சிருக்குமா ? "

அவளுக்கு அவன் பதில் சொல்வதற்குள், அங்கு வந்தார் சண்முகம்....

கண்ணீருடன் " சின்னய்யா இந்த லெட்டர் ஸ்வாகினி அம்மா உங்க கிட்ட தர சொன்னங்க " என்று லெட்டரை நீட்டினார் ...

" ஓஹோ இது வேறயா ? எத்தனை நாளா இது நடக்குது சண்முகம் ? " என்று கேள்வியுடன் லெட்டரை பிடுங்கியவள் அவரை முறைக்க ... அவரோ கலங்கிய விழிகளுடன் நின்றிருந்தார் ... அவரின் முகத்தில் ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தவன் லெட்டரை கேட்டு ருத்ராவிடம் கை நீட்ட " இரு நானே படிக்கிறேன் " என்றாள் ருத்ரா .

கண்ணா,

உனக்கு என்னாச்சுடா ? ரொம்ப வலிக்குதாப்பா? உன்னை ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ணிருக்குறதா சொன்னாங்க கண்ணா ... ஆனா நான் அங்க வந்தா உன்னை பார்க்க விட மாட்டாங்கன்னு எனக்கு தெரியும்.

ஆனா அது அவங்க தப்பு இல்லப்பா .. எல்லாம் விதி .. என் தலைவிதி .. உன்னை பத்தி டாக்டர் கிட்ட கேட்டேன் .. உனக்கு கண் ஆபரேஷன் பண்ணனும் கண்ணு தேடுறாங்கலாம்...

நான் இருக்கும்போது அவங்க ஏன்டா வேற கண்ணை தேடனும் .. அதான் என் கண்ணு உன்னை சேருரதுக்கு எல்லா  ஏற்பாடும் பண்ணிட்டேன் .. நீ கண்விழிக்கும்போது உன் அம்மா நான் நிம்மதியா கண் மூடி இருப்பேன் .. இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம் டா....

இந்த உலகமே என்னை விபச்சாரின்னு கூப்பிடும்போது நீ மட்டும்தான் என்னை அம்மான்னு கூப்பிட்ட ...இதுக்கு என்ன கைம்மாறு செய்வேன் ? அதுக்குதான் ஆண்டவன் இப்படி ஒரு சூழ்நிலை தந்தான் போல...என்னை நினைச்சு நீ அழ கூடாது ...இவ்வளவு நாள் நீ என் கண்ணுக்குள்ளயே இருந்த...  இப்போ நான் உன் கண்ணாகவே இருக்கேன் . அவ்வளோதான் .

என்னை மாதிரி பொண்ணுங்களைலாம் இந்த சமுதாயம் கேவலமா பார்க்குது . ஆனா யாருப்பா இந்த தொழிலை விரும்பி செய்றாங்க ? ஒவ்வொரு விலைமாதுவுக்கு பின்னாடியும் ஒரு சாதாரண வாழ்கை கற்பனையா இருந்திருக்கும் .. எந்த பெண்ணுமே படிக்கும்போது " நீ என்ன ஆகப்போறன்னு ? " கேட்டா, நான் இந்த தொழில் செய்ய போறேன்னு சொல்லாது .. அது எத்தனை பேருக்கு உரைக்கிறது ?

நானும் ரொம்பே செல்வாக்கோடு பிறந்து வளர்ந்த பொண்ணு .. எப்போ என் அம்மா அப்பா  கண்ணை மூடினாங்களோ, அன்னைக்கே என் விஷயத்துல ஆண்டவனும் கண் மூடிட்டான்... என் தாய்மாமன் , என் சொத்தை எல்லாம் பறிச்சு, என்னை கண்டவன் கிட்ட வித்து, பல மிருகளோட பசிக்கு நான் இரையாகி என் வாழ்கையே போச்சு... என் வாழ்கையில ஒரே ஒரு சந்தோசம் நீதான்...

உன்னை பெத்தவங்க, இந்த ஊரு எல்லாரும் எதிர்த்து பேசியும் நீ என் மேல வெச்ச அன்பு நிஜம் ... கண்ணுக்கு தெரியாத கூட்டம் என்னை சுத்திகிட்டு இருக்கு .. நான் உன் அம்மாவா  இருக்க கூடாதுன்னு எத்தனை நாலு என்னை விலைக்கு வாங்கினவன், என்னை போட்டு அடிச்சான் தெரியுமா ? ஒவ்வொரு விலைமாது பின்னாடியும் அவளின் ரத்தத்தை எடுத்து காசு பார்குறவன் இருக்கான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.